Wednesday, January 7, 2015

சமுக வலைதள தொலை தூர நட்புக்கள்
(வலைதளம் பேஸ்புக் டுவிட்டர் மூலம் நமக்கு கிடைக்கும் நட்புகள்)

முகம் தெரியாமல் ஆரம்பித்த நட்புக்கள்
இந்த தொலை தூர நட்புகள்
முக வசிகரத்தால் நட்பானவர்கள் அல்ல
எழுத்து வசிகரத்தால் நட்பானவர்கள்
இணையம் மூலம் இதயம் தொட்டவர்கள்
சூரியனை கண்டால்
மலர்களின் மொட்டுக்கள் விரியும்


இணையத்தில் இவர்களின் கருத்தை கண்டால்


எங்கள் இதயம் மலரும்
எங்களை தொடாமல் சிரிக்க வைப்பவர்கள்
அடிக்காமல் அழு வைப்பவர்கள்
துன்பப்படும் போது அருகில் உள்ளவர்கள்
தோள் கொடுக்க தயங்கும் போது
மெயில் மற்றும் போன மூலம்
எங்கள் துன்பங்களை துடைப்பவர்கள்
மன பாரத்தை இணையக் கடலில்
கரைக்க உதவுபவர்கள்
சண்டைகள் பல போட்டாலும்
சமரசமாகி விடுவார்கள் எளிதில்


சமுக வலைதள தொலை தூர நட்புக்கள்  பற்றி பதிவு எழுதினேன். அது மிகவும் சிறியதாக இருந்ததால் வாக்கியங்களை உடைத்து போட்டேன். இப்ப பார்ப்பதற்கு கவிதை போல இருக்குது என நினைக்கிறேன்.
இதை படிப்பவர்களில் கவிஞர்கள் யாரும் இருந்தால் இதை கவிதையாக கருதலாமா என்று சொல்லவும்.இது கவிதைதான் என்றால் ஏதோ வெண்பா அறுசீர் என்று ஏதேதோ சொல்லுறாங்களே அது எல்லாம் இதில் இருக்கா என்று ஆராய்ச்சி பண்ணி  சொன்னால் உங்களுக்கு டாக்டர்பட்டம் கண்டிப்பாக உண்டு


அன்புடன்
மதுரைத்தமிழன்


16 comments:

  1. எதையும் பகிர்தல் சிறந்தது..

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இது புதுக்கவிதை என்று தான் சொல்ல வேண்டும். சற்றே முயற்சி செய்தால் உங்களுக்கும் வெண்பா எல்லாம் வரும் எழுதுங்க எழுதுங்க.

    ReplyDelete
    Replies
    1. அட தென்றல் நம் வலைப்பக்கம் விசுதே இன்று.... வருகைக்கு நன்றி

      Delete
    2. வெண்பா வருமோ வராதோ நிச்சயம் கவிதை எழுதினால் கல்லடி வரும், வெண்தாடி வரும்

      Delete
    3. உங்க கவிதை வரிகளை அசை பிரித்தால் மா-காய்-பூ இப்படி எல்லாம் கலந்து வருகிறது. முறையா யாப்பு பயின்று எழுதுங்க. சிறப்பா வரும் உங்களுக்கு.

      Delete
    4. யாப்பு கற்று கவிதை எழுதினால் ஆப்பூதான் வரும்..என் கவிதையை ஆராய்ச்சி செய்தமைக்காக உங்களுக்கு டாக்டர் பட்டம் தரலாம் என்று இருக்கிறேன் வேறு யாரும் ஆராய்ச்சி பண்ணினால் அவர்களுக்கும் சேர்த்து தரலாம் என்று இருக்கிறேன்

      Delete
    5. யாப்பு கற்கும் நிலையில் இருக்கும் எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் பார்ப்பவர்கள் சிரிப்பார்கள்.

      Delete
  3. கடைசி வரிகளைப் படிக்கும்போது ஏதோ கிண்டலடிக்கறீங்களோன்னு தோன்றுகிறது....

    ReplyDelete
  4. டாக்டர் பட்டத்துக்கு ஆசைப்பட்டு, உங்க பதிவை ஆராய்ச்சி செஞ்சா, இருக்கிற கொஞ்ச நஞ்ச மூளையும் குழம்பி போயிடும். அதனால நான் இந்த விளையாட்டுக்கே வரலை சாமி.

    ReplyDelete
  5. கவிதையா எழுத முயற்சி பண்ணியிருக்கீங்கன்னு தெரியுது! ஆராய்ச்சி பண்ணுமளவுக்கு எனக்கு இலக்கண அறிவு இல்லை! அதனால் வாபஸ் வாங்கிக்கறேன்!

    ReplyDelete
  6. ஆஹா நல்ல கருத்தேம்..ம். கவிதை உங்களுக்கு already வந்தாச்சு சகோ எப்படி என்று தானே கேட்கிறீர்கள். \\\\குரு குறில் நெடில் தெரிஞ்சா பாதி இலக்கணம் கத்துக்கிட்ட மாதிரி தான்///////.எங்கேயோ கேட்ட மாதிரி இல்ல ம்..ம்..
    அது போல நீங்க தான் வகையுளி எல்லாம் செய்திருக்கிறீர்களே இல்லையா? எப்படியா ?\\\\ சிறியதாக இருந்தமையால் வாக்கியங்களை உடைத்துப் போட்டேன் என்றீர்களே அதை தான் சொன்னேன். so இப்போ பாதிக்கு மேல இலக்கணம் வந்தாச்சு இனி கவிதை எழுத ட்ரை பண்ணலாம். னோ னோ already எழுதியாச்ச்சே ஸ்மால் திருத்தும் தான் சசிகலா சொன்னது போல காய் தேமா புளிமா எல்லாம் வந்திருக்கே ok வா. ஆமா அதற்கு உங்க நண்பர் சொக்கன் விடமாட்டார் போல இருக்கே. குழப்புறாரே. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்க விடமாட்டாராம். அது போல ம்..ம்.. நன்று நன்று தொடருங்கள் .....

    ReplyDelete
  7. கவிதை போல உரைநடை எழுதி இருக்கிறீர்கள்.

    ஆமா..... வாக்கியத்தை, வார்த்தைகளை உடைத்துப் போட்டால்
    கவிதை வந்து விடும் என்று யார் உங்களுக்குச் சொன்னது....?

    புதுக்கவிதை என்று எழுதினால் கூட இராகத்துக்கு உட்பட்டதாய் எழுத வேண்டும்.

    நல்ல தமிழின் நறுஞ்சொற்கள்
    நயமாய் இனிதாய் நன்கேந்தி
    வல்ல ஆழக் கருத்துகளை
    வழுவே இல்லா வகையேந்தி
    சொல்லக் கேட்கப் புலனுள்ளே
    சொக்கச் செய்தல் கவியாகும்!
    மெல்ல அதைநாம் உணர்ந்தாலே
    மேன்மைக் கவிகள் நமதாகும்!

    ReplyDelete
  8. அறுசீர் கடிலடி நெடு வெண்பா போல் உள்ளது ,எப்படி என்று மட்டும் கேட்டு விடாதீர்கள் ,அழுதிருவேன் :)
    த ம 4

    ReplyDelete
  9. இதுதான் friendship பின் மகிமை!! பாருங்க நண்பர்களை நினைத்தால் கவிதையை கண்டாலே காததூரம் ஓடும் mr.லைட் கூட எழுதிவிட்டாரே!! யாரு என்ன சொன்ன என்ன பாஸ்,,, தொடக்க நிலையில் இது ஒரு நல்ல புதுக்கவிதை முயற்சி தான். so சகாவுக்கு ஒரு போக்கே பார்சல்:))

    ReplyDelete
  10. ஹை! மதுரைத் தமிழன் கவிதையா...எங்களுக்கும் கவிதை எல்லாம் எழுத வராதுங்க அதனால உங்களுடையது எங்களுக்குக் கவிதைப் போலத்தான் தெரியுது.....அத்னால நீங்களும் எழுதலாங்க....கவிதையோ இல்லையோ வரிகள் அருமை! (கவி, அறிவு ஜீவிகள் எல்லாம் வந்துட்டாங்கப்பா.....அதனால வுடு ஜூட்..னாங்கதாம்பா)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.