Tuesday, January 11, 2022

 

@avargal unmaigal

கொரோனாவிற்கு தடுப்பூசி போட்டாலும் கொரோனா வருதே  என்ன செய்யலாம்??போடலாமா வேண்டாமா? ஊரடங்கு அவசியமா இல்லையா?




நாட்டில் நிறையப் புத்திசாலி இருக்கிறார்கள் அவர்களின் இன்றைய கேள்வி கொரோனாவிற்கு தடுப்பூசி போட்டாலும் கொரோனா வருதே கொரோனா வராமல் தடுத்தால்தான் தடுப்பூசி அப்படி இல்லாமல் போட்டாலும் வரும் என்றால் பரவும் என்றால் அது தடுப்பூசி என்று சொல்லக் கூடாது என்று சொல்லுகிறார்கள். அப்படிச் சொல்லுபவர்கள் யார் என்று பார்த்தால் ஆண்டாண்டு காலமாக நீரிழிவு நோய்க்கு சுகர் மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள்தான், ஊசி போட்டுக் கொள்பவர்கள்தான், அப்படி அவர்கள் எடுத்துக் கொள்வதால் நோய் என்ன சுத்தமாக போயே போய்விட்டதா என்ன? அல்லது யாரும் நீரிழிவு நோயால் சாகாமல் இருக்கிறார்களா என்ன? ஆனால் அப்படி எடுப்பதால் பாதிப்பு குறைகிறது என்றுதானே உலகமுழுவதும் மக்கள் அதை எடுத்து கொள்கிறார்கள் . மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள் . அது போலத்தான், கொரோனா தடுப்பூசியும் .மக்களே  அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் .புரிந்து கொண்டவர்கள் தடுப்பூசி போட்டு, உங்கள் குடும்பத்தினரை அனாதையாக ஆக்காமல் காப்பாற்றுங்கள்,

ஊரடங்கு அவசியமா இல்லையா என்றால் என் பதில் அவசியம் இல்லை என்பதுதான். ஊரடங்கினால் கொரோனாவை தடுக்க முடியாது. மக்களின் சுயக் கட்டுப்பாட்டின் மூலம்தான் ,அதைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதற்கு முககவசம் அணிவது அவசியம் .அதுவும் முக்கையும், வாயையும் நன்றாக மூடுவது அவசியம் .அதை அடிக்கடி தொடாமல் இருப்பதும் முக்கியம். முடிந்தால் தினம் ஒன்றை மாற்றவும். துணியினால் செய்த மாஸ்க்கால் பயனில்லை. அடுத்தாக சமுக இடைவெளிவிட்டு நிற்பது அவசியம் . முடிந்த வரையில் சத்துள்ள உணவை உண்ணுங்கள்  .இதை செய்தாலே போதுமானது.



அரசு ஊரடங்கு போடுவதற்குப் பதிலாக, எல்லா நிறுவனங்களையும், ஒரே நேரத்தில் திறப்பதற்குப் பதிலாக மாற்று நேரங்களில் திறக்க அனுமதிக்கலாம் .அதுமட்டுமல்ல ,குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் நிறுவனங்கள் அனைத்தையும் ,ஒரே நாளில் திறப்பதற்குப் பதில் அல்டர்னேட் நாளில் அதாவது மாற்று நாளில் திறக்கலாம் .அதன் மூலம் அந்த பகுதிகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கலாம். அது போலக் கடைகளின் நேரங்களை அதிகரிக்கலாம் . ஒரு கடையில் 200 பேர் ஷாப்பிங்க் செய்யலாம் என்றால் 100 பேரை மட்டும்  அனுமதிக்க வேண்டும். அதில் ஒருவர் வெளியே போகும் போது மற்றொருவரை அனுமதிக்கலாம். இதனால் தொற்று  ஏற்படுவதை மிகக் குறைக்கலாம்  . வேலை பார்ப்பவர்களில் பாதிப் பேரை முதல் ஷிப்ட்லும் மீதி பாதியை இரண்டாவது ஷிப்டிலும் வேலை செய்ய வைக்கலாம் அதனால் எல்லோரும் வேலைக்குச் சென்று வருமானத்திற்கு வழி வகுக்க இயலும் ) அதுமட்டுமல்லா கடைக்கு வருபவர்களை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டும் ஒறு நேரத்தில் அனுமதி அளிக்க வேண்டும் அதனால் கூட்டம் கூடுவது தவிர்க்க முடியும் . அதுமட்டுமல்லாமல் திறந்து இருக்கும் கடைகளில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் மக்கள் கூடுவதைத் தவிர்க்கக் கட்டாய சட்டம் கொண்டு வரலாம்  அதைக் கண்காணித்து நடை முறைப் படுத்த வேண்டும்.


இப்படிப் பல மாற்று வழிகளை அறிந்து செயல்படுத்த வேண்டும் .அதைவிட்டுவிட்டு ஊரடங்கு போடுவதால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். பல ஏழை நடுத்தர வர்க்க மக்களுக்குத் தினம் வேலை செய்தால்தான் வருமானம் .அதைத் தடுத்துவிட்டால் அவர்களின் வாழ்வு கேள்விக் குறியாகும். அப்படி இழப்பு ஏற்படும் மக்களுக்கு அரசு பண உதவி செய்ய வேண்டும், ஆனால் அப்படிச் செய்ய அரசிடம் நிதி நிலமை சரியாக இருக்க வேண்டும் ,அப்படி ஒரு நிலை தமிழகத்தில் இல்லை என்பதுதான் நிஜம்.



(நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் அது எல்லாம் அரசு அதிகாரிகளுக்கு தெரிகிறதோ இல்லையோ எங்களை போல வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு நன்றாக தெரிகிறது.  அது எப்படி என்றால் எங்களது இன்பாக்ஸ் பக்கம் போனாலே பலர் தங்களின் சோக கதைகளை சொல்லி உதவி கேட்டு வருகிறார்கள் .அப்படி கேட்ட பலருக்கு நானே சத்தம் போடாமல் உதவி வந்து இருக்கின்றேன்..  எவ்வளவுதான் சாதாரண வேலையில் இருக்கும் என்னால் உதவ முடியும்.. மேலும்  என்னிடம் பணம் காய்க்கும் மரம் இல்லை என்பதால் இப்போது கேட்பவர்களுக்கு இல்லை என்று மட்டுந்தான்  மிகவும் கனத்த மனதுடன் சொல்ல முடிகிறது,)


அதைவிட்டுவிட்டு மேல்தட்டு மக்களின் கருத்தைக் கேட்டுவிட்டு ஊரடங்கு போடுவதெல்லாம் சரியில்லை. அரசு மாற்று யோசனைகளை பொதும்க்களிடம் இருந்து பெற்று அதற்கேற்ப நடத்த வேண்டும் .உயர் அரசு அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு அரசை நடத்துவது தவறு ,உயர் அதிகாரிகளுக்கு ஏழை மற்றும் நடுததர் மக்களின்  அன்றாட உண்மையான பிரச்சனை தெரியாது .அவர்கள் சமுக இணையதளங்களில் பேசப்படும் கருத்துகளை வைத்தும் ,அவர்களுக்குக் கீழ் உள்ள  அதிகாரிகள் தரும் தகவல்களை வைத்துத்தான் முடிவு எடுப்பார்கள், அவர்களுக்கு வரும் தரவு மிக சரியாக இருப்பதில்லை .அதனால் முடிவுகள் பல நல்ல பலனைத் தருவதில்லை என்பதை அரசு கருத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments:

  1. கொரோனா தடுப்பூசிக்கு எதிராக இப்படி இனியவர்கள் மட்டும் சொல்றாங்கன்னு சொல்றீங்களே மதுரை!!! அல்லாதவங்கதான் ஜாஸ்தி சொல்றதா எனக்குத் தோணுது இங்கு.

    நீங்கள் சொல்லியிருக்கும் பாயின்ட்ஸ் அத்தனையும் வழி மொழிகிறேன். பூஸ்டர் முக்கியம். ஆனா எத்தனை பூஸ்டர் வேக்ஸினேஷன் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. அது போல மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஆல்டர்னேட்டிவ் சஜஷன்ஸ் டிட்டோ. ஆனால் அதை பின்பற்ற வேண்டுமே. மக்கள் தொகை அதிகம் இங்கு கொஞ்சம் மெனக்கெட்டால் சரியாகப் ப்ளான் செய்யலாம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எத்தனை பூஸ்டர் போடுவது என்ற கேள்விக்கு என் பதில் இந்த தடுப்பூசி நோய் வந்தாலும் அதனால் அதிகம் உடலுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே போடப்படுகிறது அதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் குறையும் போது அதை பூஸ்ட் செய்து கொள்ள போடவேண்டும். நல்லா கவனிங்க தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா வருகிறது ஆனால் அதனால் பாதிப்புக்கள் அதிகம் ஏதுமில்லை

      Delete
  2. கடைசில கொரோனாவுக்கு உப்புமா கொடுத்தா போயிடும்ன்றீங்க ஹாஹாஹாஹா மதுரை சகோ இதை வாசித்து யாராவது (எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்னு நினைக்கிறவங்க!!!) அட இப்படி ஒரு எளிதான மருந்தான்னு நினைச்சு உப்புமாவா செய்து சாப்பிட்டு, கொடுத்துடவும் போறாங்க!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தப்பா புரிஞ்சுகீட்டீங்கனு நினைக்கிறேன் அல்லது நான் சரியாக விளக்கமாக சொல்லவில்லையோ தெரியவில்லை

      கொரோனாவை தடுப்பூசி மூலம் தடுப்பது மாதிரிதான் வீட்டிற்கு வரும் வேண்டாத நண்பர்கள் உறவினர்களுக்கு உப்புமா தொடரந்து செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் ஸ்டேயை தடுக்கலாம் என்றுதான் சொல்ல முயற்சித்தேன்

      Delete
  3. ஹையோ இதென்ன நான் கொடுத்த முதல் கருத்து இங்கு வந்துச்சே...அப்புறம் காணாமல் போயிடுச்சே''கருத்தை சேவ் பண்ணாமல் போய்ட்டெனே....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அது ஸ்பெமில் சென்று அமர்ந்து இருந்தது அதை விடுதலை பண்ணிட்டேன்

      Delete
  4. முதல் கருத்து உங்க பாக்ஸ்ல இருக்கா பாருங்க...இல்லைனா திரும்ப அடிக்கணுமே..

    பதிவில் சொன்னதை நானும் வழிமொழிகிறேன். ஆமாம் பூஸ்டர் வந்தால் போட்டுக் கொள்வது நல்லது ஆனால் இப்படி எத்தனை பூஸ்டர் அல்லது வேக்சினேஷன் போட்டுக் கொள்ள வேண்டுமோ!!? நீங்கள் சொல்லியிருப்பது போல் மக்கள் சுய கட்டுப்பாடு விழிப்புணர்வு தேவை. அது போல மேனேஜ் செய்ய சஜஷன்ஸ் டிட்டோ. ஆனால் இங்கு மக்கள் தொகை கூடுதல் இல்லையா சோ கொஞ்சம் மெனக்கெட்டால் ப்ளான் செய்யலாம்.

    நம்மைப் பாதுகாத்துக் கொள்வது நம் பொறுப்பு!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹீஹீ கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போல இரண்டாம் தடவையும் இந்த பதிவை பூஸ்ட் செய்ய உங்கள் கருத்து மீண்டும் வந்து இருக்கிறது

      Delete
  5. உண்மைகளையும், நற்செயல்களையும் சொல்லி உள்ளீர்கள்... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. இங்கே எனக்கு கிடைத்த அனுபவத்தை கொண்டு எழுதி இருக்கின்றேன்...ஊரடங்கால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன... நான் வேலை பார்த்த நிறுவனம் சென்சியல் கேட்டகிரியில் வந்ததால் கொரோனா உச்சதில் இருந்த போதும் நிறுவனம் தினசரி திறந்து இருந்தது.. ஆனால் பல நிறுவனங்கள் மூடப்பட்டதால் நடுத்தரவர்க்க மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர் என்பது உண்மை என் வேலை நிறுவனத்திற்கு சென்று பார்க்கும் வேலை வீட்டில் உட்கார்ந்து செய்யக் கூடியது அல்ல எங்கள் நிறுவனம் மூடப்பட்டு இருந்தால் நானும் நடுத்தெருவிற்கு இன்னேரம் வந்து இருப்பேன்

      Delete
  6. சிறப்பான கண்ணோட்டம்... அனைவரும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனை. சூழல் விரைவில் சரியாக வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அனைவரும் ஒத்துழைக்காத பட்சத்தில் பாதிப்புகளை எல்லோரும் எதிர் நோக்க வேண்டும்தான்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.