Tuesday, January 27, 2015



தமிழனின் ஊர்திக்கு அனுமதி மறுத்த மோடிக்கு தமிழனின் வீரத்தை பாராட்ட கூட மனது இல்லையோ?


புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற 66 வது குடியரசு தின அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்கள், மத்திய துறைகள் சார்பில் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. ஆனால் தமிழகத்தை சேர்ந்த ஊர்திகளுக்கு மோடியின் அரசு அனுமதி அளிக்கவில்லை .மோடி சாப் தமிழக ஊர்திகளுக்கு தடை விதிக்கலாம் ஆனால் தமிழனின் வீரத்திற்கு தடை விதிக்க முடியாது.




குடியரசு தின நிகழ்ச்சிகள் துவங்குவதற்கு முன், ராணுவத்தில் வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கான அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீரில் நடந்த சண்டையில் பயங்கரவாதிகளுடன் போரிட்டு, வீர மரணம் அடைந்த, தமிழகத்தை சேர்ந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு, நேற்று அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இருந்து இவ்விருதை பெற்றார். கனத்த இதயத்துடனும், சோகம் சூழ்ந்த முகத்துடனும் இந்து விருதை பெற்ற போது, மோடியை தவிர அங்கு கூடியிருந்த ஒரு லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்களும் ஏன் அமெரிக்க அதிபரும் கூட  கைகளை தட்டி தமிழினின் வீரத்தை பாராட்டினார்கள்.

இது ஒன்றே போதும் தமிழன் தலை நிமிர்ந்து வாழ பெருமை பட



மோடி சாப் நீங்கள் உங்கள் கைகளால் உங்கள் கண்களை மறைத்து கொண்டு சூரியனையே மறைத்துவிட்டேன் என்று பெருமை கொள்ளாதீர்கள். சூரியனை எப்படி மறைக்க முடியாதோ அதே மாதிரிதான் தமிழனின் பெருமையை உங்களால் மறைக்க முடியாது

மோடி சாப் நீங்கள் போடும் ஆட்டம் எல்லாம்  அடுத்த 4 ஆண்டுகள் மாத்திரமே அதன் பின் உங்கள் நண்பர் ராஜபட்சேக்கு நேர்ந்த நிலைமைதான் உங்களுக்கு


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. விடுங்க தமிழரே....
    நம்மைப் பாராட்ட அவருக்குத் தகுதி இல்லை!

    ReplyDelete
  2. முழு இந்தியாவும் ஏமாந்தபொழுது, நாம மட்டும் தெளிவா இருந்து இவங்களுக்கு ஒட்டுபோடாம இருந்தோம்ல அதான், பிள்ளைக்கு காண்டு:)) விடுங்க பாஸ் , அவரெல்லாம் ஒரு ஆளா?

    ReplyDelete
  3. வீரம் எங்கும் பாராட்டப்படும், பாராட்டுவோம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.