பீதி கலந்த முகத்துடனும், நடுங்கும் குரலுடனும் கரப்பான் பூச்சியை விரட்ட தன் இரு கைகளாலும் தீவிரமாக முயன்று குதிக்க ஆரம்பித்தாள்.
அவள் கூட வந்த பெண்கள் அனைவரும் பீதியடைந்ததால், அவளது எதிர்வினை அவர்களுக்கும் தொற்றியது.
கடைசியில் அந்தப் பெண் கரப்பான் பூச்சியைத் தள்ளிவிட்டார் , ஆனால் அது அவரது தோழிகளிலிருந்த இன்னொரு பெண்ணின் மீது விழுந்தது.
அவ்வளவுதான் இப்போது, அந்த பெண்ணோ முதல் பெண்ணைப் போல நாடகத்தைத் தொடர மீண்டும் குழுவிலிருந்த மற்ற பெண்மணியின் மேலே வந்து விழுந்தது
இதைப்பார்த்த அந்த ஹோட்டலில் பணியாற்றும் சர்வர் ஒருவர் அவர்களுக்கு உதவ முன்னோக்கி விரைந்தார்.
இப்போது அந்த கரப்பான் பூச்சி அடுத்ததாக பணியாளர் மீது விழுந்தது. ஆனால் அந்த சர்வர் அந்த பெண்களைப் போலக் குதித்துக் கத்தாமல் சர்வர் அமைதியாக நின்று, தன்னை சமாளித்துக்கொண்டு தன் சட்டையிலிருந்த கரப்பான் பூச்சியின் நடத்தையைக் கவனித்து.
இப்படி ஒரு நிகழ்வைப் பார்த்தால் நம் மனதில் எழும் எண்ணங்கள் நம்மை வியக்கத்தான் வைக்கும்.
கரப்பான் பூச்சியின் நடத்தைதான் அந்த பெண்கள் மிரளக்காரணமா?.அப்படியானால், அது சர்வரை ஏன் தொந்தரவு செய்யவில்லை?
சரவர் எப்படி எந்த வித குழப்பமும் இல்லாமல், அதை மிக அருகாமையில் கையாண்டார்.
அப்படியானால் பிரச்சனைகளுக்குக் காரணம் கரப்பான் பூச்சியல்ல, கரப்பான் பூச்சியினால் ஏற்படும் தொந்தரவை அந்த பெண்களால் சமாளிக்க முடியாமல் போனதுதான் அந்த பெண்களை அப்படி பீதியடைய வைத்தது இருக்கிறது என்பதுதானே சரியாக இருக்கும்.
இப்படிதான் நம் பெற்றோர்களோ நமது மேலாளர்களா, மனைவியோ நம்மை நோக்கிக் கத்தும் போது அது நம் மனதைக் கலங்க வைப்பதில்லை. மாறாக அவர்கள் கத்துவதற்குக் காரணமான பிரச்சனைகளை ,இடையூறுகளை நம்மால் சமாளிக்க முடியாமல் தான் நம் மனதைக் கலங்க வைக்கிறது என்பதை உணர முடிகிறது.
அது போல நம்மைத் தொந்தரவு செய்வது சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் அல்ல, ஆனால் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் இடையூறுகளைக் கையாள முடியாத நமது இயலாமைதான் நம்மைத் தொந்தரவு செய்கிறது.
பிரச்சனையை விட, பிரச்சனைக்கான நமது எதிர்வினை தான் நம் வாழ்க்கையில் குழப்பத்தை உருவாக்குகிறது.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்:
வாழ்க்கையில் நாம் எதிர்வினையாற்றக்கூடாது என்பதுதான்.
கரப்பான பூச்சி விஷயத்தில் பெண்கள் எதிர்வினையாற்றுவது போல ரெஸ்பான்ஸ் செய்தனர் எதிர்வினைகள் எப்போதும் உள்ளுணர்வாக இருக்கும், அவர்களின் உள்ளுணர்வு பயத்தை வெளிப்படுத்தி அதை மேலும் பலருக்குக் கொண்டு சென்று சிக்கலைத்தான் உருவாக்கியது.
ஆனால் அந்த சர்வரின் வினையோ அமைதியாகச் சிந்தித்துச் செயல்பட்டதால் அந்த பிரச்சனையை எளிதாகக் கையாண்டு தூக்கி எறிந்துவிட்டு தன் வேலையைப் பார்க்கச் சென்றார்
வாழ்க்கை.
ஒரு நபர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்றால் அவர் வாழ்க்கையில் எல்லாம் சரியாக இருப்பதால் அல்ல.
அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார், ஏனென்றால் அவரது வாழ்க்கையில் எல்லாவற்றிலும் அவரது அணுகுமுறை சரியாக உள்ளது!
சென்னைக்காரன் எல்லாம் தெரிந்தவன் ஆனாலும் ?
Why is it named the cockroach theory?
Warren Buffett first said, “There’s never just one cockroach in the kitchen.” Later, a popular newsletter written by Dennis Gartman ran with it in America. This theory highlights the lack of transparency in business. If one secret gets exposed, more hidden issues could likely surface at any time.
இன்றைய சமுகம் இப்படித்தான் செயல்படுகிறது
உங்களுக்கான மதிப்பைத் தீர்மானிப்பது ஏது?
அன்புடன்
மதுரைத்தமிழன்
நல்ல பதிவு.
ReplyDeleteபிரச்சனைகளை அணுகும் முறை சரியாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம், அதுதான் வாழ்க்கை.
ஒப்பீடு அருமை...
ReplyDelete