மதுரைத்தமிழன் வீட்டில் நகைச்சுவை பொங்கல்
மனைவி : என்னங்க இன்னைக்கு பொங்கல்
மதுரைத்தமிழன். : நீதான் தினமும் பொங்குறியே அதனால நம்ம வீட்டுல தினமும் பொங்கல்தானே
மனைவி : என்ன சொன்னீங்க
மனைவி : என்னங்க இன்னைக்கு பொங்கல்
மதுரைத்தமிழன். : நீதான் தினமும் பொங்குறியே அதனால நம்ம வீட்டுல தினமும் பொங்கல்தானே
மனைவி : என்ன சொன்னீங்க
மதுரைத்தமிழன். : இல்லம்மா உன்னை தினமும் பார்க்கும் போது என் மனசு பொங்கலைப் போல பொங்குகிறது என்று சொன்னேன் அம்மா
மனைவி : அதுதானே..
மதுரைத்தமிழன். : பொங்கலுக்கு என்னம்மா. நம்ம ...சாரி நான் என்ன பண்ணனும்?
மனைவி : நீங்க பொங்கல் எல்லாம் பண்ண வேண்டாம். நம்ம பக்கத்துவீட்டுல உள்ளவங்க எல்லாம் பொங்கல் பண்ணி நமக்கு கொடுப்பாங்க. அப்ப நீங்க என்ன பண்ணுறீங்கன்னா எதிர்த்த வீட்டுல தரதை பக்கத்துவீட்டுலேயும் பக்கத்து தரதை அடுத்த வீட்டிற்கும் இப்படி ஒவ்வொரு வீட்டில் இருந்து வரதை மாற்றி மாற்றி நாம பண்ணியதுன்னு சொல்லிக் கொடுத்திடுங்க...(மதுரைத்தமிழன் :மைண்ட் வாய்ஸ் நல்ல வேளை நம்ம பக்கத்துவீட்டுல அதிரா இல்லை...ஒருவேளை அவங்க இருந்திருந்து அவங்க நமக்கு பொங்கலை கொடுத்து அதை மற்ற வீட்டில் கொடுக்கும் போது என்ன சொல்லி கொடுப்பது என்று குழப்பமே வந்திருக்கும்... ஹும்ம்ம்தப்பிச்சேண்டா)
மதுரைத்தமிழன். அப்ப நமக்கு பொங்கல் நீ பண்ணப் போறியா?
மனைவி : பொங்கல் மிகவும் ஸ்விட் அதெல்லாம் நமக்கு கொஞ்சம் கூட வேண்டாம்
மதுரைத்தமிழன். என்னடி ஒரு நல்ல நாளு அதுவுமா இப்படி பண்ணுற
மனைவி : இங்க பாருங்க இன்று நல்ல நாள் என்பதால்தான் நான் பொங்காமா உங்க கேள்விக்கு பொறுமையா பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன்.. இதுக்கு மேலே ஏதாவது பேசி என்னைப் பொங்க வைச்சிருராதீங்க..
மதுரைத்தமிழன். ............................................................... ( வாயை முடிக் கொண்டு மனதில் ஏதோ பேசியதால் அவர் என்ன பேசினார் என்பது தெரியவில்லை
அன்புடன்
மதுரைத்தமிழன்
எதுக்குப் பிரச்சனை என்றக்கும் போல்
ReplyDeleteநாமே பொங்க்கிறவேண்டியது தானே
எதுக்குப் பிரச்சனை (பொங்கலைச் சொன்னேன் )
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
எங்க வீட்டம்மாவிற்கு தெரிந்த ஒரே விஷயம் பொங்குறதுதான் அதனால நான் அந்த பக்கமே போறதில்லை
Deleteஹா ஹா ஹஹ்கா அதான் பூரிக்கட்டை பறந்திருச்சே!!!
Deleteகீதா
நன்றாகவே பொங்கினீர்கள்.
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
நான் பொங்குறதில்லை அடங்குகிறதுதான் நம்ம வேலை
Deleteநன்றாக பொங்கியது பொங்கல்/
ReplyDeleteஹீஹீ
Deleteஹா... ஹா...
ReplyDeleteஇனிய தமிழ்த் திருநாள் வாழ்த்துகள்...
Deleteசக பதிவரிடம் அவர் மனைவியார் பொங்குகிறார் அதை பார்த்து பதிலுக்கு நீங்கள் பொங்காமல் சிரிக்கிறீங்கலே தனபாலன் ..ஹும்ம்ம்ம் எனக்கு அழுகையாக வருது
ஹாஹா ஹாஹா....
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
அட நீங்களும் தனபாலன் கூட சேர்ந்து சிரிக்கிரீங்களா வெங்க்ட்ஜி
Deleteஹா... ஹா.... ஹா...
ReplyDeleteபடங்களை(யும்) ரசித்தேன்.
இனியாவது நல்ல படங்களைத் தேர்ந்தெடுக்கவும். ஹா ஹா.
Deleteஅச்சச்சோ இப்போதானே பார்க்கிறேன்ன்.. நயனை விட்டுப்போட்டு அனுக்காவுக்கு தாவிட்டாரோ ட்றுத் கர்ர்ர்ர்:))..
Deleteஹையோ ஸ்ரீராமுக்கு ராகுகேது மாற்றம் போல:))
ஸ்ரீராம் என்னை பார்த்து சிரிப்பு படங்களை பார்த்து ரசிப்பு ஹும்ம் நல்லது இல்லை.....சீக்கிரம் உங்க வீட்டாம்மா கிட்ட நீங்க ரசிக்கிறதை பற்றி பேசனும்
Deleteநெல்லைத்தமிழன் எனக்கும் நல்ல படங்களைத்தான் போடனும் ஆசை ஆனால் இங்கு நான் தேர்ந்தெடுத்து போட்டது நல்ல எனக்கு பிடித்த சேலைக்காக
Deleteநினைச்சேன் நெல்லை சொல்லுவார்னு...நெல்லை உங்களின் புத்தகக் கண்காட்சி பதிவை பார்க்கலை போல!!!
Deleteஸ்ரீராம் ரசித்திருப்பார்.....
அதிரா சரியா கேட்டீங்க நயனை விட்டுப் போட்டு மதுரை இப்ப கட்சி மாறிட்டாரோ....அப்ப ஸ்ரீராம்? இந்த அரம என்ன செய்ய்து?!!!!! இதப் பார்த்துக்கிட்டு
கீதா
பொங்கல் வாழ்த்துகள்.
ReplyDeleteபடங்களை ரசிக்கவில்லை (ஹா ஹா ஹா)
ரசிக்காமல் சிரிப்பு வராதே?:)).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரசிச்சால் என்ன தப்பென்கிறேன்ன்ன்ன் ஹா ஹா ஹா நானும் சிரிக்கிறேன்ன்:))
Deleteஅதிரா ரசிப்பது தப்பில்லை ஆனால் படத்தை பார்த்து பொறாமைபடக் கூடாது ஆமாம் படத்தை பார்த்து நீங்கள் அழ வல்லவா செய்யணும் ஆனால் சிரிக்கிறீங்க....ஹும்ம் ஏதற்கு டாக்டரை பாருங்க ஹீஹீ
Deleteஅதிரா நான் அனுவிற்காக படம் போடவில்லை எனக்கு பிடித்த கலர் சேலை என்பதால் இங்கே இந்த படங்களை பதிந்து இருக்கிறேன்
Deleteஅதிரா நெல்லையின் சிரிப்பு ரசித்த சிரிப்பில்லை....அதாவது அவர் கிண்டல் செய்கிறாராம்...
Deleteமதுரை அனுஷின் சேலைனு சொல்லி எஸ்கேப் ஆகிடார் பாருங்க அதிரா,,,
கீதா
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என் பொங்கல் கேக் போல கட் பண்ணிக் கொடுக்கும்படியா இருக்கும்:)).. அதனால நீங்க எந்த வீட்டுக்கு குடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டே கண்டுபிடிச்சிடுவினம் இது அதிரா பொயிங்கியது என:)) ஹா ஹா ஹா...
ReplyDeleteஆமா உலகுக்கே தெரியுமே நீங்க செஞ்ச couscous பொங்கல் பத்தி
Deleteஎன்னது அதிரா பொங்கல் பண்ணினாங்களா?
Deleteஇல்லை அதிரா நீங்கள் செய்யும் கேக்குதான் பொங்கல் மாதிரி இருக்கும் என்று வாட்சப்பில் ஏஞ்சல் சொல்லி கலாய்க்கிறாங்க
Deleteகட் /வெட் பண்ணி குடுக்கறது கேக் ஹையோ ஹையோ நல்லவேளை மதுரைத்தமிழனின் பக்கத்துக்கு வீட்டு சைனீஸ் கேர்ள் தப்பிச்சா :)
ReplyDeleteஹீஹீ :) நான் செய்ற பொங்கல் ரொம்ப ஈசியே சாப்பிடவேணாம் அப்டியே குடிக்கலாம்
அட ராமா பாயசத்திற்கும் பொங்கலுக்கும் உங்களுக்கு வித்தியாசமே தெரியலையே.....ஏஞ்சல்....உங்களை கட்டிக்கிட்டு எங்க அண்ணாச்சி எப்படி கஷ்டப்படுகிறார் என்பது புரிகிறது
Deleteஅட எனக்கு தெரியாமல் என் பக்கத்து வீட்டில் சைனீஸ் கேர்லா''? எங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ளது எல்லாம் உங்களை மாதிரி வயசான கிழவிங்கதானே
Deleteஏஞ்சல் ஏன் அந்த ரகசியத்தை இப்படி பப்ளிக்கா போட்டுட்டீங்க..அதான் அந்த சைனீஸ் கேர்ல் பக்கத்துவீடுன்னு...!!! பாருங்க மதுரைக்கு தெரியலை...!!!
Deleteகீதா
எங்களுக்கு உங்ககிட்டருந்து பொங்கல் சீர் இன்னும் வந்து சேரலைன்னு இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்
ReplyDeleteஉங்களது கிறிஸ்துமஸ் பரிசு வந்ததும் உடனே பொங்கல் சீர் வந்து சேரும்
Deleteபதிவை வாசித்து சிரிச்சுட்டேன் மதுரை...!!
ReplyDeleteகீதா