Saturday, February 9, 2019

@avargalunmaigal
ராமலிங்கத்தை கொன்றது மதமா அல்லது மனநோயாளிகளா?

ஒருவரின் உயிரை பறிப்பது என்பது குற்றமே அது இந்தியாவில் மட்டுமல்ல உலகநாடுகள் அனைத்திலும் உள்ள சட்டம் அதுவே. அது போல ராமலிங்கத்தை கொன்றது யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து தண்டனை தரவேண்டுமே தவிர குற்றம் செய்தவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்கள் என்று பார்த்து அந்த மதத்தை குற்றம் சொல்வது முட்டாள்தனமே...அதைத்தான் அறிவிலிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.


இந்து மதமானலும் சரி கிறிஸ்துவ புத்த சிக்கிய மதமனாலும் சரி எந்த மதமும் குற்றம் செய் என்று போதிக்கவில்லை. அது போலத்தான் இஸ்லாம் மதமும்....ஆனால் ஒரு இஸ்லாமியர் வேறு ஒரு மதத்தை சார்ந்தவரை கொலை செய்துவிட்டால் உடனே மாற்று மதத்தினர் இஸ்லாம் மதம் தீவிரவாத்தை போதிக்கிறதா? அது ஒரு மதமா என்று ஒரு டெம்பிளேட் கருத்தை தூக்கி கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்

இஸ்லாம் மதத்தினர் வேற்று மதத்தை சார்ந்தவரை கொன்று விட்டால் இஸ்லாம் இதைத்தான் போதிக்கிறதா என்பவர்கள் தங்கள் மதத்தினர் எந்த காரணங்களக்காகவும் யாரையுமே கொலை செய்வதில்லையா அப்படி கொலை செய்தால் அவர்கள் மதம் அதைத்தான் போதிக்கிறதா என்ன? இந்தியாவை எடுத்து கொண்டால் எத்தனையோ கொலைகள் நாட்டில் தினமும் நடந்து கொண்டிருக்கின்றன..அதை எல்லாம்  இஸ்லாமியர்கள் மட்டுமா செய்து கொண்டிருக்கிறார்கள் மாற்று மதத்தை சார்ந்தவர்களும்தானே கொன்று கொண்டிருக்கிறார்கள் அது போல இந்துகள் மற்ற இந்துக்களை கொல்வதும் ஏன் சாதி மாறிக் திருமணம் செய்து கொண்டால் கொலை செய்கிறார்களே அப்படியென்றால் இந்துமதம் அப்படித்தான் போதிக்கிறதா என்று எந்த இஸ்லாமியரும் கிறிஸ்துவர்களும் டெம்பிளேட் கருத்துகளை தூக்கி கொண்டு விமர்சிக்கவில்லையே. காஞ்சி மடத்தில் நடந்த கொலை அதை செய்தது யார் இஸ்லாமியர்களா இல்லைதானே மடத்தில் உள்ள ஆட்கள்தானே அப்போது ஏன் கேட்கவில்லை இந்து மதம் இதைத்தான் போதிக்கிறதா என்று



ஏன் ராம இராஜ்யம் அமைப்போம் ராமருக்கு கோவில் கட்டுவோம் என்று பொய்யாக கூறிக் கொண்டு அலையும் மோடியின் பொருளாதார திட்டங்களால் நாடு முழுவதும் நூற்ற்கணக்கானவர் இறந்தார்களே அது போல விவசாய திட்டங்களால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இறந்தார்களே அப்படியென்றால் மோடி பின்பற்றும் மதம்தான் அவருக்கு இப்படி செய்ய சொல்லி போதித்ததா என்ன

எந்த மதமும் தவறான கருத்துகளை போதிக்கவில்லை என்பதை படித்து நன்கு சிந்திக்க தெரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் எதையும் ஆராயாமல் படித்தும் அறிவிலிகளாக உள்ளவர்களாலும்  அரைகுறையாக மதப்பற்றுக் கொண்ட மனநோயளிகளினாலும்தான் பிரச்சனைகள் உருவாகின்றன...

மதம்தான் காரணம் என்று பேசும் அறிவாளிகள் குரானை வாங்கி படித்து இஸ்லாம் மதம் தீவிர வாதத்தைதான் விதைக்கிறாதா இல்லையென்றால் அது எதை போதிக்கின்றது என்று விவாவதிக்கலாமே அது போல  இஸ்லாமியர்களோ கிறிஸ்துவர்களோ மாற்று மதங்களை விமர்சிக்கும் போது அந்தெந்த மத நூல்களை வாங்கி படித்து விட்டு விமர்சிப்பதுதானே அழகு

இப்போது சொல்லுங்கள் ராமலிங்கத்தை கொன்றது மதமா அல்லது மதப் பெயரை பயன்படுத்தி கொண்டிருக்கும் மனநோயாளிகளா

கொசுறு :  80s Kids 90s Kids என்று பல கருத்துக்களை சொல்லிகிட்டு இருப்பவர்கள் அந்த காலத்தில் தமிழகத்தில் இன்று உள்ளது போல மதவேற்றுமைகள் துவேஷங்கள் அன்று இல்லை என்று யாருமே நான் அறிந்தவரை பதியவில்லை



உங்களிடம் உண்மையான நட்பு கொண்ட வேற்றுமதத்தை சார்ந்தவர்களை கவனித்து பாருங்கள் அவர்களிடம் சிறிது கூட மத துவேசம் அடுத்த மதத்தை பற்றி தாழ்வான் எண்ணம் சிறிது கூட இல்லாமல் பழகுவார்கள்.....ஆனால் அதே நேரத்தில் உங்களிடம் நட்பு கொண்ட மோடியின் பக்தர்களிடம்  கவனித்து பாருங்கள் அவர்கள் மத துவேஷத்தை விதைத்து கொண்டிருப்பார்கள்

ஒரு நல்ல இந்துவை காப்பாற்றாத பிஜேபி இந்து மதத்தையும் இந்தியாவையும் காப்பாற்ற போகிறதா என்ன?
http://avargal-unmaigal.blogspot.com/2013/12/kanchi-kamakottie-peetam-ad.html

பேஷ் பேஷ் இந்திய சட்டம் ரொம்ப நன்னா இருக்குன்னா 


அன்புடன்
மதுரைத்தமிழன்
09 Feb 2019

1 comments:

  1. 70s kids பதிவிற்றிருக்கலாம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.