Thursday, June 19, 2014

பேனா நட்பிற்கும் பேஸ்புக் நட்பிற்கும் வித்தியாசம் ஏதும் இல்லைதானே?



பேஸ்புக்கில் படித்த சுஜாதாவின் கதை ஒன்று. இதை பேஸ்புக்கில் பகிர்ந்தவர்

சோமு


தன்னை மதிப்பதே இல்லை, தனது உணர்வுகளைப் புரிந்துகொள்வதே இல்லை என்கிற ஆதங்கம் கணவனுக்கு. நிலையில் பேனா நட்பு மூலம் முகம் தெரியாத பெண்ணிடம் கடிதத் தொடர்பு ஏற்படுகிறது கணவனுக்கு. தனது ஆதங்கங்களைக் கொட்டுவதோடு, அன்புக்கு ஏங்குவதையும் குறிப்பிடுகிறான். அந்தப் பெண்ணும் தனது கணவனைப் பற்றிய ஆதங்கத்தில் இருக்கிறாள். அதையெல்லாம் கொட்ட...

பரஸ்பரம் இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் கடிதங்களை பறிமாறிக்கொள்கிறார்கள்...

"ச்சே.. நாம் தான் சரியான ஜோடி. நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டால் எப்படி இருக்கும்" என்ற எண்ணம் இருவருக்கும் ஏற்பட சந்திக்க நேரம் குறிக்கிறார்கள்.

குறிப்பிட்ட நேரத்தில் கணவன் ஆவலுடன் அங்கு போக... அங்கே எதிர்பார்ப்புடன் காத்திருந்தது.. அவனது மனைவி!

# இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி அலைவது எவ்வளவு தவறு... ஆனால் இது பலருக்கு புரிவிதில்லை என்பதுதான் சோகம்!


இருக்கும் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கேங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே என்ற பாடல் வரிகள்தான் இன்றும் மனதில் கேட்டுக் கொண்டே உள்ளன.

அன்புடன்
மதுரைத்தமிழன்
19 Jun 2014

8 comments:

  1. ஒரே வித்தியாசம். பேஸ்புக் இடத்தில் பேனா இருந்திருந்தால் பூரிக்கட்டையுடன் மனைவி காத்திருந்தாள் என்று கதை முடியும். பொம்பளங்க வெரமானவங்க கையெளுத்த மாத்தி எளுதியிருப்பாங்க.

    கோபாலன்

    ReplyDelete
  2. ஏற்கனவே படித்தது தான்!
    இதைப் படித்ததும் நான் இப்படி யோசித்ததுண்டு
    “ஒரு சமயம் இருவருக்கும் முகம் பார்த்துப் பேசிக் கொள்ள பிடிக்கவில்லையோ....“ என்று

    ReplyDelete
  3. இதை வைத்தே ஒரு திரைப்படமும் வந்திருக்கு.

    கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசினாலே வேற பிரச்சனைகள் வராதே...

    ReplyDelete
  4. இந்த கதையை நான் படித்திருக்கிறேன்! இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படுவது தவறுதான்!

    ReplyDelete
  5. நல்ல கதை ,, எல்லோருக்குமானது..

    ReplyDelete
  6. படித்திருக்கின்றோம்...அருமையான கதை....

    இதன் அடிப்படையில் மலையாளத்தில் ஒரு திரைப்படமும் இருக்கின்றது. பேனா நட்பிற்கும், ஃபேஸ் புக் நட்பிற்கும் அத்தனை வித்தியாசம் இல்லை என்றாலும், ஃபேஸ் புக்கில் புகைப்படங்கள் எல்லாம் போட முடியுமே போடாதவர்கள் மிகக் குறைவுதான்! சுஜாதா தற்போது உயிருடன் இருந்திருந்தால் இதற்கு என்ன சொல்லி இருப்பார்?

    முற்றத்து முல்லையின் அருமை தெரியாமல் மாற்றான் தோட்டத்து முல்லை?........


    ReplyDelete
  7. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி..... அருமையான பாடல் அது....

    கதை முன்பே படித்தது என்றாலும் மீண்டும் படித்து ரசித்தேன்.

    ReplyDelete
  8. சிறந்த படிப்பினை
    மாறுபட்ட வெளியீடு
    பாராட்டுகள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.