Saturday, February 2, 2019

அதிர்ச்சி தரும் செய்தி

பிரபல வலைப் பதிவரும், எனது மதிப்பிற்குரியவருமான  திருச்சி திருமழபாடி தி. தமிழ் இளங்கோ  அவர்கள்  02.02.2019 சனிக்கிழமை காலை 9.15 மணி சுமாருக்கு, மூச்சுத் திணறல் அதிகமாகி காலமானார் என்பதை  தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களின் பேஸ்புக் வாயிலாக அறிந்து மனம் கனத்தது/*

நான்  இந்தியா வந்தால் கண்டிப்பாக நேரில் பார்க்க வேண்டிய மரியாதைக்குரிய மனிதர் இனி இல்லாமல் போய்விட்டார் என்பதை நினைக்கும் போது மனதிற்கு மிக வருத்ததை தருகிறது. பதிவர்களின் சம்பந்தப்பட்ட எந்த ஒரு நிகழ்வானாலும் அவர் பதியும் போட்டோ பதிவுகளின் மூலம் மிக தெளிவாக அந்த இடத்திற்கு நாமும் சென்று வந்தது போல ஒரு உணர்வை தர வல்லவர்,யாரையும் காயப்படுத்தாமல் பதிவுகளை தந்து எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர்..




 அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை... அவரது இழப்பில் இருந்து மீண்டு வர கடவுள்தான் அவர்களின் குடும்பத்தாருக்கு பலத்தை தரவேண்டும்






இளங்கோ அவர்களின்  இறுதி யாத்திரை நாளை 03.02.2019 ஞாயிறு காலை 10 மணி சுமாருக்கு No. 27, துளசி இல்லம், 3rd Cross, நாகப்பா நகர், Near KK Near Bus Stand ....,  திருச்சியிலிருந்து புறப்பட உள்ளது.*

*தொடர்புக்கு:*
*அரவிந்தன் (ஒரே மகன்)*
*9486114574

வருத்ததுடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. நல்ல நண்பர் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்

    ReplyDelete
  2. இளங்கோ அண்ணன்.அவர்களுக்கு எனது அஞ்சலிகள் . அவரது ஆன்ம சாந்திக்கும் அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறவுகளுக்கும் மற்றும் உற்ற நண்பர்களுக்கும் பிரார்த்தனைகளை ஏறெடுப்போம் .

    ReplyDelete
  3. கொஞ்சக் காலமே பழகியிருந்தாலும் மனதில் நிறைந்திருக்கிறார் இளங்கோ அண்ணன்... அதுக்குள் அஞ்சலியா என மனம் கனக்கிறது...
    கோபு அண்ணனின் மெயில் மூலம் நேற்று தகவல் அறிந்ததிலிருந்து... அதே நினைவாகவே இருக்கு.. அவரின் மனம் அமைதி பெறவும் குடும்பத்தாரின் மனம் ஆறுதல் அடையவும் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  4. நான் முகநூலில் ரமணி ஐயாவின் பதிவைக் கண்டு அறிந்தேன். என்னாலும் அவரது இழப்பைத் தாங்கிகொள்ள முடியவில்லை. முகநூலில் பதிந்த பதிவின் இணைப்பைப் பகிருகிறேன்.
    https://www.facebook.com/yarlpavanan/posts/2503621176346823

    ReplyDelete
  5. தமிழ் இளங்கோ அவர்களைப் புதுக்கோட்டைவலைப்பதிவர் சந்திப்பில் சந்தித்து பேசியது நினைவுக்கு வந்தது. அவர் உடல் நலக்குறைவாக இருந்துவந்தாலும் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது.

    எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகள் மற்றும் பிரார்த்தனைகள். அவர் குடும்பத்தார் இந்தத் துயரத்திலிருந்து மீண்டிட பிரார்த்தனைகள்.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  6. எனது வருத்தங்களும் அஞ்சலிகளும் ..

    நம்ம இயலா இழப்பு ...

    ReplyDelete
  7. வருத்தமான செய்தி .

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.