Friday, July 23, 2021

@avargal unmaigal

 சுவையாக சமைக்கத் தெரிந்தால் மட்டும் போதுமா என்ன


காதலும் உணவும் ப்ரெஷாக இருக்கும் போது அருமையாக இருக்கும் ஆனால் போகப் போக அதன் தன்மை மாறிவிடும்

சமைக்கப் போகும் மனைவியிடம்  குறைந்த பட்சம்  2 சாய்ஸ் கொடு என்று கேட்டேன் அவளும் மனமிறங்கி "கொடுப்பதை சாப்பிடுங்கள்" "இல்லையென்றால் பட்டினி கிடங்க"  என்று 2 சாய்ஸ் தருகிறார். என்ன கொடுமைடா


குழந்தைகளும் பெரியவர்களும் இல்லா வீட்டில் கிச்சனும் சில சமயங்களில் படுக்கையறையாக மாறும்

டேபிளில் மிகச் சுவையான உணவு இருக்கும் சந்தர்ப்பம்தான் காதலைத் தோழியிடம் சொல்லும் நேரம்


வெயிட் குறைய நல்ல டயட் உணவு எங்கே கிடைக்கும் என்று நண்பர் ஒருவர் கேட்டார் அவரிடம் சொன்னேன் நன்றாகச் சமைக்கத் தெரியாதவர்களின் சாப்பாட்டைச் சாப்பிடுங்கள் அதைவிட டயட்  உணவு ஏதுமில்லை என்றேன்


சமைக்கத் தெரியாத ஆண்கள் என்றும்  பெண்களுக்கு அடிமைகள்தான்


சமைக்க தெரியாதவர்களுக்கு மிக விலை உயர்ந்த அழகான சமையலறை இருப்பது என்பது பன்றிக்குக் கிடைத்த விலை உயர்ந்த முத்தைப் போலத்தான்


தாயின் இழப்பைவிடத் தாயாரின் சமையல் இழப்பிற்கு வருத்துபடுபவர்கள் பலர்


திருநெல்வேலி அல்வாவைச் சோகத்துடன் யாராலும் சாப்பிட முடியாது காரணம் சாப்பிடும் போதே முகத்திலும் மகிழ்ச்சி வந்துவிடும்



சமைப்பவர் பாத்திரங்களைக் கழுவ வேண்டியதில்லை என்ற சட்டம் கொண்டு வந்தால் பெண்களுக்குச் சமைப்பதில் சோர்வே வாராது



சமைப்பது பெண்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயம்.. ஆமாம் அதை அவர்களின் சமைக்கத் தெரிந்த கணவர் செய்யும் போது


பிரியாணியும் ரய்த்தாவும் போல மணமக்கள் என்று சேர்ந்து வாழ வேண்டு என்று வாழ்த்தலாம்தானே

இதயம் , கண் கால் கை பார்வை இல்லா மனிதன் என்று நாம் கேள்விப் பட்டு இருக்கிறோம் ஆனால் வயிறு இல்லாத மனிதன் பற்றி கேள்விப் பட்டே இருக்க முடியாது.. அது போலத்தான் வீட்டிலும் பாதரும் பெட் ரும் ஹால் இல்லாத வீடு இருக்கலாம் ஆனால் கிச்சன் இல்லாத வீடே இருக்காது


சமைக்கப்படாத கிச்சன்கள் எப்போதும் மிக அழகாகவும் மிகச் சுத்தமாகவும் இருக்கும்



யாரும் ஒரு சிறந்த சமையல்காரராகப் பிறக்கவில்லை, செய்வதன் மூலம் ஒருவர் கற்றுக்கொள்கிறார்


சுத்தமான சமையலறை என்பது வீணான வாழ்க்கையின் அடையாளம்


பெண்களின் சிறந்த எக்ஸ்க்யூஸ் என்பது எனது சமையலறை நேற்று  சுத்தமாக இருந்தது. இன்று கொஞ்சம் டையர்ட் அதனால்தான் இப்படி அலங்கோலமாக இருக்கிறது


சாப்பிடுவது கலை அல்ல நன்றாகச் சமைப்பதே கலை


சுவையான உணவு இருக்கும் இடத்தில் மகிழ்ச்சி எப்போது இருக்கும்

உங்கள் குடும்பத்துடன் சாப்பிடும்போது உணவு சுவை நன்றாக இருக்கும்.


நீங்கள் உண்மையிலேயே ஒரு நண்பரை உருவாக்க விரும்பினால், ஒருவரின் வீட்டிற்குச் சென்று சாப்பிடுங்கள்..தங்கள் உணவை உங்களுக்குக் கொடுக்கும் நபர்கள் தங்கள் இதயத்தைத் தருகிறார்கள்.


அன்புடன்
மதுரைத்தமிழன்


3 comments:

  1. என்ன ஒரே சாப்பாட்டு வாசனையாக இருக்கிறது.

    ReplyDelete
  2. நெல்லை அல்வாவிற்கு மேலும் ஒரு சிறப்பு... ஹா... ஹா...

    ReplyDelete
  3. சாப்பிடும் கலை அறிந்தவர்களால்தான் சிறப்பாக சமைக்கவும் முடியும்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.