Friday, February 15, 2019

பிணத்தின் மீது அரசியல் செய்யாமல் இருப்பவர்கள்தான் தேசபக்தர்கள்

புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்திய தேசத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல உலகெங்கும்முள்ள இந்தியர்களும் அவர்களுக்கு துணை நிற்கிறார்கள்..நிற்பார்கள் அவர்கள்தான் இந்தியர்கள்



இந்த குற்றத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அதற்கு துணையாக இருக்கும் எந்த நாட்டையும் நாம் நிச்சயம் பலிக்கு பழி வாங்க வேண்டும்.....

ஆனால் இதுதான் நமக்கு கிடைத்த சான்ஸ் என்று பக்தால்ஸ் மாதிரி உடனே இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களின் மதத்தை தூற்றவது சரியா என்று சிந்திக்க வேண்டும்... எந்த மதமும் இப்படி செய்ய போதிக்க வில்லை  அதற்கு இஸ்லாம் மதமும் விதிவிலக்கு அல்ல....  எப்படி பக்தால்ஸ் செய்யும் அட்ழியங்கள் கொலை மற்றும் கயமைதனத்திற்கு இந்து மதத்தை குறை சொல்ல முடியாதோ அது போலத்தான் திவிரவாதிகளின் செயலுக்கும் மதத்தை குறை சொல்லக் கூடாது.

அதுமட்டுமல்ல இந்த நிகழ்வை அரசியலாக்கக் கூடாதுன்னு சொல்லிக்கிட்டே இதை பக்தால்ஸ் குருப் அரசியாலக்கி கொண்டு இருக்கிறார்கள் இதுதான் அவர்களின் தேச பக்தி

ஒரு ஸ்டெர்ரிலைட் நலனுக்காக சொந்த மக்களை ராணுவத்தைக் கொண்டு வாயில் சுட்டுக்கொல்லும் தேசபக்தர்கள் தங்கள் நலன்களுக்காக ராணுவத்தைப் பலி கொடுக்கமாட்டார்களா? உண்மையில் இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். 


அன்புடன்
மதுரைத்தமிழன்

கொசுறு :

தேசத்திற்காக போராடி செத்து இருந்தால் இறந்தவர்களின் சாவு  இன்னும் மிக போற்றுதற்குரியதாகி இருக்கும் ஆனால் இந்த தேசத்தின் தேர்தலுக்காக யாரோ இவர்களை பலி கொடுத்து இருக்கிறார்களோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது

9 comments:

  1. Replies
    1. இது அரசியல் அல்ல அரசியல் அசிங்கம்

      Delete
  2. இன்னொரு சர்ஜிகல் ஸ்ட்ரைக் எடுப்பார்கள் பின் லாடனை அமெரிக்கா அழித்ததுபோல் இந்த்யர்களும்செய்வார்களா

    ReplyDelete
    Replies
    1. இந்திய அரசியல்வாதிகள் தீவிரவாதிகளை அழிக்க அல்ல தீவரவாதிகளின் பெயரில் நமது வீரர்களையும் மக்களையும் தங்களின் சுய நலத்திற்காக அழிக்க பிறந்தவர்கள்

      Delete
  3. உண்மையை சரியான நேரத்தில் உரக்க சொன்னதற்காக நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. சொல்லும் உண்மை சிலருக்கு மட்டுதான் கேட்கும் மீதியுள்ள இந்தியர்கள் செவிடர்கள் குருடர்கள்

      Delete
  4. எதை எல்லாம் வைத்து எப்படியெல்லாம் அரசியல் செய்ய வேண்டும் என்று நம் அரசியல்வாதிகளிடம் தான் பிற நாட்டு அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைவிட கற்றூக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும் இல்லையென்றால் நம் நாடு மாதிரி அந்த நாடுகளும் நாசமாகி போய்விடும்

      Delete
  5. இந்த நிகழ்வுமனதை மிக மிக வேதனைப்படுத்திய நிகழ்வு. எல்லையில் நம் நாட்டைக் காக்க என்று நாட்டு நலனை மனதில் கொண்டு அங்கு பனியிலும் மழையிலும் வெயிலிலும் இருக்கும் வீரர்களின் விலைமதிப்பில்லா உயிர்கள் கூட பணயம் வைக்கப்படும் பதற்றமான சூழல் என்று தெரிந்தும் படையில் சேரும் வீரர்களுக்கு எப்படியான மனது இல்லையா?!! அந்த நல் உள்ளங்களுக்கு எங்களின் வீர அஞ்சலிகளும், வணக்கங்களும்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.