என் அட்மீன் தலைப்புக்கு ஏற்றபடம் போடுகிறேன் என்று சொல்லி தவறாக ஒரு படத்தை போட்டுவிட்டான்..ஹீஹீ |
பத்திரிக்கை தர்மத்தை காற்றில் பறக்கவிடும் டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் இந்திய நாளிதழ்கள்?
பத்திரிக்கைளுக்கு என்று ஒரு தர்மம் , மரபு உண்டு. அதைத்தான் மோடி இந்தியாவை ஆள வரும் வரை இருந்து வந்தது...ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பின் பல மரபுகள் தூக்கி குப்பையில் போடப்பட்டன....தலைவன் எவ்வழி குடிகள் அவ்வழி என்று சொல்வது போல நாட்டீன் பிரதமாராகிய மோடியே மரபுகளை தூக்கி ஏறியும் போது அவரை பின்பற்று மக்களும் அதன் படிதான் செய்வார்கள்''
முன்பு பத்திரிக்கை உலகில் ஒரு மரபு இருந்தது அதன்படி அதில் வரும் விளம்பரங்களை வெளியிடும் போது அந்த விளம்பர பக்கத்தில் ஒரு கார்னரில் Advt... என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அதை பார்த்து படிப்பவர்கள் அது ஒரு செய்தி அல்ல ,விளம்பரதாரர்களின் விளம்பரம் என்று அறிந்து கொள்வார்கள்....

ஆனால் இப்போது பத்திரிக்கையில் வரும் செய்திகள் எல்லாம் செய்திகள் அல்ல கருத்து திணிப்பு விளம்பரங்கள், அதுவும் ஒரு வகையான விளம்பரம்தான் ஆனால் என்ன அந்த செய்திகளில் அடியில் Advt... என்று குறிப்பிடப்பட்டிருக்காது..
இந்த மாதிரி விளம்பர செய்திகளுக்கு அதிக அளவு பணம் மறைமுகமாக கொடுக்கப்பட வேண்டும். இந்தமாதிரி விளம்பரங்களை தனி நபர்கள் கொடுக்க முடியாது... நாட்டில் உள்ள கட்சிகள் மட்டுமே கொடுக்க முடியும்..
உதாரணத்திற்கு பாஜக அரசால் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு செய்தியாக கொடுக்கப்பட்ட விளம்பரம் இதுதான்.. இந்த விளம்பரத்தை கூட்டி கழிச்சு பாருங்க நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்கு நன்றாக புரியும்....நான் சொல்லவருவது சங்கிகளுக்கும் பக்தால்ஸ்க்கும் புரியாவே புரியாது ஒரு வேளை புரிந்தாலும் புரியாத மாதிரி நடிப்பார்கள் இப்படி அவர்கள் செய்வதால்தான் அவர்களை நாம் சங்கிகள் என்று சொல்லுகிறோம்
படிக்க தவறியவர்கள் படிக்க :
அதிமுக பாஜக & பாமக கூட்டணி நிலமை இப்படிதான் இருக்கிறதோ?
அன்புடன்
மதுரைத்தமிழன்
தெரியாத விடயம் அறிந்தேன் நன்றி.
ReplyDeleteஇது ஒரு வகையான விளம்பரம் ஜி
Deleteஅட்மின் போட்ட படத்தை ரசித்தேன்.
ReplyDeleteபடத்தை நீங்களே போட்டுவிட்டு ரசிக்கிறீங்களே ஸ்ரீராம்
Deleteஇப்படியெல்லாம் கூடவா பத்திரிகை தர்மத்தை மீறுவார்கள்?
ReplyDeleteஉங்கள் அட்மின் உங்களுக்கேற்ற ஒரு படத்தைத் தான் போட்டிருக்காரே!!
உங்களுக்கு மேலே கருத்து போட்டவர்தான் என் அட்மின் என்று ஊருக்குள் ஒரு வதந்தி ஹீஹீ
Deleteஇது பி ஜே பி கொடுத்த விளம்பரம் என்பது உங்கள் ஊகம் மட்டுமே, இல்லையா?
ReplyDeleteஇது நேரடி விளம்பரம் இல்லை ஜீ மீடியாக்கள் பாஜக தலைமையிடம் பணத்தை கோடிக்கணக்கில் வாங்கி கொண்டு செய்தியை அவர்களுக்கு ஏற்ற மாதிரி தேவைக்கேற்ப போட்டு கொள்கிறார்கள். அதைத்தான் விளம்பரம் என்று கிண்டலாக சொல்லி இருக்கிறேன் ஜி
Deletehttps://www.ndtv.com/india-news/fitch-bucks-overwhelming-consensus-says-bjp-may-struggle-for-majority-1997565
ReplyDeleteபத்திரிக்கை தர்மத்தை காற்றில் பறக்கவிடும் NDTV மற்றும் Bloomberg?
வெள்ளக்கார பத்திரிக்கைக்காரன் அப்படியெல்லாம் பண்ண மாட்டான்னு சொல்லாதீங்க.
இந்தமாதிரி சொல்லி நம்ப ஆசைய தீத்துக்கலாம் அவ்வளவு தான். நன்றி
வெள்ளக்காரன் பண்ண மாட்டான் என்று நான் எங்கேயாவது சொல்லி இருக்கிறேனா?
Deleteஅது சரி மதுரை தமிழன் உங்க செய்திக்கும் அங்கே மேலே நீங்க போட்டிருக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்?!! ஹா ஹா ஹா - துளசிதரன்
ReplyDeleteஅனுஷ் படம் அழகு மதுரை...துளசி அப்படிச் சொன்னாலும் நான் ரசித்தேன் அனுஷை!!! ஹா ஹா இப்படி அனுஷ் படம் பார்த்ததும் ஆஹா என்று ஓடிவந்தேன்...பார்த்தா செய்தி வேறு...ஹிஹிஹிஹி...--கீதா
என்ன சம்பந்தம் என்பதை கீதா கண்டுபிடித்துவிட்டார்களே துளசி சார்
Deleteமதுரை எனக்குப் புரிந்தது அனுஷ் படம் ஏன்னு....உங்க தலைப்புக்கு ஏற்ப!!? அனுஷின் தலைப்பும் காற்றில் பறக்க....செம மதுரை சகோ!!!
ReplyDeleteகீதா
பாடி கடைசியாக ஒரு வழியாக கண்டு பிடித்துவீட்டீர்களே
Delete