Wednesday, February 27, 2019

இந்தியர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

நேற்று இரவு கிழேயுள்ள செய்தி எனக்கு கிடைத்ததும் என்  பேஸ்புக்கில் நான் இதை பகிர்ந்துவிட்டு ஊடக துறையில் இருக்கும் நபரிடம் இது உண்மைதானா என்று கேட்டு இருந்தேன்...அப்படி கேட்க காரணம் கூகுலில் சர்ஸ் செய்து பார்க்கும் போது எந்த ஒரு  இந்திய ஊடகங்களும் இதைப்பற்றி செய்து வெளியிடவில்லை....ஆனால அவரிடம் இருந்து பதில் வரவில்லை ஆனால் அவர் பதிவில் வந்த பலர் இது Fake news என்று கருத்து சொன்னதால் ஒரு வேளை இது Fake ஆக இருக்குமோ என்று என் பேஸ்புக் அக்கவுன்டில் வெளியிட்ட தகவலை நீக்கி விட்டு படுக்க சென்றுவிட்டேன். ஆனால் காலையில் எழுந்து பார்த்த போதுதான் அந்த நிகழ்வு உண்மை என்று தெரிந்து கொண்டேன்.....

நான் வெளியிட்டு டெலீட் செய்த தகவல் இதுதான்

Salute to our forces...🇮🇳 waiting for the confirmation.


IAF Sources: At 0330 hours on 26th February a group of Mirage 2000 Indian Fighter jets struck a major terrorist camp across the LoC and completely destroyed it.

IAF Sources: 12 Mirage 2000 jets took part in the operation that dropped 1000 Kg bombs on terror camps across LOC, completely destroying it

இப்படி ஒரு நிகழ்வு நடந்தது உண்மைதான் என்று தெரிந்த பின்பும் நம் இந்திய மக்கள் பலர் இன்னும் இதை நம்பாமல் கேலி செய்து பதிவிட்டு வருகிறார்கள்...காரணம் எப்போதும் Fake செய்திகளை வெளியிட்டு வரும் பக்தால்ஸ்தான்  இப்படி செய்தி பரப்பி வருகிறார்கள் என்று அவர்கள் நம்பியதுதான்... இது எப்படி இருக்கிறது என்றால் பாம்பு வருகிறது என்று பல முறை ஏமாற்றிவிட்டு உண்மையில் பாம்பு வருகிறது என்று சொல்லும் போது இவனுக்கு வேலை வேற இல்லை எப்பொழுதும் போல் பொய் சொல்லுகிறான் என்று கருதிவிட்டு கேலியாக எழுதி கொண்டிருக்கிறார்கள்...

யார் எப்படியோ நான் அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெற்று வசித்துவந்தாலும் இந்தியா எப்போதும் என் தாய்நாடுதான் எப்படி என் தாயை நான் மதிக்கிறேனோ அது போலத்தான் இந்தியாவையும் நான் மதிக்கிறேன்..


எப்படி இந்திய வீரர்கள்  பலியானார்களோ அப்போது எவ்வளவு மனக் கஷ்டம் ஏற்பட்டதோ அது போல பாகிஸ்தான் மீது குண்டு போட்டார்கள் என்று கேள்விபட்டது மனம் மிக சந்தோஷம் அடைந்தது.


இப்படி மனது சந்தோஷப்பட காரணம் நம் இந்திய ராணுவத்தை நினைத்துதான். மோடியை நினைத்து அல்ல... இந்திய ராணுவம் மானது எந்த அர்சியல் கட்சிக்கும் சொந்தமானது அல்ல....பாரதப் பிரதமர் வேண்டுமானால் அதைகட்டுபடுத்தும் அதிகாரம் கொண்டவாரக இருந்தாலும் இது  அவர் சார்ந்த கட்சிக்கு எந்த வித சொந்தமும் அல்ல...

எப்போது காஷ்மீரில் வீரர்கள் பலியானார்களோ அப்போதே பிரதமர் இராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டதாக் சொன்னார்...அப்படி அவர் முழு சுதந்திரம் கொடுத்த பின் இராணுவ தளபதிகள் எடுத்த முடிவினால்தான் இப்படி ஒரு நிகழ்வு நடை பெற்று இருக்கிறது, அதனால் இந்த பெருமை எல்லாம் இராணுவ தளபதிகளுக்கே சேருமே தவிர பிரதமருக்கு எந்தவித்தத்திலும் சேர்வதில்லை


ராணுவத்திற்க்கு முழுஅதிகாரம் கொடுத்தபிறகு நடந்த நடவடிக்கைக்கு மோடியை ஏன் பாராட்ட வேண்டும் தளபதிகளுக்கும் வீரர்களுக்கும்தான் பாராட்டுசேரனும் அதுதான் நியாயம்...

தீவிரவாதிகள் மீதான தாக்குதல் உண்மையாக இருப்பதி இந்தியனா எனக்கு மட்டுமமல்ல இந்தியாவை நேசிக்கும் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி  ஆனால் அதை வைத்து இங்க ஒரு கூட்டம் ஓட்டு கேட்டால் அது எச்சத்தனத்தின் உச்சம்...


இந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் உண்மையாக  இருக்கட்டும். பாராட்டுக்கள். ஆனா அதுக்காக பாஜகவிற்கு எல்லாம் ஓட்டெல்லாம் போட முடியாது  .கூடாது..ஏனென்றால் இந்த மாதிரி முதலில் நம் வீரர்கள் பலியாக நாம் பாதுகாப்பில் கோட்டைவிட்டுவிட்டு அதன் பின் எதிரிகளை தாக்க செல்வது என்பது சரியல்ல.. திருடனை நம் வீட்டில் நுழையவிட்டு விட்டு நம் வீட்டில் உள்ளவர்கள் பலியானபின்னர் திருடனை தேடி சென்று குடும்பத்தலைவன் அழிப்பதில் அர்த்தம் இல்லை வரும் முன் காப்பதுதான் குடும்ப தலைவனுக்கு அழகு ஆனால் அந்த தகுதி மோடிக்கு இல்லையென்றுதான் நாம் சொல்லவேண்டும்..



அன்புடன்
மதுரைத்தமிழன்


5 comments:

  1. உங்க பாயிண்ட் சரின்னு எனக்குத் தோணலை. இராணுவத்துக்குப் பாராட்டு போய்ச் சேரணும். ஆனால் அதற்கான அனுமதி, பின்னணி வேலை, ராஜரீக நடவடிக்கைகள் என்று பலவற்றிர்க்கும் மோடி அரசுக்குத்தான் பாராட்டு போய்ச்சேரணும். இதையே பின்னோக்கி, இதற்கு முந்தைய பிரச்சனைகளில் மத்திய அரசு நடந்துகொண்ட விதத்தை கம்பேர் செய்தால் காரணம் புரியும்.

    செயல்படுபவனுக்கு அதற்கு உரிய சுதந்திரமும், தேவையான உதவிகளையும் செய்வது மத்திய அரசு.

    ReplyDelete
    Replies
    1. தமனாக்கா படம் பார்த்ததும் 1ஸ்ட்டா லாண்டிங் ஆ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

      Delete
  2. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நிகழ்வு நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

    துள்சிதரன், கீதா

    கீதா: அட இன்று தமன்னாக்கா படம்...பாருங்க நெல்லை வந்துவிட்டார்... அதிரா ஹைஃபைவ்! ஹா ஹ ஹா

    ReplyDelete
  3. சுட்டு விழுத்தப்பட்ட விமானம் இந்த ஊடுருவி தாக்குதலில் பங்கு கொண்டதா

    ReplyDelete
  4. கடைசிப் பத்தியில் உள்ள ஒவ்வொரு வாக்கியமும் உண்மை

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.