Saturday, January 5, 2019

@avargalunmaigal

ராஜா என்று பெயர் வைத்தர் எல்லாம் #ஹெச்.ராஜாவாக ஆக முடியாது. இதை #இளையராஜா புரிந்து கொள்ள வேண்டும்.


செய்தி :இன்று இருப்பவர்கள் இசையமைப்பாளர்களே இல்லை. எனக்கு மட்டுமே இசை வரும். இதை பெருமைக்காக சொல்லவில்லை - #இளையராஜா.

இன்றைய இசையமைப்பாளர்களில் பொதுஅறிவு இல்லாத இயளையராஜாவை போல வேறு எந்த இசைஅமைப்பாளரும் இல்லை...இதை இளையராஜாவை இழித்துரைப்பதற்காக சொல்லவில்லை-மதுரைத்தமிழன்






இளையராஜவின் இசையை பிடித்த அளவிற்கு இளையராஜவை பலருக்கு பிடிக்காமல் போய் கொண்டிருக்கிறது வாயை மூடி இசையை மட்டும் இளையராஜா கவனித்தால் சாகும் போது பெரும் புகழோட போவார் இல்லை என்றால் ஹெச்.ராஜாவை போல வாரிக் கட்டிக் கொள்வார் என்பது நிச்சயம்


மஹா மதை இளையராஜா இன்னும் சிறந்த இசை அமைப்பாளர் என்றால் அவர் இப்போது போடும் திரைப்பட இசைகள் எல்லாம் ஏன் சூப்பர் ஹிட் ஆகி எல்லோர்வீட்டிலும் டீக்கடையிலும் பஸ்களிலும் ஒலிக்கவில்லை. சரக்கு தீந்துடுச்சா கோவாலு

மஹா மேதைகள் உருவாகி கொண்டே இருப்பார்கள் என்பது இந்த(இளையராஜா) மேதைக்கு தெரியாமல் போச்சே

இசையில் உள்ள ஞானம் இளையராஜாவுக்கு அறிவில் இல்லாமல் போனது ஏன்?
@avargalunmaigal


இளையராஜா ஹெ.ராஜாவாக ஆகி கொண்டிருக்கிறாரா என்ன பேசாமல் இளையராஜாவை பாஜாகவின் தேசிய செயலாளராக நியமித்துவிடலாமே


ராஜா என்று பெயர் வைத்தர் எல்லாம் #ஹெச்.ராஜாவாக ஆக முடியாது. இதை #இளையராஜா புரிந்து கொள்ள வேண்டும்.


அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி: இன்று கொஞ்சம் நேரம் கிடைத்ததல் இணையம் வந்த போது இளையராஜாவிற்கு பொங்கல் வைத்து கொண்டிருந்ததால் நானும் அதில் ஐக்கியமாகி இப்படி பொங்கல் வைத்துள்ளேன்

2 comments:

  1. அப்படியானால் இவரது குஞ்சுகள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜாவும் இசையமைப்பாளர்கள் இல்லைதானே...

    ReplyDelete
  2. இசையால் மகிழ்வித்தவர் அதை மட்டும் தொடர்ந்தால் நல்லது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.