அறிவார்ந்த ஆளுமைகளால் இந்திய மக்கள்ஆளப்படுகிறார்களா?
காஷ்மீரில் இந்திய இராணுவத்தினர் 44 பேர் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுப்பதற்காக நிதின் கட்கரி இந்தியாவிலிருந்து மேற்கு நோக்கி பாயும் நதிகளில் அணைகள் கட்டி பாகிஸ்தானிற்கு தண்ணீர் செல்லாமல் தடுத்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
அப்ப ஒரிரு நாளில் அணைகள் கட்டி பாகிஸ்தானை பழி வாங்கிடலாம் என்று சொல்லுறீங்க அது சரிதானே

என்ன மதுரைத்தமிழா அது எப்படி அணையை ஒரிரு நாளில்கட்ட முடியும், இது என்ன சினிமாவா என்ன ஒரிரு நாளில் கட்டி முடிக்க...அதற்கு நீண்ட நாள் ஆகும் அதுமட்டுமல்ல அதற்கு இந்திய மக்களின் ஒட்டு மொத்த ஆதரவு இருந்தால்தான் அதை செய்ய முடியும்
பாகிஸ்தானுக்கு எதிராக என்றால் இந்திய மக்கள் மட்டுமல்ல உலகத்தில் வாழும் அனைத்து இந்தியர்களும் ஆதரவு தரத்தான் செய்வார்கள் அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு..
அட மதுரைத்தமிழா உலகத்தில் வாழும் இந்தியர்களின் ஆதரவு எங்களுக்கு தேவை இல்லை இந்தியாவில் வாழும் இந்தியர்களின் ஆதரவு மட்டும் எங்களுக்கு போதுமானது அதுவும் அவர்கள் அதை சும்மா சொல்லக் கூடாது வருகிற தேர்தலில் அவர்களின் ஆதரவை மோடிக்கு தந்து அவரை மீண்டும் பிரதமாராக்க வேண்டும் அப்போதுதான் நாம் பாகிஸ்தானை பழி வாங்க முடியும்
அப்ப மோடி பிரதமராக மீண்டும் வந்தால்தான் இதை உடனே செய்ய முடியும் என்று சொல்லுறீங்க சரிதானே
மோடி வந்தால் செய்ய முடியும் என்று சொன்னேனே தவிர அதை உடனடியாக செய்ய முடியாது அதற்கு பல கட்ட நடவடிக்கைகள் செய்யபட வேண்டும் அப்படி செய்தால்தான் அணைகள் கட்ட முடியும்..
அதென்ன பல கட்ட நடவடிக்கைகள் முதலி அவர் ஜெய்த்து வந்த பின் உலகெமெல்லாம் மீண்டு ஒரு முறை சுற்றி வருவார் அதன் பின் சில் ஆண்டுகள் கழித்து அணைகள் கட்ட மூவாயிரம் கோடி செலவு செய்து ஒரு அடிக்கல் நட்டுவார்......
அப்ப அடிக்கல் நட்டியவுடன் உடனே அணைகள் கட்ட ஆரம்பித்து விடுவீர்களா?
அட என்ன மதுரைத்தமிழா கொஞ்சம் கூட விவரம் தெரியாத ஆளா இருக்கிறீங்க அது எப்படி உடனடியாக முடியும் 2014 தேர்தலுக்கு முன்பு நாங்கள் கொடுத்த வாக்குறிதியான ராமர் கோயிலை நிறைவேற்ற வேண்டும். கங்கையை சுத்தம் செய்ய வேண்டும் டிஜிடல் நகரங்களை கட்டி முடிக்க வேண்டும் .15 லட்சம் கறுப்பு பணத்தை மீட்டு தர வேண்டும் ,அது ஏன் இப்ப மதுரையில் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நட்டினோமே அதையும் கட்டி முடிக்க வேண்டும் இப்படி பல திட்டங்கள் வரிசையில் உள்ளன. அதெல்லாம் முடிந்த பின் தான் இதற்கு வர முடியும் இது கூட தெரியாத மாதரி இருக்கீங்களே உங்களை மாதிரி முட்டாள்கள் இருக்கிற வரை மோடி என்ற தனிமனிதரால் என்ன செய்ய முடியும்
அப்ப இப்போதைக்கு பாகிஸ்தானை பழி வாங்க மாட்டீங்களா?
மதுரைத்தமிழா உங்கிட்ட ஒரு ரகசியம் சொல்லுறேன் கேட்டுக்க ஆனால் அதை உன் பதிவில் எழுதி எல்லோருக்கும் சொல்லிவிடாதே ஒகேவா
போன தேர்ததலில் நாங்க ஜெயிக்க மாட்டோம் என்றுதான் நினைத்தோம் அதனால் நிறைவேற்ற முடியாத பல வாக்குறிதிகளை அள்ளி வழங்கினானோம் ஆனால் என்ன மக்களை எங்களை ஆமோகமாக வெற்றி பெற வைத்து ஆட்சியில் வைத்து அழகு பார்த்தார்கள். அதனால்தான் இந்த தேர்தலின் போது இப்படிபட்ட வாக்குறிதிகளை அள்ளி தெளிக்க ஆரம்பித்து இருக்கிறோம்.மக்கள் முட்டாள்களாக இருந்தால் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் ஆனால் கொஞ்சம் தெளிஞ்சு வேற கட்சி ஆட்சிக்கு வந்தால் அவர்கள் இந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி போராடி அவர்களை தர்ம சங்கடத்தில் ஆள்த்துவோம் ஹீஹீ இது எப்படி இருக்கு மதுரைத்தமிழா?
கொசுறு : நண்பர் விக்கி பேஸ்புக்கில் பகிர்ந்த பதிவு கிழே பகிரப்பட்டு இருக்கிறது அதையும் படித்து செல்லுங்கள் ;
நாம் எப்படிப்பட்ட "அறிவார்ந்த ஆளுமைகளால்" ஆளப்படுகிறோம் என்பதை தெரிந்துகொள்ள நிதின் கட்கரியின் இன்றைய அறிக்கையே போதுமானது. இந்தியாவிலிருந்து மேற்கு நோக்கி பாயும் நதிகளில் அணைகள் கட்டி பாகிஸ்தானிற்கு தண்ணீர் செல்லாமல் தடுத்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
அவருக்கு ஒரு வார்த்தை: மேற்கு நோக்கி பாயும் ஐந்து நதிகளின் நீரை பகிர்ந்துகொள்ள இந்தியா பாகிஸ்தான் இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் சர்வதேச மேற்பார்வையில் உள்ளவை, அவை "ஹெல்சின்கி சர்வதேச நீர் பங்கிட்டு விதிகளின்" கீழ் வருபவை, எந்த ஒரு தனிப்பட்ட நாடும் அந்த ஒப்பந்தங்களை நினைத்தபடி மீறிவிடமுடியாது, அப்படி செய்தால் "சர்வதேச புறக்கணிப்பை" எதிர்கொள்ள நேரிடும்.
ஒருவேளை கட்கரி சொன்னபடி நடந்தால், கங்கை நதியின் துணைநதிகள் உற்பத்தியாகும் நேபாள் நாட்டில் அவற்றின் குறுக்கே அணைகள் கட்டப்படும், பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே சீனா அணை கட்டும், மொத்தமாக வட இந்தியா முழுவதற்கும் தண்ணீர் கிடைக்காமல் போய்விடும்.
மோடி, பாகிஸ்தான் மீது எந்த ஒரு தாக்குதலையும் தொடுக்கும் முன்னர், தான் முன்கூட்டியே அறிவித்து மக்களின் நன்மதிப்பை பெறவேண்டும் என்கிற கூற்றை தவிர கட்கரியின் வார்த்தைகளை வேறு எப்படி பார்ப்பது ? - நன்றி பொன்ராசு தேவன்
அன்புடன்
மதுரைத்தமிழன்

கேனப்பயல் நாட்டுல கிறுக்குப்பய நாட்டாமை.
ReplyDelete
Deleteஉண்மைதான் கில்லர்ஜி
இப்பொழுது தான் ஒரு கட்டுரையை படித்தேன், அதில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்குமான நீர் ஒப்பந்தத்தை மீறினால் உலக வங்கியின் கோபப்பார்வைக்கு ஆளாக கூடும். அதனால் தான் மத்திய அரசு செயலில் இறங்காமல் வெறும் வார்த்தை ஜாலங்களில் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.
ReplyDeleteஎது எப்படியோ, நீங்கள் சொன்னபடி இப்போதைக்கு பாகிஸ்தானை பழி வாங்க முடியாது
இன்னொரு இந்திரா காந்தி பிறந்த வந்தால்தான் பாகிஸ்தான் மீது உண்மையிலே பழி வாங்கும் நடவடிக்கை இருக்கும் அது வரையில் இப்படித்தான் வெட்டி பேச்சு நடக்கும்
Delete