Friday, June 13, 2014

 

இப்படியும் ஒரு அசம்பாவிதம் உங்களுக்கு ஏற்படலாம் ஜாக்கிரதை!!!!


இந்தியாவில் இருந்து வந்த ஒரு நண்பரை ஒரு ரெஸ்டராண்டிற்கு அழைத்து சென்று உணவு அருந்தி கொண்டிருந்தேன்.

டேபிளில் பணத்தை வைத்துவிட்டு என் கூட அருந்திக் கொண்டிருந்த நண்பனை பாதி சாப்பிடும் போதே அவன் கையை தர தர வென்று பிடித்து அழைத்து வெளியே சென்றேன்..

அவனோ என்னடா ஆச்சு? ஏன் என் கையை பிடித்து இவ்வளவு அவசர அவசரமாக பிடித்து இழுத்து வருகிறாய் அதுமட்டுமல்ல எல்லோரும் நம்பளையே பார்த்து சிரித்து கொண்டு இருக்கிறார்கள் என்றான்.

நான் முதலில் வெளியே வாடா நாயே அப்புறம் கதை சொல்லுறேன் என்று வெளியே அழைத்து வந்தேன்

வெளியே வந்ததும் அவன் என்னடா பாதி சாப்பாட்டுலேயே இழுத்துட்டு வந்துட்டே அப்படி என்னதான் நடந்துச்சு என்று கேட்டான்.

அதற்கு நான் அறிவு கெட்ட முண்டம் நீ என்ன செய்தாய் என்று கூட உனக்கு தெரியவில்லையா.. உன்னை எல்லாம் நான் நண்பண் என்று சொல்லி கூட்டிக் கொண்டு போனேன் பாரு என்னை செருப்பாலதான் அடிக்கனும்.

அவன் இன்னும் ஒன்றும் தெரியாதவன் போல இருந்தான். அதன் பின் சொன்னேன் டேய் உனக்கு இயற்கை வாயுவை வெளியிட வேண்டுமானால் ஒன்று சத்தமில்லாமல் வெளியிட வேண்டும் இல்லையென்றால் பாத்ருமிற்குள் போயோ அல்லது யாரும் இல்லாத இடத்திற்கு போயோ வெளியிட வேண்டும் ஆனால் நீ நாகரிகம் இல்லாமல் அதுவும் மிக சத்ததுடன் வெளியிடுகிறாயே அறிவுகெட்டவனே என்று சத்தம் போட்டேன்.


அதற்கு அவன் மாப்பிள்ளை அந்த ரூமில்தான் மீயூஸிக் மிக சத்ததுடன் ஒலித்து கொண்டிருந்ததே அதனால்தான் யாருக்கும் நான் வாயுவை விடும் சவுண்ட் கேப்பதில்லையே என்று நினைத்துவிட்டேன் என்றான்


அதற்கு நான் நாயே அந்த ரெஸ்டராண்டில் மீயூஸிக் போடுவதே இல்லையே நீதான் உன் காதில் ஹெட்போனை மாட்டி ஐபாட்டில் மீயூஸிக் கேட்டு கொண்டிருந்தாய் என்றவுடன்தான் அவனுக்கு அவன் செய்த தவறு புரிந்தது

அதை கேட்ட அந்த மானம்கெட்ட பையன்

ஹீ.ஹீ என்று சிரித்து கொண்டிருக்கிறான்

இதுதாங்க ஐபாட்டால் ipod ஏற்படும் அசம்பாவிதம் ! ஸ்மார்ட் போன் வைத்திருந்தா போதாது ஸ்மார்ட்டாகவும் ருக்கணும்

அன்புடன்
மதுரைத்தமிழன்


13 Jun 2014

11 comments:

  1. ம்ம்ம்ம்ம்....மதுரைத் தமிழனுக்கு வந்த சோதனை! இங்கெல்லாம் இது சர்வ சாதாரணம்.......ஹாஹாஹா.....பிதாமகன் படத்தில் காமெடி சீன்.....சூர்யா இதைச் சொல்லி ஒரு நாட்டு மருந்து விற்பாரே அதுதான் நினைவுக்கு வந்தது!

    ReplyDelete
  2. இயற்கை எவ்வளவு இடையூறு செய்கிறது
    தம 2

    ReplyDelete
  3. நாத்தம் தாங்க முடியலடா சாமி அந்தாளு முதுகில ஓங்கி ஒரு குத்துக்
    குத்துங்க மதுரைத் தமிழா :))

    ReplyDelete
  4. எப்போதும் ஹெட்செட்டோடு திரிபவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை

    ReplyDelete
  5. அமெரிக்கனின் வேதனை, தமிழனின் சாதனை.

    ந்ம்ம ஊர்ல ஒரு ரெஸ்டாரண்ட் வாசல்ல இந்த போர்ட ஒடனே வச்சுட்டாங்க.

    //தயவு செய்து பெரிய தொப்பை உள்ளவர்கள் ஹெட் போனை கழட்டிவிட்டு உள்ள வரவும்//

    கோபாலன்

    ReplyDelete
  6. சிறந்த கருத்துப் பகிர்வு

    எனது புதிய பதிவுகளைப் பார்வையிட
    visit: http://ypvn.0hna.com/

    ReplyDelete
  7. மகா மனதிடக்காரர் ....
    ஹ ஹ ஹ
    உங்கள் நிலையை நினைத்தேன்..
    சிரித்தேன்..
    http://www.malartharu.org/2012/12/2_5079.html

    ReplyDelete
  8. கடைசி வரி, மதுரைத் தமிழனின் பன்ச்சா!!!!!!!

    ReplyDelete
  9. :))))

    கடைசி பஞ்ச் - ஸ்மார்ட் ஃபோன் வச்சிருந்தா பத்தாது, ஸ்மார்ட்டா இருக்கணும்!

    அதானே...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.