Saturday, February 9, 2019

பெற்றோர்கள் மறைக்கும் 'அந்த' சில நிமிஷ உண்மைகள்
என்ன சார் எப்போ பார்த்தாலும் அரசியல் பதிவாக அதுவும் மோடியை பற்றி அதிக எதிர்ப்பு பதிவே போடுகிறீர்கள் என்பவர்களுக்காக கொஞ்சம் நேரம் கிடைத்த போது சிந்தித்து எழுதியது இது....

பெற்றோர்கள்...பிள்ளைகளிடம் உன்னை கஷ்டப்பட்டு பெற்று வளர்த்து ஆளாக்கி இருக்கிறோம் என்று கூறுவார்களே தவிர தங்களின் ஒரு சில நிமிஷ காம சுகத்தில்தான் நீங்கள் பிறந்தீர்கள் என்ற உண்மையை மட்டும் சொல்ல மாட்டார்கள்
பெற்றோர்கள் தங்கள் விருப்பதிற்கு கேற்றவாறுதான் பிள்ளைகளை வளர்க்கிறார்களே தவிர பிள்ளைகளின் விருப்பதிற்கு ஏற்ப அவர்களை வளர்ப்பதில்லை.. தான் விரும்பிய மதத்தைதான் அவர்களும் விரும்ப வேண்டும் தான் விரும்பிய ஆட்களுடன் மட்டும்தான் அவர்கள் பேச பழக வேண்டும் தாங்கள் விரும்பியதைத்தான் அவர்கள் படிக்க வேண்டும் தாங்கள் விரும்பிய பெண்ணைத்தான்  அல்லது ஆணைத்தான் அவர்கள் மணமுடிக்க வேண்டும் அடேய் நீங்கள் முட்டாள்களாக இருந்தால் அவர்களும் முட்டாளாகத்தான் வளர வேண்டுமா என்ன?
நாம்: இப்போது மிக சந்தோஷமாக இருக்கிறோம் என்று மகிழ்ந்தால்
வாழ்க்கை : என்னது இவன் சந்தோஷமாக இருக்கிறானா நோ நோ அப்படி எல்லாம் இவன் இருந்துவிட அனுமதிக்க கூடாது என்று ஒரு கஷ்டத்தை நம்மேல் தூக்கி போட்டுவிடுகிறது


எதையும் யாரையும் இழந்துவிடுவோமா என்று  பயந்து போலியாக கட்டி சுமக்க வேண்டாம்  நமக்கு என்று இருப்பது நம்மைவிட்டு என்று கைவிட்டு போகாது அப்படி போகும் ஒன்று நமக்கானது அல்ல
மற்றவர்களின்  வாழ்க்கையில் கசப்பை நாம் கொட்டிக் கொண்டு  மற்றவர்கள் நம் வாழ்க்கையில் இனிப்பை மட்டும் தந்து கொண்டு இருக்க வேண்டும் என்று இன்றைய தலைமுறை மக்கள் நினைக்கிறார்கள்
தன்னை சார்ந்த மற்றும் தன்னை சுற்றியுள்ள  பெண்களுக்கு  சக உரிமையை கொடுக்காத பெண்கள்தான் ஆண்களுக்கு இணையாக சம உரிமை வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்
சம உரிமை என்று போராடாடும் பெண்களுக்கு சம உரிமை கொடுத்து போராட ஆதரவு தந்து ஊக்கப்படுத்தும்  தன் கணவரை மற்றும் ஆண்களை கூட பாராட்ட கூட மனமில்லாத பல பெண்கள் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்

உலகத்தில் பிறந்த அனைவரும் ஏதோ ஒரு வகையில் மற்றுவர்களுக்கு பாடத்தை கற்று கொடுக்கும் வேளையில் தாங்களும் தாங்கள் செய்யும் தவறுகளால் பாடம் கற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்

அந்தந்த நொடியில் கிடைக்கும் சந்தோஷங்களை நாம் பெற்று அனுபவிக்க வேண்டுமே ஒழிய அதைவீட்டுவிட்டு எதிர்கால சந்தோஷத்தை நினைத்து இந்த நொடியில் கிடைக்கும் சந்தோஷத்தை நாம் இழந்துவிடக் கூடாது....காரணம் இன்றைய சந்தோஷம் போல வாழ்க்கையில் இனி சந்தோஷமாக இருக்க முடியாமல் போகும் வாய்ப்புக்கள் உண்டு
மதப்பற்று கொண்ட பலருக்கு தன் மதம் ஏன் மிக சிறந்தது என்று எடுத்து சொல்லத தெரியாமல் மாற்று மதம் மிக இழிவானது என்று கூறுவதன் மூலம்தான் தன் மதம் சிறந்தது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்
உலகில் பிறந்த அனைவரும் குருடர்களாக பிறந்திருந்தால் யாரையும் யாரும் இம்பிரஸ் செய்ய வேண்டிய அவசியம் இருந்திருக்காது


5 comments:

  1. அனைத்தையும் ரசித்தேன். எல்லாமே நன்றாக இருந்தன.

    ReplyDelete
  2. we are all by products of incidental pleasures சுருங்கச் சொன்னால் நாம் எல்லோரும் விபத்தின்விளைவுகளே

    ReplyDelete
  3. நறுக்காகக் கூறிய விதம் அருமை.

    ReplyDelete
  4. அனைத்தையும் ரசித்து படித்தேன். ஆனாலும் மோடி எதிர்ப்பு பதிவைத்தான் உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  5. அனைத்துக் கருத்துகளும் அருமை மதுரைதமிழன்

    துளசிதரன், கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.