Sunday, April 23, 2023

 உங்கள் பங்கைச் செய்யுங்கள் உலகம் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளும்

 

@avarfal unmaigal




ஒரு நாள் காட்டில் ஒரு  தீ வேகமாகக் காடு முழுவதும் பரவத் தொடங்கியது. அது மிகவும் பயங்கரமான நெருப்பாக இருந்ததால்,  அங்கு வசித்த எல்லா விலங்குகளும் எல்லா திசைகளிலும் பயந்து ஓடின. அப்படி ஓடுகையில் திடீரென்று, ஜாகுவார் தனது தலைக்கு மேல் ஒரு ஹம்மிங்பேர்ட் கடந்து செல்வதைக் கண்டது, ஆனால் எதிர்த் திசையில். ஹம்மிங் பறவை நெருப்பை நோக்கிப் பறந்தது சென்றது மீண்டும் அந்த பறவை திரும்பி வந்து மறுபடியும் திரும்ப தீ இருக்கும் திசையை நோக்கிப் பறந்து சென்றது ஈபடி பல தடவை அந்த பறவை பறந்து சென்றது அது அந்த ஜாகுவார் மிகவும் வினோதமான நடத்தையாகத் தோன்றியதால், அதைப் பற்றி பறவையிடம் கேட்க முடிவு செய்து  "நீ என்ன செய்கிறாய், ஹம்மிங்பேர்ட்?" என்று கேட்டது

அதற்கு அந்த ஹம்மிங்பேர்ட் நான்  அருகில் உள்ள ஏரிக்குச் சென்று அங்குள்ள நீரை  என் கொக்கினால் குடித்து அதைக்  கொண்டு  தீயை அணைக்க நெருப்பில் வீசுகிறேன் என்றது


அதைக் கேட்ட ஜாகுவார் பலமாகச் சிரித்தது. "உனக்கு  என்ன பைத்தியமா? அந்த பெரிய நெருப்பை  உன்னுடைய மிகச் சிறிய கொக்கின் மூலம் நீரை எடுத்து அணைக்க முடியுமா என்ன  என்று  கேட்டது

அதற்கு அந்த ஹம்மிங்பேர்ட் 'இல்லை,', 'என்னால் முடியாது என்று எனக்கு நன்கு  தெரியும். ஆனால் காடுதான் என் வீடு. அது எனக்கு உணவளிக்கிறது, என்னையும் என் குடும்பத்தையும் அடைக்கலம் தருகிறது. அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்

 மேலும் காடுகளின் பூக்களுக்கு  மகரந்தச் சேர்க்கை செய்து வளர உதவுகிறேன். நான் அது  ஒரு பகுதி, காடு என்னில் ஒரு பகுதி. தீயை அணைக்க முடியாது என்று எனக்குத் தெரியும்,  ஆனால் நான் என் பங்கைச் செய்ய வேண்டும். என் பங்கைச் செய்ய முயற்சி செய்தும் அது முடியாமல் போனாலும் பரவாயில்லை ஆனால் முயற்சி செய்யாமல் இருப்பதுதான் தவறு என்றது

அந்த நேரத்தில், ஹம்மிங்பேர்டின் சத்தத்தைக் கேட்ட வனத்திலிருந்த  ஆவிகள், பறவை மற்றும் காட்டின் மீதான அதன் பக்தியைக் கண்டு நெகிழ்ந்தன. மேலும் அதிசயமாக அந்த வன ஆவிகள் ஒரு பெரு மழையை அனுப்பி அந்த  பெரும் தீக்கு முற்றுப்புள்ளி வைத்தது.


இந்த கதையைப் பூர்வீக அமெரிக்கப்  ( Native American) பாட்டிகள் எப்போதாவது தங்கள் பேரக்குழந்தைகளுக்கு  சொல்லி, "உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களை ஈர்க்க விரும்புகிறீர்களா? உங்கள் பங்கைச் செய்யுங்கள்" என்று முடிப்பார்கள்


இது ஒரு அற்புதமான கதையாகத்தான் தோன்றுகிறது இது நமக்குச் சொல்லித் தரும் பாடம் என்பது இன்றைய கால கட்டத்தில் முக்கியமானது

 நமக்கு இந்த "உலகைக் காப்பாற்றவோ அல்லது எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணவோ முடியாது அதற்கு உங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை , ஆனாலும் இந்த பிரபஞ்சத்தின் ஒரு   மூலையில் நின்று கொண்டு நம்மால் முடியும் அளவிற்கு அதைத் தீர்க்க ஏதாவது முயற்சிகள் செய்ய வேண்டும்  இப்படி உலகத்தில் வாழும் ஒவ்வொருவரும் நினைத்தால் நிச்சயம் உலகம் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளும்


நன்றாக ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் இது உலகப் பிரச்சனைகளைத் தீர்க்க மட்டுமல்ல நாம் வாழும் நாட்டில்  நாம் எதிர் கொள்ளும் பல பிரச்சனைகளை இதை மாதிரிதான் கை கொள்ள வேண்டும் நம்மால் என்ன செய்ய முடியும் என்று ஒவ்வொருத்தரும் சும்மா இருந்து விடக் கூடாது.

இந்தியாவை ஆளும் எந்த அரசாக இருக்கட்டும் அது பாஜக அரசாகவோ அல்லது காங்கிரஸ் அரசாகவோ அது போலத் தமிழகத்தில் திமுக அரசோ அல்லது. அதிமுக அரசோ மக்களுக்கு எதிராக எந்த ஒரு திட்டத்தைக் கொண்டு வரும் போது அந்த அரசின் அதிகாரத்தை எதிர்த்து நம்மால் என்ன செய்ய முடியும் என்று இருந்துவிடக் கூடாது அதற்கு எதிராக நம்மால் முடிந்ததைச் செய்து எதிர்த்து அதை மாற்ற முயற்சிக்க வேண்டும் இப்படி எல்லோரும் செய்தால் நிச்சயம் மாற்ற முடியும்

அதைவிட்டுவிட்டு இந்த அரசு மோசம் அந்த அரசு மோசம் நாடு நாசமாகப் போகிறது என்று ஒரு மூலையில் நின்று ஆராற்றிக் கொண்டு இருக்கக் கூடாது இது நாட்டிற்கும் மட்டுமல்ல நம் வீட்டிற்கும் இது பொருந்தும்

அன்புடன்
மதுரைத்தமிழன்



1 comments:

  1. அருமை...

    சிறுதுளி பெருவெள்ளம் - சேமிப்பில் மட்டுமல்ல...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.