Tuesday, January 1, 2019

@avargalunmaigal
ஒரு செய்தி படித்ததும் எல்லோரும் பொங்கு பொங்கு என்று பொங்குவார்கள் அதன் பின் அடுத்த செய்திக்கு போய்விடுவார்கள்.. இந்திய தமிழர்கள் வாயிலே பொங்கல் வைத்து கொண்டிருக்கும் போது நீயூஜெர்ஸியில் வசிக்கும் ஒரு இலங்கை தமிழர்,  நல்லா வச்சு செய்யுது  இருக்கிறார்.

எது நடந்தாலும் அதைப்பற்றி பேசிவிட்டும் எழுதிவிட்டும் செல்வதால் எந்தப்பயனுமில்லை. ஏதாவது செய்யக்கூடிய நிலையில் இருப்பவர்கள் இது போன்ற அநியாயங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதை  சிவா நமக்கு உணர்த்தியுள்ளார்


இவரை போல இப்படித்தான் ஆரோக்கியமாக ஆட்டம் ஆட வேண்டும்..வாழ்த்துக்கள் சிவா.  Siva you are really great. உங்களை நினைத்து பெருமையடைகிறேன்


அப்படி சிவா என்ன செய்தார் என்று அறிய மேலேபடித்து பாருங்கள்


சாதி பார்த்தால் இனி பிசினஸ்க்கு ஆப்பு..

==========================

@avargalunmaigal
நேற்று சென்னையில் ஒரு கம்பெனி வேலைக்கு “பிராமணர்கள் மட்டும்” என பத்திரிகையில் விளம்பர படுத்திய செய்தி படித்து கொஞ்சம் ஆடித்தான் போனேன். இந்த காலத்திலும் இப்படியா என ஆராய இது ஒன்றும் புதிதல்ல என அறிந்தேன். அத்தோடு தமிழகத்தில் மற்ற சாதியினரும் வெளியே சொல்லாமல் இப்படி ஒரு கீழ்த்தரமான செயலை செய்கிறார்கள் எனவும் அறிந்தேன். துணி வியாபாரிகள், வீடு கட்டுபவர்கள், நகை வியாபாரிகள் என பல சாதி மக்கள் தங்கள் சாதியினருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்குகிறார்கள் என அறிந்தேன்.

இது சட்டத்துக்கு விரோதமானது என்பது ஒருபுறம் இருக்க, தங்கள் சொந்த வியாபாரத்தில் இப்படி செய்பவர்களை தண்டிப்பது கடினம். ஆனால் என்னால் சும்மா இருக்க முடியவில்லை. இந்த கம்பனிகளின் வாடிக்கையாளர்கள் எல்லா சாதி மக்களும் இருக்க அதெப்படி ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் வேலை வாய்ப்பு? அதுவும் எங்களை போன்று கார்பொரேட் கம்பனிகள் இவர்களின் client ஆகவும் இருக்குகிறோம். சாதி, மதம், மொழி வேற்றுமை பார்ப்பது கார்பொரேட் கம்பனிகளில் மிக பெரிய குற்றம் . இது சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கம் நான் நன்கு அறிவேன்.

நேற்று கொஞ்சம் வெட்டியாக வீட்டில் இருந்ததால் ஏதாவது செய்வோம் என இந்த குறிப்பிட்ட கம்பெனியை ஆராய்ந்தேன். கம்பெனியின் CEO சென்னையில் குடியேறிய ஒரு வட இந்தியர். சீனாவில் வேலை செய்தவர். இவர்களுக்கு பல கார்பொரேட் clients. அதில் ஒன்று Cognizant. அது போதும் எனக்கு.

அந்த வட இந்திய CEOவை LinkedIN இல் தொடர்பு கொண்டு “உனக்கு வெட்கமாக இல்லையா” என கேட்டேன். “மன்னித்து விடுங்கள் இது ஒரு human error” என சப்பையாக ஒரு பதில் வந்தது.

Cognizant நிறுவனத்தின் Corporate Responsibility Head எனது நண்பன். அமெரிக்கன். cognizant நிறுவனத்தின் மிக பெரிய பங்குதாரர்கள் நாங்கள். முதலில் “சாதின்னா என்ன“ என்று அப்பாவியாக கேட்டு, பின் ஆடிப்போய் . அவன் சென்னை ஆபீஸ்க்கு தொடர்பு கொண்டு அந்த குறிப்பிட்ட கம்பெனியின் காண்ட்ராக்டை இன்று கேன்சல் செய்ய உத்தரவிட்டு விட்டான். காக்னிசண்ட் கம்பனிக்கு வேலை செய்யும் மற்ற கம்பெனிகளையும் ஆராய உத்தரவு போட்டு விட்டான்.

மன்னித்து விடுங்கள் நாளை “நாங்கள் இப்படி செய்தது தவறு “ என்று பத்திரிகையில் ஒரு முழு பக்க விளம்பரம் தருகிறோம் என்று அந்த CEO விடம் இருந்து இன்று காலை எனக்கு ஒரு மெயில்..

There is no place for racism in corporate world..

Siva Nadarajah https://www.facebook.com/siva.nadarajah.7



இப்படி பிராமணர்கள் மட்டுமல்ல வேறு எந்தவொரு சாதியினரும் மதத்தினரும் இது போல அறிவிப்புகளோ அல்லது அறிவிப்புக்கள் இல்லாமல் செய்தால்  சிவா செய்ததை போலவே அனைவரும் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி செய்ய வேண்டும்..அப்போதுதான் சாதி மத பேதங்கள் குறைந்து மனித நேயத்தோடு வாழ முடியும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. சாதியை ஒழிக்க முடியாது போல!

    ReplyDelete
  2. அவருக்குச் செல்வாக்கு இருந்தது முடிந்ததைச் செய்துவிட்டார். பாராட்டுவோம். ஆனால் இந்த வேரோடி வியாபித்த பெரு மரத்தின் இச் சிறு கிளையொடித்தால் போதுமா? அழிக்க முடியுமா? பார்ப்பனர் மாத்திரமே, அத்தனையும் தனக்குக் கீழ் என கொண்டுள்ளதே!

    ReplyDelete
  3. என்னதான் பேசினாலும் இது நம்சமூகத்தில் புரைஓடிப்போன ஒன்றுமறுக்க இயலாது

    ReplyDelete
  4. இது உண்மையில் ஆச்சர்யமான செய்திதான். அவர் நல்ல மனம் வாழ்க!
    இலங்கை தமிழர்கள் சாதிவெறியில் ஒன்றும் பார்ப்பனர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை. பார்ப்பனர்களுக்கும் யாழ்ப்பாண வேளாளர் சாதியினருக்கும் 99% ஒற்றுமை இருக்கிறது என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். இல்லாத 1% எதுவென்று தானே பார்க்கிறீங்க? பார்ப்பனர்கள் வெஜிடேரியன், இவர்கள் நடப்பது பறப்பது நீந்துவது எல்லாத்தையும் விடமாட்டாங்கள். சிலர் 100% வெஜிடேரியனும் உண்டு, அவங்க இன்னும் கொஞ்சம் மேல் சாதி.
    ஆனால் இங்கே இலங்கையில் யாரும் தீண்டாமையை வெளிப்படையாக காட்ட முடியாது. அதற்கு காரணம் சட்டத்தில் இடமில்லாதது மட்டுமில்ல, மற்ற இனத்தான் யாரும் சல்லிக்காசுக்கு மதிக்க மாட்டான். இங்குள்ள முஸ்லிம்களுக்கு சாதி என்றால் என்னவென்றே தெரியாது. சிங்களவர்களிடம் சாதி உண்டு, ஆனால் அது அதுபாட்டுக்கு இருக்கும், இப்போதுள்ள இளைய தலைமுறையில் 99% பேருக்கு தாங்கள் என்ன சாதி என்று தெரியாது.
    ஆனால் கிட்டத்தட்ட இங்குள்ள எல்லா தமிழனும் அமெரிக்காவுக்கு என்ன அந்தாட்டிக்காவுக்கே போனாலும் இந்த சாதிய மட்டும் விடாமல் காவிக்கொண்டு திரியிறான்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.