Sunday, February 10, 2019


இந்திய பார்லி., குழுவை அவமதிக்கிற டிவிட்டர் நிறுவனத்தை மோடி புறக்கணிப்பாரா?

டிவிட்டர்' சமூக வலைதளத்தை பயன்படுத்தும் இந்தியர்களின் உரிமை பாதுகாக்கப்படுவது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற, பார்லிமென்ட் குழு உத்தரவை ஏற்க, அந்த நிறுவனம் மறுத்துஉள்ளது.

டிவிட்டர்' சமூகதளத்துக்கு, பா.ஜ., - எம்.பி., அனுராக் தாக்குர் தலைமையிலான, தகவல் தொழில்நுட்பத்துக்கான, பார்லிமென்ட் குழு, டுவிட்டர் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் சம்மன் அனுப்பியது இருந்தது ,டி விட்டர் சமூக வலைதளத்தைப் பயன்படுத்தும், இந்தியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது குறித்து, நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும்' என்றும் அதில்
பார்லிமென்ட் குழு முன்பு உங்கள் நிறுவனத்தின் தலைவர் ஆஜராக வேண்டும். அவருடன், பிரதிநிதி ஒருவரையும் அழைத்து வரலாம் எனக்கூறப்பட்டது. முதலில் கடந்த 7 ம் தேதி வரை கெடு விதித்த இந்த குழு, டிவிட்டர் சிஇஓ ஆஜராக வசதியாக தேதியை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

டிவிட்டர் அதிகாரிகளுக்கு ஆஜராக 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், தங்களுக்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என டிவிட்டர் கூறியுள்ளது.இது தொடர்பாக, டிவிட்டர் நிறுவனத்தை சேர்ந்த விஜய் கடே, பார்லிமென்ட் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் , இந்தியாவை பொறுத்தவரையில், எங்களின் கணக்குகள், விதிமுறைகளை காண்பிக்க முடியாது எனக்கூறி உள்ளார்.


இப்படி மோடி அரசை அவமதிக்கும் டிவிட்டர் நிறுவனத்திற்கு எதிராக மோடி மற்றும் அவரது  தேசபக்தி கொண்ட பக்தால்ஸ் அதன் அக்கவூண்டை  டெலிட் செய்வார்களா? அல்லது அந்த நிறுவனத்தை தடை செய்வார்களா? தேசபக்தி இருந்தால் அதைத்தான் செய்வார்கள்..ஆனால்


அன்புடன்
மதுரைத்தமிழன்
10 Feb 2019

1 comments:

  1. தலைப்பில் கேள்வியை கேட்டு முடிவில் பதிலையும் சொல்லிவிட்டீர்களே நண்பரே

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.