Wednesday, April 5, 2023

 இன்றைய சமுகம் இப்படித்தான்  செயல்படுகிறது


   

@avargal unmaigal


ஒருவர் ஒரு பிரச்சனையைப் பற்றிப் பதிவு செய்து விமர்சிக்கிறார் என்றால் அதை படிப்பவர்கள் அல்லது கேட்பவர்கள். அந்த  பிரச்சனையின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அதற்குப் பதில் விமர்சனம் செய்வதுதான் கொஞ்சமாவது அறிவுள்ளவர்கள் செய்யும் செயல்.

ஆனால் இன்றைய மக்கள் நன்றாக படித்து இருந்தாலும் ,அவர்களுக்கு இப்படி ஆராய்ந்து, சிந்தித்து பதில் சொல்லும் இயல்பு கொஞ்சம் கூட இல்லாமல்தான் இருக்கிறது.

ஒருவர் ஒரு நிகழ்வை ,அதில் உள்ள பிரச்சனைகளைப் பேசும் போது ,இன்றைய மக்கள்  அதில் உள்ள உண்மையைக் கொஞ்சம் கூட உள் வாங்கிக் கொள்ளாமல்,  அந்த பிரச்சனை ,அவரின் தலைவரையோ , சாதி,  மத அல்லது இனத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது என்றால் உடனே அதற்கு எதிராக கண்ணை முடிக் கொண்டு பேசுகிறார்கள், அந்த நிகழ்வு  அல்லது பிரச்சனையில் உண்மைகள் இருந்தாலும் அதை மடை மாற்றிச் சொல்லுகிறார்கள்.


அப்படி இல்லையென்றால் நீ இந்த  பிரச்சனையைப் பற்றி  மட்டும் பேசுகிறாய் நீ அந்த பிரச்சனையைப் பற்றிப் பேசுவதே இல்லை என்று வேறு ஒரு பிரச்சனையைச் சொல்லிப் பேசும் பொருளாக இருக்கும் பிரச்சனையை மடை மாற்றம் செய்கிறார்கள்


அப்படி இல்லையென்றால் அந்த பிரச்சனையைப் பற்றிப் பேசுபவன் எந்த ஜாதிக்காரன் மதக்காரன். கட்சிக்காரன் அல்லது இனத்துக்காரன் என்று முத்திரை குத்திப் பேசும் பிரச்சனைகளின் உண்மைத்தன்மையை மடை மாற்றம் செய்கிறார்கள்


இப்படி ஒரு முட்டாள்தனமான சமுகமாகத்தான் இன்றைய சமுகம் மாறிக் கொண்டு இருக்கிறது. அதன் காரணமாக இன்றைய சமுகம் உன்மையி ஒரு ஆரோக்கியமற்ற சமுகமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை


அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. சக் மனிதனை மனிதனாகப் பார்க்க வேண்டும்... அதை விட சிறப்பு எதுவுமே இல்லை...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.