Sunday, January 20, 2019


இப்படியெல்லாம் சென்னை புத்தக கண்காட்சியில் நடக்கிறதா  'அனுபவங்கள்'

சென்னை புத்தக கண்காட்சிக்கு  வெளிநாட்டில் இருந்து வந்த மதுரைத்தமிழனின் அனுபவம்


கடந்த  வாரம் சென்னைக்கு அவசர வேலையாக வந்த நான் புத்தக கண்காட்சிக்கும் செல்லும் வாய்ப்பு கிட்டியது.அதைப்பற்றிய பதிவே இது. நட்புகள் மன்னிக்கவும் அடுத்த தடவை வரும் போது உங்களை கண்டிப்பாக சந்திக்கிறேன்.


சென்னைக்கு  வந்த நான், வந்த வேலையை முடித்ததும் இரவு 3 மணியளவில்தான் எனது விமானப்பயணம் என்பதால் அதுவரை எனது நண்பனின் வீட்டில் தங்கி இருந்தேன், எனது நண்பணோ என்னிடம் ஒரு உதவி கேட்டான். அதாவது அவன் பழைய கேர்ள் ப்ரெண்டு ஒருத்தி புத்தக கண்காட்சிக்கு போகிறாள் என்றும் அவன் மட்டும் தனியாக போனால் அவன் மனைவி அதை கண்டுபிடித்துவிடுவாள்  ஆனால் உன் மீது என் மனைவி நம்பிக்கை வைத்திருப்பதால் உன் கூட சென்றால் சந்தேகம் ஏதும் கொள்ளமாட்டாள். அதனால் நீ கண்டிப்பாக புத்தக கண்காட்சிக்கு வர வேண்டும் என்று சொல்லி என்னை அழைத்து சென்றான்.


சரி அவன் ஆசையை நிறைவேற்ற அவனுடன் நானும் சென்றேன். கண்காட்சி வாயிலில் என்னை கழட்டி விட்டுவிட்டு மைச்சான்  ஒரு மூன்று மணி நேரம் இங்கே ஏதாவது செய்து கொண்டிரு  அதன் பின்  நான் வந்து உன்னை சந்திக்கிறேன் என்று சொல்லி மறைந்து விட்டான்.


சரி என்று நான் கண்காட்சி நடக்கும் இடத்திற்குள் நுழைந்தேன் உள்ளே நுழைந்ததும் திகைத்து போனனேன் காரணம் நண்பன் சொன்னது புத்தக கண்காட்சி ஆனால் நான் பார்த்ததோ அழகான பெண்களின் கூட்டத்தை அவர்கள் மலர்கள் போல எங்கும் விதவிதமான கலர் சேலைகளிலும் சுரிதார்களிலும் பரவி இருந்தனர். அப்ப நீங்க கேட்க கூடாது ஆண்கள் யாருமே உங்கள் கண்களில் தென்படவில்லையா என்று? ஆண்கள் தென்பட்டார்கள் அவர்கள் மலர் செடியில் உள்ள முட்களைப் போலவே என் கண்களுக்கு தெரிந்தனர். இவ்வளவு பெண்களையும் ஒரே இடத்தில் இப்படி பார்த்தது எனக்கு மூச்சை நின்று விடும் போல இருந்தது ( சகோ ராஜி ,அதிரா , ஏஞ்சல் அனைவரும்அப்ப உங்க மூச்சு ஒரே அடியாக நிற்கவில்லையா  என்று மனதுக்குள் கேட்பது என் காதில் விழுகிறது ) சரி எவ்வளவு நேரம்தான் பட்டிக்காட்டன் மிட்டாய் கடையை வெரிச்சு பார்ப்பது போல பார்பது என்று கருதி ஒவ்வொரு ஸ்டாலாக போய் பார்க்கலாம் என்று கருதி அந்த இடத்தை விட்டு மனவிருப்பம். இல்லாமல் நகர்ந்தேன்.


முதல் ஸ்டாலில் நுழைந்து சிறிது நேரம் அங்குள்ள புக்கை எல்லாம் பார்த்துவிட்டு கடைசியாக பில் போடுபவரிடம் வந்து ஐயா ஒரு 3 கிலோ நகைச்சுவை புத்தகங்களும் 2 கிலோ இலக்கிய புத்தகங்களும் 2 கிலோ கவிதை புத்தகமும் ஒரு கிலோ  சிறுகதை புத்தகங்களும் தாருங்கள் என்றேன் அவனோ என்னை  ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு வாட் யூ வாண்ட் சார் என்றான். அபோதுதான் எனக்கு புரிந்தது சென்னையில் இருக்கும் தமிழ் ஆட்கள் இங்கிலீசில்தான் பேசுவார்கள் நாம் தமிழில் பேசியது அவனுக்கு புரியவில்லை போல என்று மீண்டும் நான் தமிழில் சொன்னதை இங்கிலீசில்சொன்னேன் அப்போதும் அவன் ஒரு மாதிரியாக என்னைப் பார்த்து சார் நீங்க எங்கே இருந்து வருகிறீர்கள்(மெண்டல் ஹாஸ்பிடல் என்று நினைத்தானோ என்னவோ ) என்று தெரியவில்லை இங்கு புத்தகங்களை எல்லாம் கிலோ கணக்கில் விற்பனை செய்வதில்ல்லை என்றான்.


உடனே நான்,  வெளிநாட்டில் இருந்து வந்துவிட்டவன் என்று நினைத்து நம்மை ஏமாற்றுகிறான் என்று கருதி தம்பி இங்கே பாரு என்னை ஏமாற்ற முயற்சிக்காதே? இன்று காலையில் கூட என் நண்பன் வீட்டில் பார்த்தேன் அவன் மனைவி பழைய புத்தகங்களை கிலோ கணக்கில்தான் பழைய பேப்பர்காரணுக்கு போட்டாள் அதை நான் பார்த்தேன் என்றேன், அதற்கு அவன் சார் பழய புத்தகம், பேப்பர் எல்லாம் அப்படிதான் வாங்குவாங்க ஆனால் புது புத்தகம் எல்லாம் அப்படி வீற்கமாட்டார்கள் என்று சொன்னான். அதற்கு நான் போடா நீ என்னை ஏமாற்ற பார்க்கிறாய் என்று சொல்லி அந்த ஸ்டாலை விட்டு வெளியே வந்துவிட்டேன்.


அதன் பிறகு ஒரு நாலைந்து ஸ்டால் தள்ளி  ஒரு ஸ்டாலுக்குள் நுழைந்து தம்பி இங்கு பழைய புத்தகங்களை கொடுத்து எக்ஸேஞ் பண்ணும் ஆஃபர் உண்டா என்று கேட்டேன். அதற்கு அவன் என்னை முறைத்து வந்துட்டாண்டா சாவுகிராக்கி என்று திட்டுகிறான் ,காலையில்தான் என் நண்பனின் மனைவி பழைய நகையை கொடுத்து புதிய நகையை வாங்கினாள், அதைப் பார்த்து நானும் அதே ஆஃபர் இங்கு உண்டா என்று கேட்டேன் அதில் என்ன தப்புங்க.


இந்த தமிழ்நாட்டில் யாரும் வெளினாட்டில் இருந்து வந்தால் இப்படிதான் ஏமாத்துறாங்க... சரி இது எல்லாம் நமக்கு ஒத்து வராது என்று கருதிய நான் மற்றவங்க எல்லாம் எப்படி புக் வாங்குகிறாங்க என்று பார்க்க ஆரம்பிதேன்...


முதலில் ஆண்களை வாட்ச் பண்ண ஆரம்பித்தேன், அவர்கள் அந்த ஸ்டாலில் வந்து இருக்கும் பெண்களை பார்த்து கொண்டே கையில் எந்த புக் கிடைக்குதோ அதையெல்லாம் எடுத்து கொண்டிருந்தார்கள் ,சரி பெண்கள் என்ன பண்ணுகிறார்கள் என்று பார்த்தால் அவர்கள் மற்ற பெண்கள் அணிந்து இருக்கும் சேலைகள்  அவர்கள் அணிந்து இருக்கும் நகைகளை பார்த்தாவாறே கையில் கிடைத்த புக்குகளை எடுத்து கொண்டிருந்தனர். சரி அவர்கள் கூட வந்த சிறுவர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்று பார்த்தால் அவர்கள் அம்மா பசிக்கிறது ஏதாவது வாங்கி கொடுங்க என்று கேட்டுக் கொண்டிருந்தனர். அதற்கு அவர்கள் அம்மாக்கள் எல்லோரும் அறிவு பசிக்காக இங்கு பறந்து கொண்டிருந்தால் இந்த பக்கிகள் வயிற்று பசிக்காக பறக்கிறதுகள் என்று சொல்லி திட்டிக் கொண்டவாறே மற்ற பெண்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர்


சரி இந்த இடம் சரி வராது என்று நகர்ந்து வேற ஒரு ஸ்டால் சென்றேன். அப்போது அங்கு ஒரு இளம் பெண் பாரதியார் படம் போட்ட புத்தகங்களை வாங்கி கொண்டிருந்தார். அவரிடம் சென்று கையில் நான் எழுதி வைத்திருந்த பேப்பரை காண்பித்து இந்த புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று கேட்டேன் அதைப் பார்த்துவிட்டு எனக்கு தமிழ் படிக்க தெரியாது என்று சொன்னார். ஓ இவர் பாரதியார் புத்தகங்களை வாங்கி சிறையில் வைத்து அழகுபார்க்கும் ஆள் போலிருக்கிறது என்று நினைத்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்


அப்போது  வலைத்தளத்தில் எழுதும் ஒரு ப்ளாக்கரை பார்த்தேன் அவர் பெயர் ஞாபகம் வரவில்லை அவரிடம் நான் என்னை அறிமுகப்படுத்தி கொள்ளவில்லை காரணம் நாம என்ன அவ்வளவு பிரபலமா நாம பேரைச் சொன்ன அவர் தெரிஞ்சுகிறதுக்கு .அதனால் சொல்லாமல் அவர் கையில் இருந்த புத்தகங்களை பார்த்துவிட்டு அவரிடம் கேட்டேன் இதெல்லாம் மிக நல்ல புத்தகங்களா என்று கேட்டேன் அதற்கு அவர் சொன்னார் அப்படியெல்லாம் இல்லை சார் இதெல்லாம் எனது வலைத்தள நண்பர்கள் எழுதி வெளியிட்ட புக்கு இதில் இருந்த சில பாரக்களை எடுத்து என் தளத்தில் போட்டு அதை விமர்சிப்பது போல எழுதியவரை புகழ்ந்துவிடுவேன். அவ்வளவுதான் அதுக்கு அப்புறம் நான் என்ன உதவி கேட்டாலும் அவர்கள் எனக்கு செய்து தருவார்கள் அவர்களை பார்க்கும் போது எல்லாம் ஜூஸ் பஜ்ஜி நல்ல ஹோட்டலில் சாப்பாடு எல்லாம் அவர்கள் செலவில் வாங்கி தருவார்கள் என்று சொல்லி சிரித்தார்..


புக் வாங்குவதில் இப்படியெல்லாம் பலன் இருக்கிறது போல என்று நினைத்தவாறு அடுத்த ஸ்டாலுக்கு போனேன். சரக்கும் அதை மிக்ஸிங்க் செய்யும் முறைகள் என்ற புக் மிக பளபளப்பான அட்டையுடன் இருந்ததால் அதை எடுத்தேன். அப்போது அந்த ஸ்டாலில் ஒரமாக  உட்கார்ந்தவர் என்னைப் பார்த்து சிரித்தவாறே ரொம்ப நல்ல புக் சார் என்று சொல்லிவிட்டு நீங்கள் குடிப்பிங்களா என்று கேட்டார். அவரை பார்த்தது இவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்குதே என்று நினைக்கும் போதுதான் என் மைண்ட் முழித்து கொண்டது இவர்  எழுத்தாளர் சாரு நிவேதா அல்லவா என்று புரிந்தது சுதாரித்து கொண்டு  நான் குடிப்பத்தில்லை என் நண்பன் குடிப்பான் அவனுக்காக இதை வாங்கினேன் என்றேன் உடனே அவர் அப்படியா என்ற வாறு என் பெயர் சாரு  நிவேதிதா இது நான் எழுதிய புத்தகங்கள் இதையும் வாங்கி உங்கள் நண்பருக்கு கொடுத்து படிக்கச் சொல்லுங்கள் இதில் என் போன் நம்பரையும் எழுதி கையெழுத்து இட்டுள்ளேன். அதன் மூலம் என்னை தொடர்பு கொள்ளஸ் செல்லுங்கள். அவருக்கு நான் கூட்டும் வாசகர் விமர்சனக் கூட்டத்திற்கு அழைப்பு விடுவிக்கிறேன். அதுக்கு வரும் போது மட்டும் அவர் சரக்கு வாங்கி வந்தால் மட்டும் போது அதன் பிறகு குடித்துவிட்டு என்னவேணுமானாலும் பேசலாம் அதுதான் விமர்சனக் கூட்டம் படு ஜாலியாக் பேசலாம் என்றார்


அட ஆளைவிடும்ய்யா சாமி என்று நகர்ந்த போது தலையில் நச்சென்று ஏதோ கல் மாதிரி வந்து விழுந்தது என்னவென்று பதறியடித்து பார்த்தால் அது என் மனைவி என் மேல் விட்டு ஏறிந்த பூரிக்கட்டை நான் எத்தனை தடவ கத்துறது நான் கூப்டுவது கூட கேட்காமல் அப்படி என்ன பகல் கனவு என்று கத்தி மீண்டும் பூரிக்கட்டையை எடுப்பதற்குள் எழுந்து விட்டேன் .அந்த காலத்துல சொல்லுவாங்க யானை வரும் பின்னே  மணியோசை வரும் முன்னே ஆனால் என் வீட்டிலோ மனைவி வருவாள் பின்னே பூரிக்கட்டை வரும் முன்னே என்பது போல இருக்கிறது.


மக்களே கனவில்தான் இந்தியாவிற்கு வந்தேன் அதனால்தான் உங்களை சந்திக்க முடியவில்லை. ஆனால் நிஜத்தில் வரும் போது கண்டிப்பாக முடிந்த வரை அனைவரையும் சந்திக்க முயல்கிறேன்


நீங்களும் கட்டையை தூக்குவதற்கு முன்னால் நான் உங்களிடம் இருந்து எஸ்கேப் ஆகிறேன்


டிஸ்கி : எந்த பதிவைபடித்தாலும் நான் புத்தக கண்காட்சிக்கு சென்றேன் நான் வாங்கிய புத்தகங்கள் என்று லிஸ்ட் போட்டு நம்பளை வெறுப்பு ஏத்துறாங்க அப்படி இருக்கும் போது நாமவும் கண்காட்சி பற்றி பதிவு போடலைன்னா நம்பளை பதிவுலகம் ஒதுக்கி வைத்திடும்ல அதுக்குதான் இந்த பதிவு

இது 2014 ல் வந்த பதிவு  நமது நண்பர்கள் இட்ட கருத்துக்களை அங்கே சென்று படிக்கலாம்


கொசுறு: நேரம் கிடைக்காததால் இந்த வருடத்தில் பதிவுகள் போடாமல் பேஸ்புக்கில் புத்தக் கண்காட்சியின் போது காலாய்
த்து போட்ட சிறு சிறு பதிவு

புத்தக கண்காட்சியில் நான் போட்ட மலிவு விலை புத்தகம்தான் இன்று அதிக அளவில் விற்பனையாகி இருக்கிறது என்று நண்பர் பெருமைபட்டுக் கொண்டார் .ஒருவேளை அவர் எழுதிய புத்தகம் மிக அற்புதமாக இருக்குமோ என்று இன்னொரு நண்பரிடம் விசாரித்த போது சொன்னார் அந்த புத்தக ஸ்டாலுக்கு பக்கத்தில்தான் பஜ்ஜிகடை இருக்கிறதாகவும் அவர்களிடம் பஜ்ஜி போட்டு கொடுப்பதற்கான பேப்பர் தீந்து போனதால் மலிவு விலையில் விற்ற இவர் புத்தகத்தை வாங்கி பயன்படுத்தியதாக சொன்னார் எது எப்படியோ இவரின் புத்தகம் மற்றவர்களின் வாழ்விற்கு இப்படியாவது உதவுகிறதே


டேய் என்னடா இணையம் பக்கமே உன்னை பார்க்கமுடியலை ஏதாவது பிரச்சனையா? ஆமாம்டா இணையத்தில் உள்ள நண்பர்கள் எல்லாம் புக் போட்டு அதை புத்தக கண்காட்சியில் வைத்திருக்கிறதா பதிவுகள் போட்டு கொண்டு இருக்கிறார்கள் இணையம் பக்கம் வந்தால் என் புக் வாங்கினியா என்று கேட்டால் மட்டும் போதாதா ஆனால் அதற்கும் மேல் அவர்கள் போய் என் புத்தகத்தை வாங்கிய நீ ஏன் படித்து விட்டு விமர்சனம் எழுதி பதிவு போடவில்லை என்று கேட்கிறார்கள்டா? அதுமட்டுமல்ல நல்லபடியா பாராட்டி விமர்சனம் எழுதுடா என்று சொல்லுறாங்க அதனால்தான் இணைய பக்கமே வரதில்லை


புத்தகம் போட்டு அதை வாங்கி படித்து பார்த்து விமர்சனம் செய்யுங்கள் என்று சொல்லும் நண்பர்கள் அது போல தங்கள் வீட்டில் செய்யும் உணவுகளை சாப்பிட்டு விமர்சனம் செய்யுங்கள் என்று சொல்ல மாட்டார்கள், ஒரு வேளை அவர்கள் சொல்லி நாம் விமர்சனம் செய்துவிட்டால் அதற்கு பிறகு நம்மை விருந்திற்கும் அழைக்கமாட்டார்கள் நம்மை விருந்துக்கு அழைத்த நண்பருக்கு குறைந்தது சில தினங்களாவது வீட்டு சாப்பாடும் கிடைக்காது...#நான் சொல்லுவது சரிதானே மக்களே


வெஜிடேரியன் கைகழுவும் இடம் நான்-வெஜிடேரியன் கைகழுவும் இடம் என்று போட்டு இருப்பது போல #புத்தககண்காட்சியில் கருப்பு சட்டைக்காரர்கள் , சிவப்பு சட்டைக்காராகள்  மற்றும்  காவி சட்டைகள் புத்தகம் வாங்கும் இடம் என்று போட்டு இருக்கலாமே

சென்னை புத்தக கண்காட்சியில் இந்த ஆண்டு 21 கோடிக்கு புத்தகம் வீற்று இருக்கிறாதாம் ஒரு வேளை பிளாஸ்டிக் பேக்கின் உபயோகத்திற்கு தடை விதித்தால் வியாபாரிகள் புத்தக கண்காட்சியில் மொத்தமாக பழைய புக்குகளை வாங்கி சென்றார்களோ என்னவோ

சென்னை புத்தக கண்காட்சியில் அதிக அளவு விற்பனையான புக் லிஸ்ட்

அன்புடன்
மதுரைத்தமிழன்

24 comments:

  1. சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள்! கற்பனை என்று ஆரம்பத்திலேயே தெரிந்தது.

    21 கோடிக்கு புத்தகங்கள் விற்றிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த முறை கடும் நஷ்டம் என்றும் சொல்கிறார்கள். எது உண்மையோ?

    ReplyDelete
    Replies
    1. புத்தக கண்காட்சி கையை கடித்து விட்டதாகத்தான் பதிப்பாளர் பலரும் புலம்புகின்றனர் ஸ்ரீராம்

      Delete
  2. வெகு சுவாரஸ்யம். கரும்பை கடித்து சாற்றை குடித்து விட்டால் மீதம் சக்கை ஆவதைப்போல் புத்தகத்தை படித்துவிட்டால் அதுவும் சக்கை ஆகிவிடும் போல. அதுதான் பழையது எடைக்கு என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த கால எழுத்தாளர்கள் எழுதுவதை பார்க்கும் பொழுது அது சக்கைகளாகத்தான் இருக்கின்றன்...அதை படிக்காமலே சக்கையாகத்தான் இருக்கின்றன...அந்த கால எழுத்தாளர்கள் எழுதிய
      புத்தகங்களை படிக்கும் போதுதான் அதன் வீச்சு , ஆழம் நமக்கு புரிகிறது.. உதாரணமாக சோசியல் மீடியா இல்லாத காலத்தில் ஜெயகாந்தன் எழுதிய கதைகள் இப்படி பரபரப்பாக பேசி விமர்சிக்கப்பட்டன

      Delete
  3. ஆஹா..மீண்டும் உங்கள் எழுத்தை வாசிக்கிறேன்..அதே அதே

    ReplyDelete
    Replies

    1. புத்தாண்டில் வருகை தந்தற்கு நன்றி செல்வகுமார்

      Delete
  4. இதுவரை புத்தக கண்காட்சிக்குச் சென்றதில்லை அதனால் என்ன கோவில்களைப் போல் புத்தக கணாட்சிக்ளிலும் சைட் அடிப்பார்களா

    ReplyDelete
    Replies
    1. கோயிலில் சைட் அடிப்பது நம்ம காலம் சார் இப்ப எல்லாம் இணையதளத்திலே எல்லாம் நடந்து விடுகிறது

      Delete
  5. Naan Katurai padikkave illai. Tamanna ve oru anchu nimisham pathutu vera blog poiten. Tirumba vandu padikkalamnu patha marubadi anchu nimisham Tamanna ve pakkarthuleye pochu. Nalu pera bloge padikka mudile, idule book eppidi padikaradu?

    ReplyDelete
    Replies
    1. என்னது நீங்க தமனாவை பார்த்து கொண்டிருக்கிறீர்கள் நானோ அவர் கட்டிய சேலையை பார்த்து கொண்டிருக்கிறேன் மிக அழகாக இருக்கிறது

      Delete
  6. ஹாஹா....

    சுவையான கற்பனை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக நன்றி வெங்கட் ஜி

      Delete
  7. ஹா ஹா ஹா ஹா மதுரை....சும்மா உடான்ஸ் ரீலுதானே!! எத்தனை ரீலுப்பா...இருங்க முழுசும் வாசிக்கலை...அவசர வேலையா சென்னை வந்தேன் அப்புறம் உங்களை உங்க நண்பரின் மனைவி ரொம்பவெ நம்பி!!!!??? இதுலருந்தே உடான்ஸ் ஆரம்பிக்குதுனு தெரிஞ்சுருச்சு...ஹா ஹா ஹா இருங்க முழுசும் பார்த்துட்டு வரேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய டூப்பு பிஸியாக இருந்ததால் நானே வந்தேன் ஆனால் எல்லோரும் பொங்கல் பிஸியில் இருந்ததால் பார்க்க முடியவில்லை

      Delete
    2. ஆஹா முன்ன மதுரைத் தமிழன்னு டூப்பு விட்ட ஆசாமி மட்டும் சிக்க ட்டும்.15 லட்சம் தர்ரதா சொன்னவர் கிட்ட பிடிச்சி கொடுத்திடுறோம்..🙏😸

      Delete
    3. அந்த டூப் ஆசாமியை நீங்கள் அடுத்த தடவை பார்க்கும் போது அந்த 15 லட்சம் தராதா சொன்ன ஆசாமி அத்வானி கும்பிட்டு போட்டு மரியாதை இழந்து இருப்பது போல இருப்பார் என்னை பிடிச்சு கொடுத்தா அவர் என்னை பார்த்து ஒரு கும்பிட்டு போட்டு என் பக்கத்தில் நின்று போட்டோ எடுக்க ஆசைப்படுவார்

      Delete
  8. நினைச்சேன் என்னடா பூரிக்கட்டை பறக்கலையேன்னு!! பறந்துருச்சு! புது வருஷத்துல முதல் பூரிக்கட்டை வாங்கியாச்சு போல அதுவும் தை பிறந்தால் வழி பிறக்கும்னு சும்மாவா சொன்னாங்க!!! ஹா ஹா ஹா ஹா ஹா..

    செம ஸ்வாரஸ்யமான பதிவு!!! சரி சரி தமனா படமா இன்று. நெல்லைய காணோமே!! ...பொங்கலன்று அனுஷ் படம் போட்டதுக்கா இன்று தமனா??!!!! ஹா ஹா ஹா... அன்று அனுஷ் பார்த்தும் வரலை உடம்பு முடியாததால....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. என்னது நெல்லைக்கு தமனா புடிக்குமா? சரி சரி நானே தமனாவிடம் சொல்லி விடுகிறேன்

      Delete
  9. நல்ல கிராபிக்ஸ் வேலை. ஆமாம் புத்தகப் பெயரே சரியில்லையே... 'மதுரைத் தமிழன் பெண்கள் பின்னால் ஆண்கள் செல்வதேன்' - அர்த்தமே மாறிடுதே...

    ReplyDelete
    Replies

    1. இந்த புத்தகத்தை எழுதியவர் மதுரைத்தமிழன் அதனால்தான் அவரின் பெயரை தனியாக போட்டு இருக்கிறேன்

      Delete
  10. படங்களையும் நல்லாத் தேர்ந்தெடுத்திருக்கீங்க. ஆமாம்... கனவு புத்தகக் கண்காட்சி பற்றியமாதிரி தெரியலையே...

    ReplyDelete
    Replies
    1. நான் படங்களை தேர்ந்தெடுக்கும் போது அழகானவர்களை பார்த்து தேர்தெடுப்பதில்லை அழகான சேலையை பார்த்துதான் தேர்ந்தெடுக்கிறேன் என்று நான் சொன்னால் நம்மபவா போறீங்க

      Delete
  11. அருமையான நகைச்சுவை விருந்து அளித்து உள்ளீர்கள் பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக நன்றி அசோகன்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.