Thursday, January 22, 2015



charu-nivedita
சாரு (செருப்பு) ஸ்பெஷல்
சென்னை புத்தகக் கண்காட்சியில். சாருவும், மனுஷபுத்திரனும் கலந்து கொண்டனர் அப்போது பெருமாள் முருகன் நாவலைப்பற்றி சாரு பேசிக் கொண்டிருந்த  போது சாரு "தஸ்லிமா நஸ்ருதின் எழுதிய லஜ்ஜா ஒரு குப்பை" என்றார். உடனே பாலு என்ற ஒரு பெரியவர் செம கடுப்பில் .."உன்னோட படைப்பு கூடத்தான் குப்பை" என்றார் பதிலுக்குச் சாரு "வெளியே போ" என்றார். பெரியவரும் விடாமல் "இது பொது நிகழ்ச்சி என்னை வெளியே போகச் சொல்ல உனக்கு உரிமை இல்லை" என்றார். உடனே சாரு மிக கேவலமானவர் போல...எழுந்து நின்று "செருப்பால் அடிப்பேன்" என வயதில் மிகப் பெரியவரைக் கூற....கூட்டத்தில் ஓர் அதிர்ச்சி. பெரியவர் டென்ஷன் ஆகிக் கத்த ஆரம்பித்துவிட்டார்.அந்த பெரியவர் கத்த ஆரம்பித்ததும் சாரு ஒன்றும் தெரியாத பாப்பா போல அமைதியாக அமர்ந்துவிட்டார்.அதன் பின் கண்காட்சி ஊழியர்கள் பெரியவரை வெளியேற்றினர்.

இதையொற்றி சாரு விமர்சகர்கள் வட்டத்தில் வழக்கம் போலச் சாருவைக் கிண்டல் கேலி பண்ணிக் கழுவி ஊற்ற ஆரம்பித்துவிட்டனர்.

அப்படிக் கிண்டல் கேலி பண்ணும் போது மதுரைத்தமிழன் சும்மா இருந்தால் தமிழ் இலக்கிய உலகம்  அவரை ஒதுக்கிவிடும் என்பதால் அங்கு நானும் சில முத்துக்களை உதிர்த்தேன் எனது பாணியில் அதை இங்கே நீங்களும் படிக்கத் தருகிறேன் அதுமட்டுமல்லாமல் அங்கு மற்றவர்கள் சொன்ன ஸ்டேடஸ்களில் இருந்து சிலவற்றையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் படித்து ரசித்து நீங்களும் உங்கள் கிண்டல் கேலிகளை இங்கே பதிவு செய்யலாம்


நான் பதிந்தது
புத்தகக் கண்காட்சி சண்டையில் சாரு  செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன பிறகு பேசாமல் அமைதி காத்தற்குக் காரணம் அவருக்கு காரத்தே குங்பூ, டைக்குவாண்டோ, ஜுஜிட்ஜு போன்ற 25 வார்த்தைகள் தெரியும் ஆனால் அதை அவர் உபயோகப்படுத்த விரும்பவில்லை.பாவம் பாலு என்று விட்டுவிட்டார்

சாரு செருப்பால் அடிப்பேன் என்று சொல்லிவிட்டு அடிக்காமல் இருந்ததற்கு மற்றுமொரு காரணம் அந்தக்கணத்தில் அவர் காலில் அணிந்து இருந்தது ஷு என்பதால் இல்லையென்றால்  அன்று நடந்து இருப்பதே வேற...

சாரு ஜாக்கிரதை !!!!!!செருப்பால் அடிப்பேன் என்று சாரு சொன்னதால் இப்ப "செருப்பு" சாரு மீது கோபம் கொண்டு அழைக்கிறதாம்.. சாரு மட்டும் தனியாகச் சிக்கட்டும் நானே அவரை அடிப்பேன் சென்று சொல்லியும் திரிகிறதாம்.

நண்பர்களே நான் அமெரிக்கா வந்து பல 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது அதனால் தமிழில் புழக்கத்தில் உள்ள கெட்ட வார்த்தைகள் மறந்துவிட்டன. நான் இப்போது தமிழில் நவீன இலக்கியம் படைக்க விரும்புகிறேன் அதனால் கெட்ட வார்த்தைகள் அடங்கிய புத்தகம் வாங்கி படிப்பதா அல்லது சாருவின் புத்தகங்கள் வாங்கி படிப்பதா சொல்லுங்கள் உங்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன

Senthil Kumar என்பவர் பேஸ்புக்கில் பதிந்தது
January 20 at 4:31am · Edited

மதுரையில் இரண்டாம் ஆட்டம் நாடகம் நடத்தியபோது, காருக்கு பின் ஒளிந்து #தந்திரமாக அமைதியாய் இருந்ததால் தப்பித்தேன்

பேத்தி வயசு பொண்ணுகிட்ட உனக்கு வெட் ஆகுதான்னு கேட்டு மாட்டினதுக்கு அப்புறம் #தந்திரமாக அமைதியாய் இருந்ததால் தப்பித்தேன்

நூலகம் கட்டுறேன்னு காசை வாங்கிட்டு ஏமாத்திட்டேன்னு எல்லாரும் ரவுண்ட் கட்டியபோது #தந்திரமாக அமைதியாய் இருந்ததால் தப்பித்தேன்

நித்தி விடீயோ வெளிவந்த உடனே, எல்லா பதிவையும் அழிச்சிட்டு #தந்திரமாக அமைதியாய் இருந்ததால் தப்பித்தேன்

கொதிக்கிற தண்ணீரை தூங்கிட்டு இருந்த நாய் மேல ஊத்துன நீயெல்லாம் நாய்ப்பாசத்தை பத்து பேசாதடான்னு எல்லாரும் திட்டியபோது #தந்திரமாக அமைதியாய் இருந்ததால் தப்பித்தேன்

சொந்த தம்பி மகளை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து ஜல்சா செஞ்சதை பற்றி அவந்திகா நித்திக்கு எழுதின கடிதம் வெளிவந்தவுடன் #தந்திரமாக அமைதியாய் இருந்ததால் தப்பித்தேன்

ஊரான் கதையை எடுத்து சிறுகதை தொகுப்பில் போட்டு விக்குறியே வெட்கமா இல்லைன்னு ஊரே காறித்துப்பிய போது #தந்திரமாக அமைதியாய் இருந்ததால் தப்பித்தேன்

குழந்தை வேனும்னு நானும் அவந்திகாவும் போகாத ஆஸ்பத்திரி இல்லைன்னு ஜீரோ டிகிரியில் எழுதிட்டு. எழுத்துப்பணிக்காக குழந்தை வேண்டாம்னு தியாகம் செஞ்சேன்னு கூசாம புழுகினது வெளியே தெரிஞ்சதும் #தந்திரமாக அமைதியாய் இருந்ததால் தப்பித்தேன்

மாசம் அறுபதாயிரம் ருபாய் பென்ஷன் வருதுங்குறதை மறைச்சு, ஏமாந்த குஞ்சுகளிடம் காசு கேட்குறதுக்கு பேசாம அந்த தொழில் பண்ணலாம்னு ஊரே கழுவி ஊத்தும் போது #தந்திரமாக அமைதியாய் இருந்ததால் தப்பித்தேன்

180 மணிநேரம் இயங்குவேன்னு எழுதிட்டு, புத்தகத்தை தூக்க முடியல, மூச்சு வாங்குது, போர்டர் ஏற்பாடு செய்யமுடியுமான்னு கேட்டு அசிங்கப்பட்டபோது #தந்திரமாக அமைதியாய் இருந்ததால் தப்பித்தேன்


களவாணி பய என்பவர் பேஸ்புக்கில் பதிந்தது
January 20 at 10:39pm

பரண் மேல ஒளிச்சு வச்ச சரக்கு பாட்டில் எங்கடா என தாத்தா கத்தி கொண்டிருந்தார்.சாருவை போல் அமைதியாக இருந்து தந்திரமாக தப்பித்தேன்.


Saravanan Chandran என்பவர் பேஸ்புக்கில் பதிந்தது
January 20 at 5:04am

சாருநிவேதிதாவுக்கு ஒரு பகிரங்க கேள்வி?

அந்திமழை இணையத் தளத்தில் சாருநிவேதிதா மாதொருபாகன் விஷயம் குறித்து எழுதியுள்ளதில், பெருமாள்முருகன் திருச்செங்கோட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். தரவுகள், உண்மைத் தன்மை என்றெல்லாம் போகிற போக்கில் வலியுறுத்தியிருக்கிறார். இப்படி ஊருக்கு ஒருத்தர் இருப்பது நல்லதுதான். இப்போது சாருவிடமிருந்து ஒரு பதில் வேண்டும்.

“ஒருமுறை ராஜேஷ்கன்னா சென்னை வந்த போது, அவரைச் சந்திக்க சுமார் ஐநூறு பெண்கள் நள்ளிரவு வரை அவர் தங்கியிருந்த ஓட்டல் வாசலில் காத்திருந்தார்களாம். எல்லோருமே அவரோடு படுக்கத் தயார்” பக்கம் 464. சாருநிவேதிதாவின் வெளிவந்திருக்கும் நாவலான புதிய எக்ஸைலில் இருந்து...

இதுமட்டும் என்னவாம்? தரவுகள், ஆதாரங்களை சாருநிவேதிதா வெளியிடத் தயாரா?

வீடு சுரேஸ் குமார் என்பவர் பேஸ்புக்கில் பதிந்தது
Yesterday at 6:36am · Edited

தினத்தந்தியை இலக்கிய பத்திரிக்கை என்று சொல்லமுடியுமா..? - சாரு

///எப்படிப்பட்ட இலக்கிய ஜாம்பவான்களாக இருந்தாலும் கன்னித்தீவு படிக்காம வந்திருக்க முடியாது! ஆனால் எந்த தமிழ் இலக்கிய ஜாம்பவானும் சாருவின் நாவலை படித்ததில்லை///

https://www.facebook.com/groups/charuvimarsagar

அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. எல்லாரும் சாருவைக் கழுவி ஊத்தியிருக்காங்க...
    பொது இடங்களில் அவருக்கு நாவடக்கம் இல்லை.

    ReplyDelete
  2. If you want to do PhD in bad words, i will recommend saru"s book. 3 years before by mistake I purchased Zero degree,REALLY I ASHAMED OF MYSELF. (That book you cannot share to anyone after reading)

    ReplyDelete

  3. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html

    ReplyDelete
  4. மூன்று வருடங்களுக்கு -- ஊருக்கு போகும் போது ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று நினைத்தேன். ஸீரொ டிக்ரீ புத்தகத்தை புத்தக கடையில் பார்த்தேன்.கையில் 50 ரூபாய் குறைவாக இருந்தது. ஊருக்கு போக நான் வைத்திருந்த 50 ரூபாய்யும் சேர்த்து அந்த புத்தகத்தை வாங்கினேன். அன்று, நண்பணிடம் கடன் வாங்கி ஊருக்கு சென்றேன். வீட்டில் சென்று முழுதாக 20 பக்கங்கள் கூட முடிக்கவில்லை. ஆபாச புத்தகம் படிப்பது போன்று இருந்தது. எனக்குள் எழுந்த கோபத்தை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. அந்த "ஆபாசத்தை" அருகில் இருந்த சாக்டையில் விட்டு எறிந்தேன்.
    என் வாழ் நாளில் எந்த puthagathium இப்படி எறிந்தது இல்லை.
    புத்தகங்கள் தான் எனக்கு ஆசிரியருக்கு அடுத்து.
    நான் அந்த puthagaithai வாங்க்கியத்ற்காக மிகவும் வருந்தினேன்.
    நல்ல வேளையாக வீட்டில் வேறு யாரும் அதை படிக்கவில்லை.

    ReplyDelete
  5. இவ்வாறெல்லாம்கூட நடக்கின்றதா? வேதனையாகவுள்ளது.

    ReplyDelete
  6. தமிழா அன்று புத்தகக் கண்காட்சிக்குச் சென்ற போது சாரு வாசகர்களுடன் உரையாடுகின்றார் என்பதை ஒரு நண்பரின் மூலம் அறிந்து அவருடன் சென்றேன். இது வரை எந்த எழுத்தாளரின் கூட்டத்திற்கும் சென்ற அனுபவம் கிடையாது. (சென்னையில் நடக்கும் நம் வலைத்தள எழுத்தாளர்களின் கூட்டட்தைத் தவிர...அதுவே சமீபத்தில்தான். இத்தனை நாட்கள் வீடு என்ற சிறிய வட்டத்திற்குள் இருந்து இப்போதுதான் வலை/ எழுத்து வட்டத்திற்குள். ) இதுதான் முதல் முறை சிறிது தாமதமாகத்தான், நான் சென்று அமர்ந்ததும் ஒரு பெரியவர் வந்து "நீ மட்டும் யோக்கியமா, நீ எழுதுவதும் தான் குப்பை" என்று சொல்லவும் சாரு தரக்குறைவான வார்த்தைகளை உதிர்க்கவும் நான் சாருவைப் பற்றி ஊடகங்களில், வலைத்தளங்களில் வாசித்திருந்தாலும், பொதுக் கூட்டத்தில், படித்தவர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் கூடும் இடத்தில் இப்படி உணர்வு பூர்வமான அநாகரீகமாக எல்லாம் நிகழ்வுகள் நடக்குமா என்று ஆச்சரியம்....நான் அந்த முழு நிகழ்வையும் எனது காமெராவில் வீடியோ எடுத்தேன். சாரு பெருமாள் முருகனின் எழுத்தையும், தஸ்லிமாவின் லஜ்ஜாவையும் குப்பை என்று சொன்னதையும் கேட்டேன். எப்படி இப்படி ஒரு எழுத்தாளர் தன் சக எழுத்தாளரின் எழுத்தைச் சொல்லுகின்றார் என்று வியப்பாக இருந்தது. அதற்கு மனுஷ்ய புத்திரனும், "அவரு தன் கருத்தைச் சொல்றாரு. உரிமை உண்டு. நீங்க எப்படி அதை சண்டை போடலாம். நீங்களும் தான் சாருவின் எழுத்தைக் குப்பை ன்றீங்க...உங்களுக்கு உள்ள உரிமைதான் அவருக்கும்...." என்று சொல்ல....அங்கு நடந்த சண்டைகளும், பேச்சுகளும் குழாயடிச் சண்டை போலத் தெரிந்தது. குழாயடிச் சண்டை கூட பரவாயில்லை ஏனென்றால் அவர்கள் பாமர மக்கள். சாரு போன்றவர்கள்:????

    மிகவும் அசிங்கமான ஆபாசப் புத்தகங்கள் எல்லாம் புழக்கத்தில் இருக்கும் போது அதற்கெல்லாம் எதிர்ப்பு இல்லாத போது, இப்போது எழுப்பப்பட்டிருக்கும் சர்ச்சைகளைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. நீங்க எடுத்த வீடியோவை இணைத்து ஒரு பதிவு போடுங்க சார்

      Delete
    2. தமிழா ஸாரி! சென்னையில புத்தகக் கண்காட்சிக்கு போனது நான் கீதா. பதிவு எழுதினதும் நான் தான் எங்க தளத்துல அங்க பேரு போட்டேன்....இங்க பின்னூட்டம் இட்டுட்டு என் பேர் போட மறந்துட்டேன். செம திட்டு துளசி என்னைய....பல சமயத்துல் இப்படித்தான் துளசி எவ்வளவு சொன்னாலும், பேரு போட மறந்துருவேன்....என்னவோ அது வருவதில்லை. (துளசி எழுதுவது, நான் எழுதுவது, இருவரும் சேர்ந்து எழுதுவது எல்லாமே சென்னையிலிருந்து தானே அப்லோட் எல்லாம் ...நான் செய்வதால் அதை அப்படியே விட்டு விடுவேன். நான் பதிவு போடும் போதே வீடியோ இடுவதாக நினைத்து பின்னர் துளசியும் நானும், வேண்டாம் என்று விட்டுவிட்டோம். (ஏற்கனவே சாரு விஷயமாக பிரச்சினைகள், மாதொருபாகன் பிரச்சினைகள் என்பதால் சென்னை ஆதலால் என் வீட்டில் பிரச்சினை வந்துவிடக்கூடாது என்று துளசி எண்ணியதால்....)

      Delete
  7. தருண் தேஜ்பால் எழுதிய ஒரு நாவல் Bad Sex in Fiction அவார்டுக்காக கடைச்கட்ட 11 பேர் பட்டியலில் இருந்தது. அவரை வைத்துத்தான் நியூ Exile நாவலை வெளியிட்டார்.அப்போதே இவரது ரசனை தெரிந்து விட்டது.அவரைப் பற்றி நான் கூட ஒரு பதிவு எழுதி இருந்தேன்.

    சாரு நிவேதிதா+தருண் தேஜ்பால்+புதிய எக்சைல்

    இந்த புத்தகக் கண்காட்சியில் பெருமாள் முருகன் எழுதிய கெட்ட வார்த்தைகள் பற்றிய புத்தகத்தை பார்த்தேன்.(மாதொருபாகன் அல்ல)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.