Monday, May 12, 2014



விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர் என்ற டிராமா' ரொம்ப சூப்பருங்கோ 


விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் என்ற நிகழ்ச்சியை நடத்திவருகின்றனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்று சொல்லி ஒரு பெரிய டிராமவை நடத்தி வருகின்றனர். பல டிவி சேனல்களில் பரபரப்பான டிவி சிரியல் நிகழ்ச்சியை பார்க்கும் போது நிறைய டிவி விளம்பரங்கள் போட்டு இடை இடையே நிகழ்ச்சியை சிறிது சிறிதாக காண்பிப்பார்கள் அது போலவே விஜய் டிவி மொக்கை டிராமக்களிகிடையே சிறிது சிறிதாக பாடகர்களை பாட வைக்கிறார்கள்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் முன் விஜய் டிவியில் ஒரு விளம்பரம் வந்ததது அது பலருக்கும் நினைவு இருக்கலாம் அதில் உங்கள் குழந்தைக்கு பாடும் திறமை இருந்தால் அதை சிடியில் ரிகார்ட் பண்ணி எங்களுக்கு அனுப்பி வையுங்கள் அதிலிருந்து உங்கள் குழந்தைகள் தேர்வி செய்யப்படுவார்கள் என்று சொல்வது போல விளம்பரம் வந்ததது,

ஆனால் நடந்தது என்ன? அப்படி யாரும் செலக்ட் செய்யவில்லை அல்லது அப்படி வந்தவர்களை செலக்ட் செய்துவிட்டு அதன் பின் சூப்பர் சிங்கர் ஜூனியர் டிராமாவிற்காக ஊர் ஊராக போய் அங்கு ஹால் புக் செய்து சிடி மூலம் செலக்ட் செய்தவர்களை அங்க வரச் சொல்லி அதோடு தெருவில் போவோர் வருவோர்களை எல்லாரையும் ஹேய் உங்க முகரைகட்டையை டீவியில் காண்பிக்கிறோம் வருகிறீர்களா என்று அழைத்தும் அரசியல் கட்சிகார்கள் பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டுவது போல கூட்டம் கூட்டியும் ஏதோ விஜய் டிவி நிகழ்ச்சியில் மக்கள் அலைகடலேன திரளுகின்றனர் என்று ஷோகாட்டிக் கொண்டிருந்தனர். அந்த செலக்ஷன் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் யாருக்கும் அந்த செலக்ஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பலர் கண்றாவியாக பாடியதை வைத்தே அறிந்து கொள்ளலாம்

ஒரு போட்டி நிகழ்ச்சிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப விருப்பம் உள்ள பெற்றோர்கள் முதலில் செய்வது தங்கள் குழந்தைக்கு கொஞ்சமாவது தகுதி இருப்பதாக தெரிந்தால்தான் அனுப்புவார்கள். அப்படி இல்லாத குழந்தைகளைஅனுப்ப எந்த பெற்றோர்களும் விரும்புவதில்லை அப்படி அனுப்புகிறார்கள் என்றால் ஒன்று டிவியில் தங்கள் குழந்தையின் முகம் தெரிய வேண்டும் என்று அல்லது டிவிக்கார்கள் பணம் தருவதாக இருந்தால் மட்டுமே அனுப்புவார்கள் என்பது உண்மைதானே

இந்த டிராமாவில் 8 வயது 10 வயது கொண்ட ஏழை சிறுமிகளை பணம் கொடுத்து கூட்டி வந்து பாட செய்து பாடும் நேரத்தில் அவர்களின் குடும்ப சூழ்நிலையை டிவியில் காண்பித்து சோகம் கூட்டுகிறார்கள் என்னமோ கஷடப்படும் ஏழைச் சிறுமிகள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தினமும் டிவியில் கண்டு கனவுலகில் மிதந்து தானும் ஒரு பாடகி ஆக வேண்டும் என்று நினைப்பதாக பில்டப் கொடுக்கிறார்கள் விஜ்ய டிவியின் பிரபலம் படித்தவர்களிடையேயும் மேலைநாட்டு கலாச்சாரத்தி சிரழிந்து கொண்டவர்களிடேயும் மயிலாப்பூர் மாமிகளிடையேயும் மட்டும்தான் உண்டு ஆனால் எந்த ஏழைக்குடும்பத்தில் கிடையாது

இந்த சூப்பர் சிங்கர் டிராமைவை பற்றி எழுத காரணம் கடந்த வாரத்தில் ஒலிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிதான். அதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிச்சிறுவனை கூட்டி வந்து (செட்டப்) பாடச் செய்தார்கள். அவன் பாட பாட சொல்லி வைத்தார் போல நடுவர்களான பாடகர்கள் அழ ஆரம்பித்தனர் பழைய தமிழ்படத்தில் பேச தெரியாதவன் கடவுள் முன்னால் கடவுளின் ஆசீர்வதத்தால் தீடிரென்று பாட ஆரம்பிப்பான். அது போல இந்த சிறுவன் பாடும் போது அப்படி ஒரு பில்டைப்பை கொடுத்து டீவி ரேட்டிங்காக நடுவர்களை அழ வைத்தனர். அதிலும் பெண் நடுவர்கள் எண்ணமோ இசை என்ற இன்ப வெள்ளத்தில் நீந்த ஒடோடி வருவது போல அழுது கொண்டே மேடை நோக்கி ஒடி சென்றார்.


அந்த சிறுவன் பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்பது உண்மைதான்..ஆனால் இவனைப் போல எத்தனை கண் தெரியாதவர்கள் ஊன முற்றோர்கள் மனவளர்ச்சி குன்றியவர்கள் ரயில்களில் பஸ்களில் தெருக்களில் பாடிக் கொண்டிருக்கின்றனர் .அப்போது எல்லாம் யாரும் கண்டு கொள்வதில்லை அல்லது பாராட்டி அணைப்பதில்லை. ஏன் தன்னால் இயன்றளவு நின்று உதவி செய்வதில்லை. ஆனா உங்க்க்கமக்கா டீவி நிகழ்ச்சியில் பாட ஆரம்பித்ததும் இந்த நடுவர்கள் நாடகம் ஆடத் தொடங்கி விடுகின்றனர். அதாவது தாங்கள் வாங்கும் காசுக்காக நடிக்க ஆரம்பிக்கிறார்கள்

அதில் ஒரு நடுவர் வாஸந்தன் என்பவர் ஒருமடிப் மேலே சென்று உன்னால் எப்போவெல்லாம் வரமுடியுமோ அப்போ எல்லாம் வந்து இந்த மேடையில் பாடலாம் என்கிறார். அதாவது உன்னை வெச்சு இன்னும் நாங்கள் கூத்து அடித்து மக்களை அழ வைச்சு எங்கள் டிவி ரேட்டிங்கை கூட்டுகிறோம். அப்பதான் இப்படி நடிக்கும் எங்களுக்கும் கூடுதலாக சில எச்சில் துண்டுகள் கிடைக்கும் என்று நினைத்து சொல்கிறார் அட ஒக்காமக்கா நீ நடத்துவது ஒரு போட்டி நிகழ்ச்சி அதில் யார் சிறப்பாக பாடிவருகிறார்களோ அவர்கள்தான் தொடர்ந்து வர முடியும் அவர் ஊனமுற்றவர் அல்லது கண் தெரியாதவர் என்பதால் தொடர அனுமதிப்பதில்லை.ஆனால் அவர் தொடர்ந்து பாடுவதற்கு ஒரு சப்பையான காரணத்தை சொல்லுவதுதான் உங்கள் போட்டியின் விதிமுறைகளா?

ஏம்பா நடுவர்களே நிகழ்ழ்சியை நடத்துபவர்களே இப்படி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை நீங்க பாடவைத்து, எல்லோரையும் அழ வைத்து, சிம்பதி தேடிதான் நிகழ்ச்சியை வெற்றி பெற வைக்க முடியுமா என்ன?உங்களையெல்லாம் வைத்து ஒரு போட்டி நடத்துகிறார்களே அவர்களைதான் அடிக்கணுமடா?

உண்மையில் அவர்கள் திறமையை வெளிக் கொணர்ந்து உலக்கு கொண்டு வந்து காண்பிக்க வேண்டுமென்றால் சன்டிவியில் நடத்துவது போல பார்வையற்ற & மாற்றுத்திறனாளிகளை கொண்டுவந்து அந்த நிகழ்ச்சியை புகழ் பெற செய்யுங்கள்


நீங்கள் இப்போ செய்வது எப்படி இருக்கிறது என்றால் நல்லா ஒடக் கூடியவர்கள் கலந்து கொள்ளும் ஒட்டப் பந்தயத்தில் ஒரு ஊனமுற்றவனையும் கலந்து கொள்ளச் செய்து எல்லோருடைய அனுதாபத்தை பெற முயற்சித்து அதை கொண்டு பலர் மத்தியில் அந்த நிகழ்ழ்சியை பிரபலம் அடையச் செய்யும் ஒரு நிகழ்வாகவே எனக்கு தோன்றுகிறது



நான் அந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிச் சிறுவனை குறை சொல்லவில்லை ஆனால் அவனை வைத்து இந்த நிகழ்ச்சிக்கு ரேட்டிங்கை கூட்ட இவர்கள் ஆடும் டிராமைவைத்தான் கடுமையாக கண்டிக்கிறேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்

திருமதி சௌமியா, மகந்தி, தேவன், ஜேம்ஸ்வசந்த் மகாராஜன்

29 comments:

  1. Vijay TV நடத்தும் ஆள் தமிழகத்தை சேர்ந்தவர் அல்ல...

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்காவில் இருந்து வரும் ஸ்டார்டிவியின் தமிழ்பிரிவுதான் இது. ஆனால் இதன் தமிழக பொறுப்பாளர் இருப்பவர் தமிழர்தான். தமிழந்தான் இப்படி பார்வையற்ற மாற்றுத்திறனாளிச் சிறுவனை வைத்து விளம்பரம் தேடும் கேவலமான விஷயத்தை செய்கிறான்

      Delete
  2. விஜய் டி.வி யின் தரம் குறைவதே காரணம்,... அதுக்கு தான் இது போன்ற "ரியாலிட்டி"கண்றாவிகளை நான் பார்ப்பதே இல்லை...

    ReplyDelete
    Replies
    1. ஷோக்களை பார்ப்பது தவறு இல்லை ஆனால் அது தடம்மாறும் போது சுட்டிக்காட்ட வேண்டும் தயங்க கூடாது

      Delete
  3. நல்லதுக்கு நடக்கும் டிராமா என்றால் ஓக்கேதானே...

    ReplyDelete
    Replies
    1. நல்லது அந்த சிறுவனுக்கும் அவனைப் போல உள்ளவர்களை பாதுகாப்பவர்களுக்கு என்றால் தப்பில்லை ஆனால் அவர்களை வைத்து விளம்பரம் தேடுவதுதான் தவறு

      Delete
  4. விஜய் டீவி ரேட்டிங்கை கூட்ட இப்படி அடிக்கடி டிராமா பண்ணுவதை பார்த்து இப்போது அந்த நிகழ்ச்சிகளை பார்ப்பது இல்லை! நல்ல பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நேரம் கிடைக்கும் போது இது போன்ற நிகழ்ச்சியை பார்ப்பது தவறு இல்லை ஆனால் அதை தவறாக கொண்டு செல்லும் போது சுட்டிக்காட்த்தான் தவறக் கூடாது

      Delete
  5. நான் முன்பே கூறியதுபோல,அத்தனையும் ஏமாற்று வேலைகள்.நடுவர்கள்,கூலிக்கு மாரடிப்பவகர்கள் .ஒருவர்eliminate படும்போது,இவர்கள் அடிக்கும் கூத்தைப்பார்க்கவெண்டுமே,கண்றாவி.பங்கேர்க்கும் பாடகர்களை.எப்படியெல்லாம் டீஷ் பண்ணுகிரர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்.ஏன் வெள்ளிக்கிழமைகூட திறமையான ஒடு பெண்ணை வெய்ய் லிஸ்ட்டில் வைத்து,அவள் பெயரை கடைசியில் அறிவித்,து அவளை படாதபாடு படுத்திவிட்டார்கள்.பாவம் குழந்தைகள் பெற்றோர்கள்பாடு படுமோசம்.எதோ ஒரு மாயை.கல்லாகட்டுகிறார்கள்

    ReplyDelete
  6. நான் முன்பே கூறியதுபோல,அத்தனையும் ஏமாற்று வேலைகள்.நடுவர்கள்,கூலிக்கு மாரடிப்பவகர்கள் .ஒருவர் நீக்கம்படும்போது,இவர்கள் அடிக்கும் கூத்தைப்பார்க்கவெண்டுமே,கண்றாவி.பங்கேற்க்கும் பாடகர்களை.எப்படியெல்லாம் டீஷ் பண்ணுகிரர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்.ஏன் வெள்ளிக்கிழமைகூட திறமையான ஒடு பெண்ணை வெய்ய் லிஸ்ட்டில் வைத்து,அவள் பெயரை கடைசியில் அறிவித்,து அவளை படாதபாடு படுத்திவிட்டார்கள்.பாவம் குழந்தைகள் பெற்றோர்கள்பாடு பரிதாபத்துகுறியது.எதோ ஒரு மாயை.கல்லாகட்டுகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. ஆனால் இதற்காக நடுவர்களாக வரும் பாடகர்களை குறை சொல்லவிரும்பவில்லை அவர்கள் பணத்திற்காக சொல்லிக் கொடுத்தப்படி நடிக்கிறார்கள் அவ்வளவுதான். ஆனால் இந்த நிகழ்ச்சியை பின்புறமாக இருந்து இயக்குபவர்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்

      Delete
    2. நடுவர்களாகவிருப்பவர்கள்.ரசிகர்களிடையே பெரும் செல்வாக்கைப்பெற்றவர்கள். அவர்களே தரம் தாழ்ந்து செயல்படும்போது,வேதனையாகவிருக்கிறது.

      Delete
  7. நான் இந்த கண்றாவி நிகழ்ச்சியைலாம் பாப்பதில்லை

    ReplyDelete
    Replies
    1. நீங்க பிரபல பதிவர் அதனால் உங்களுக்கு எந்த டிவியையும் பார்க்க நேரமிருப்பதில்லைதானே

      Delete
  8. மதுரைத் தமிழா நன்றாக போட்டு விளாசித் தள்ளிவிட்டீர்கள்! இவர்கள் அடிக்கும் கூத்தைக் கண்டுவிட்டு இப்போது நாங்கள் இது போன்ற நிகழ்சிக் கன்றாவிகளைப் பார்ப்பதே இல்லை! அனைத்த்மே செட்டப்புதாங்க!.......குழந்தைகள் படும் பாடு மிகவும் மனதுக்கு சங்கடமாக இருக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் டிவியில் வந்து புகழ் பெறவேண்டும் என்று நினைபதால் தான் ....குழந்தைகளின் மன நிலை எப்படி ஆகும் பாருங்கள் இப்படிப்பட்ட பெற்றோர் இருந்தால்.......பெற்றோர்கள் திருந்தினால்தான் உண்டு.....எல்லோருமே ஒரு புகழ் மயக்கத்தில் இருக்கின்றார்கள்! என்ன செய்ய? அப்படிப்பட்டவர்கள் இருக்கும் வரை விஜய் டிவிக்கு கொண்டாட்டம்தான்......நல்ல ஒரு இடுகை!

    எடுத்துரைத்து விட்டீர்கள்! மக்களுக்கு புத்தி வருமா?

    ReplyDelete
    Replies
    1. இந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த எனது மனைவி மாமியாரின் கண்களில் கண்ணிர் காரணம் பரிதாபமே அதைத்தான் விஜய் டிவி எதிர்பார்க்கிறது அதனால் அந்த நேரத்தில் நான் கேட்ட பல கேள்விகள் எனது மனைவியையும் மாமியாரையும் சிந்திக்க வைத்ததோடு சிரிக்கவும் வைத்துவிட்டது.

      விஜய்டிவியால் அந்த மாற்றுதிறனாளிக்கு நன்மையோ இல்லையோ எனக்கு ஒரு பதிவு எழுத ஐடியா கிடைத்துவிட்டது

      Delete
  9. உங்கள் கோபம் நியாயமானதுதான் எப்படியோ போகட்டும். இத்தகைய மாற்றுத் திறனாளிகளுக்காக விளம்பர லாபத்தில் குறிப்பீட்ட தொகையை நிதி உதவி செய்தால் நன்றாக இருந்திருக்கும். டி.எல் மகராஜன் ஒரு தொகையை வழங்கினார். ஆனால் விஜய் டி வி ஏதும் கொடுத்ததாகத் தெரியவில்லை.
    நான் தினந்தோறும் ரயிலில் அலுவலகம் சென்று வருகிறேன், பார்வையற்ற பலர் நன்றாகப் பாடுவார்கள். ஆனால் இந்த சிறுவனைப் போல இனிமையான குரலை கேட்டதில்லை. அந்த சிறுவனுக்கு பார்வை இன்மை மட்டுமல்ல மூளைக் குறைபாடும் இருப்பதாகத் தெரிகிறது அப்படி இருந்தும் பாடும் திறமை இருப்பது மிக ஆச்சர்யமே.
    அனைவரது அனுதாபத்தையும் தூண்டி விட்டு விஜய் டிவி விளம்பரம் தேடிக் கொண்டது உண்மை

    ReplyDelete
    Replies
    1. மாற்றுதிறனாளியை வைத்து இலவச விளம்பரம் தேடும் விஜய் டிவி தங்களது டிவி ஷோவில் பங்கேற்கும் கண்டவர்களுக்கு எல்லாம் அள்ளித் தரும் போது இந்த சிறுவனை வைத்து பாதுகாப்பவர்க்கு ஒரு 5 லட்சமோ பது லட்சமோ கொடுத்து இருக்கலாம்தானே. ஆனால் அதற்கு பதிலாக அந்த சிறுவனுக்கும் சாக்லேட்டும் பிஸ்கட்டையும் கொடுத்து ஏமாற்றுவது என்ன நியாம்

      Delete
    2. கண்டிப்பாகத் தரலாம். தரும் என்றுதான் நானும் நம்பினேன். அப்படிச் செய்யாதது மிகப் பெரிய ஏமாற்றமே. பாதுகாப்பவர் பற்றிய சரியான விவரத்தையும் தந்ததாகவும் தெரியவில்லை. அவற்றைத் தெரிவித்திருந்தால் நிகழ்ச்சியைப் பார்த்தவர்களாவது தங்களால் ஆன உதவிகளை செய்ய முன் வந்திருப்பார்கள்.
      அனுதாபத்தின் பலன் உரியவர்களுக்குத்தான் நியாயமாகப் போய்ச் சேரவேண்டும்.
      மதுரைத் தமிழனின் தார்மீக கோபத்திற்கு என் ஆதரவு உண்டு.

      Delete
  10. ஓ.... இப்படியெல்லாம் நடக்கிறதா...?

    ReplyDelete
  11. என்னவோ தெரியவில்லை. சிலர் அழுவதைப் பலர் ரசிக்கிறார்கள். சீரியல்கள், சொல்வதெல்லாம் உண்மை போல. முதலில் பெண்கள் இதிலிருந்து வெளிவரவேண்டும். பின் விளம்பரம் கிடைக்காமல் போனபிறகு அவர்களே நிறுத்திவிடுவார்கள்.

    கோபாலன்

    ReplyDelete
  12. வணக்கம்சகோ! ஆனா இதெல்லாம் வியாபாரத்தொழில்நுட்பம் என்பதும்
    உங்களுக்குத்தெரியும் வருமானத்தில் கொஞ்சம் வகுத்துக்கொடுக்கலாம்
    மனசாட்சி இருந்தால் நல்லபகிர்வு நன்றி.

    ReplyDelete
  13. வணக்கம் சகோதரர்
    நீங்கள் கூறியுள்ள அனைத்து கருத்துக்கும் நானும் உடன்படுகிறேன் சகோதரர். அவர்கள் விளம்பரம் தேடுவது அப்பட்டமான உண்மை. நானும் அந்த சிறுவனுக்கு விஜய் டிவி ஏதும் செய்யும் என்றே நம்பினேன் ஆனால் எதுவும் செய்யாதது ஏமாற்றம் தந்தது. அவனைச் சென்னையிலேயே தங்க வைத்து மற்ற போட்டியாளர்கள் பங்கேற்கும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள வைத்திருக்கலாம் அதற்கான செலவை விஜய் டிவி ஏற்றுக் கொண்டிருந்தால் அவனது இசை திறமை வெளியிலகிற்கு தெரிந்து அந்த மேடை அவனுக்கு திருப்புமுனையாக அமைந்திருக்கும் அதுவும் செய்யவில்லை விஜய் டிவி. ஒரு நாள் அவனை வைத்து விளம்பரம் தேடிக் கொண்டு அவன் விரும்பும் நாட்களில் வந்து பாடலாம் என்று சொல்லி கழட்டி விட்டது கண்டு நாடகமோ என்று யோசித்துக் கொண்டே தான் இருந்தேன் தங்களின் பதிவு மூலம் தெளிந்தேன். மிக்க நன்றி சகோதரர். தொடருங்கள்.

    ReplyDelete
  14. Dear Admin,
    You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

    To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com.

    நன்றிகள் பல...
    நம் குரல்

    ReplyDelete
  15.  விஜய் டிவி. நிகழ்ச்சிகளை பார்ப்பது இல்லை! நன்றி!

    ReplyDelete
  16. உங்கள் பதிவிலுள்ள ஆதங்கம் நியாயமானதே.

    ReplyDelete
  17. பிரித்து மேய்ந்து விட்டீர்கள்.
    எனக்கு இந்த சூப்பர் சிங்கர்,ஜோடி நம்பர் 1,, போன்றவைகளின் விளம்பரங்களை பார்த்தாலே கடுப்பாக இருக்கும். ஏன் தான் இப்படி மக்களை ஏமாற்றுகிறார்களோ என்று இருக்கும்.

    நீங்கள் சொல்வது மாதிரி அந்த நடுவர்கள் பண்ணும் அட்டகாசம் தாங்க முடியாது. அதிலும் இந்த ஜேம்ஸ் வசந்தன் மீது அவருடைய மனைவி அவருடைய ஒழுக்கத்தைப் பற்றி ஒரு காவல் துறையில் புகார் சிதிரிக்கிறார். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் நடுவர்கள்.....

    கொடுமை, கொடுமை...

    ReplyDelete
  18. சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது....மதுரை தமிழா!, ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்.

    ReplyDelete
  19. தமிழகம்/இந்தியாவில் நடக்கும் பல Reality shows பெரும்பாலும் ஆங்கில ஷோக்களை காப்பி அடித்தே எடுக்கப்படுகின்றன. பொதுவாகவே இந்த மாதிரி நிகழ்ச்சிகளை நான் பார்ப்பதே இல்லை - ரொம்பவே ட்ராமா என்று தோன்றுவதால் நான் பார்ப்பதே இல்லை....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.