Monday, February 11, 2019

@avrgal unmaigal
உங்களை சுற்றி இப்படிப்பட்ட நண்பர்கள் இருக்க கூடும்

நண்பா இந்தா உன் கத்தி . என் முதுகில் இருந்து எடுக்க சிறிது தாமதம் ஆகிவிட்டது. நிச்சயம் உனக்கு, இது மறுபடியும் வெகு விரைவில தேவைப்படும் என்று  அந்த கத்தியை நண்பனிடம் திருப்பி கொடுத்தான்,


நம் பின்பக்கம் முதுகில் கத்தியால் குத்திய நண்பர்கள் நம் முன்பக்கம் வந்து நண்பா உன் முதுகில் இரத்தம் வழிகிறதே என்று பரிதாபம் காட்டுவார்கள்

நம்மை சுற்றி இருக்கும் போலி நண்பர்கள் நம்மை தோளில் தட்டி அரவணைத்து கொள்வதை கண்டு அஞ்சாலமே தவிர எதிரிகள் நம்மை வந்து அட்டாக செய்துவிடுவார்களோ என்று பயப்படத் தேவையில்லை .காரணம் எதிரிகளிடம் நாம் ஜாக்கிரதையாக இருப்போம் ஆனால் நண்பர்களிடம் அஜாக்கிரதையாக இருப்பதால் வரும் ஆபுத்துக்கள்தான் இந்த காலத்தில் அதிகம்


ஒருவர் செய்த நல்ல காரியங்களை பெரிதுபடுத்தி பேச வேண்டிய நண்பர்களோ அவர் செய்து சிறு தவறை உலகறிய செய்கிறார்கள்.

உங்கள் நண்பர்கள் உங்களிடம் கோபப்பட்டு பேசும் போது பதிலுக்கு உடனே கோபப்பட்டு பேசாமல் அவர்களின் கோப பேச்சை முழுவதுமாக கேளுங்கள் அப்போதுதான் அவர் உங்களை பற்றி மனதில் நினைத்து வைத்திருக்கும் உண்மையான எண்ணங்கள் கோபமாக வெளிவரும்

 உங்களின் உண்மையான நண்பர்கள் யார் என்று தெரிந்து கொள்ள விரும்பினால் இங்கே க்ளிக் செய்து படிக்கவும்

அன்புடன்
மதுரைத்தமிழன்

14 comments:

  1. உண்மை...

    அவர்கள் கோபப்பட்டு பேசும் போது தான் நம்மை பற்றிய உண்மை எண்ணங்கள் வெளியே வரும் ..

    ReplyDelete
  2. அறிமுகங்களையும் நட்பாக தவறாக எடை போடுகிறோம் போலி நட்புகள் முன்பல்லால் சிரித்து கடைவாய்ப்பல்லில் கடிப்பவர்கள்

    ReplyDelete
    Replies
    1. அறிமுகங்கள்தான் நட்பாக மாறுகின்றது

      Delete
  3. நம்மை சுற்றி நிறையப்பேர் இருப்பாங்க . நாம்தானே கவனமா இருக்கணும்.முதுகை பேக்கு மாதிரி காட்டிட்டு குத்திட்டாங்கனு சொல்லக்கூடாது :) .நான் யாருக்கும் போலியான முகத்தை காட்ட விரும்பலை .நேர்மையும் உண்மையும் கடிதலும் சிலருக்கு பிடிப்பதுமில்லை .உங்க பழைய பதிவையும் படித்தேன் ஏற்கனவே கருத்தும் கொடுத்திருக்கேன்

    ReplyDelete
    Replies

    1. தெரியாதவர்களிடம் கவனிப்பாக இருக்கலாம் ஆனால் நண்பர்களிடமும் உறவுகளிடமும் நம்பிக்கை வைக்க வேண்டும் நீங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருக்கும் அதில் கவனமாகத்தானே நண்பர்களை சேர்த்து இருப்பீர்கள் அப்படி சேர்த்த நீங்கள் அந்த அக்கவுண்டையே மூடிவிட்டது எதனால்?

      Delete
  4. இந்த விசயத்தில நான் கண்ணதாசன் அங்கிளின் கருத்தைத்தான் பின்பற்றுவேன், அதாவது நண்பர் என ஆனபின் சந்தேகம் கொள்ளக்கூடாது, நம்பிடோணும், ஆனா அந்த நம்பிக்கைக்குத் துரோகமாக அவர்கள் நடந்தால், அதைக் கடவுள் நிட்சயம் கவனிப்பார்...

    ReplyDelete
    Replies
    1. அட அட நீங்கள் இப்படி ஒரு அப்பாவியா

      Delete
    2. ஹா ஹா மதுரை அவங்க ஞானி!!!! புலியூர் பூஸானந்தா!!!

      கீதா

      Delete
  5. சிறப்பு
    பாராட்டுகள்

    ReplyDelete
  6. அத்தனையும் சரியே மதுரை.

    நம்மகிட்ட உண்மையான அன்பு இருக்கறவங்க நம்மிடம் தனியே தான் நம் தவறுகளைச் சொல்லுவாங்க....இடித்துரைப்பவன் நண்பன் என்பதுக்கு ஏற்ப...

    கீதா

    ReplyDelete
  7. மதுரை உங்களின் பழைய பதிவு செம பதிவு!

    எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நமது மைனஸையும் ஏற்றுக் கொண்டு பழகும் நட்பு அதற்கு நிகர் எதுவும் இல்லை...

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.