Thursday, May 15, 2014



வாக்குமையத்தில் வாக்கு எண்ணுவதை வீட்டில் இருந்தபடியே வெப்சைட்டின் மூலம் பார்க்கலாம் 


'இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை பொதுமக்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் பார்க்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 39 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 42 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் நடக்கும், வாக்கு எண்ணிக்கையை வெப்சைட்டில் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக public.gelsws.in http://180.179.171.127:8081/TNP/ என்ற வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை வீடியோவில் பார்வையிட விரும்புவோர், முதலில் வெப்சைட் டில் பெயர், தொலைபேசி எண்களை வழங்கி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அதன்பிறகு அவர்களுக்கு பாஸ்வேர்ட் அனுப்பி வைக்கப்படும். அதன்மூலம் வெப்சைட்டில் வாக்குப்பதிவை பார்வையிடலாம்.இந்த வசதி இன்று காலை 8 மணி முதல் கிடைக்கும். மேலும், ஒரு பார்வையாளர் 5 நிமிடங்களுக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட முடியும். அதன்பிறகு இணைப்பு துண்டிக்கப்படும். மீண்டும் பார்வையிட புதிதாக லாக் இன் செய்ய வேண்டும்.

வெப்சைட்டில் பார்ப்பது எப்படி?


* public.gelsws.in  வெப்சைட் சென்று உங்கள் பெயர், செல்போன் நம்பர் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். எஸ்எம்எஸ்ஸில் பாஸ்வேர்ட் வரும். இதை பயன்படுத்தி வெப்சைட்டுக்குள் செல்லலாம்.

* தமிழகத்தின் 39 தொகுதிகளின் பெயர் பச்சை நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

* எந்த நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கையை நாம் பார்க்க விரும்புகிறோமோ, அந்த தொகுதியின் பெயரில் ‘கர்சர்’ வைத்து கிளிக் செய்ய வேண்டும்.

* நாடாளுமன்ற தொகுதியின் 6 சட்டமன்ற தொகுதிகளின் பெயர்களில் ‘கர்சர்’ வைத்து கிளிக் செய்தால், குறிப்பிட்ட அந்த சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கையை நேரடியாக பார்க்கலாம்.

* கம்ப்யூட்டரின் முழு ஸ்கிரினில் பார்க்க, வீடியோ காட்சியின் இடது பக்கம் கீழே டிவி போன்று உள்ள ஐகானை அழுத்தினால் காட்சிகள் தெளிவாகவும் பெரிதாகவும் தெரியும்.

* தேர்தல் கமிஷன் செய்தி குறிப்பில் வாக்கு எண்ணிக்கை குறித்த வீடியோ இன்று காலை 8 மணி முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

* ஆனால் வெப்சைட் நேற்று பிற்பகல் முதலே இயங்க துவங்கி விட்டது. ஓட்டு எண்ணிக்கை மையங்களில் நடந்த பல்வேறு காட்சிகள் தெரிய ஆரம்பித்து விட்டன.

இணையத்தில் முடிவுகள்

தேர்தல் துறையின் இணையதளத் தில் (www.tn.gov.in) ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை விவரம் வெளியிடப்படும். மின்னணு வாக்குப்பதிவு கருவிகளில் பதிவாகும் வாக்குகள், 6 மாதம் வரை அப்படியே வைக்கப்பட்டிருக்கும். வாக்கு எண்ணிக்கை முடிந்த 45 நாட் களுக்குள் தேர்தல் பிரச்சினை தொடர் பான வழக்குகளைத் தொடரலாம். 

7 comments:

  1. சரியான நேரத்தில் பகிர்ந்த பயனுள்ள பகிர்வு
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை. இதைப் பார்த்து நானும் சோதித்துப் பார்த்து விட்டேன். நன்றாக வேலை செய்கிறது.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரர்
    பயனுள்ள தகவல். சரியான நேரத்தில் பகிந்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. உலகம் ரொம்பவே முன்னேறி விட்டது என்று உணர முடிகிறது சகோதரா
    அப்படியே உங்களுக்கு விழும் பூரிக்கட்டை அடியை எங்களாலும் இனி
    வரும் காலங்களில் லைவா எண்ணாலாம் அப்படித்தானே ?:...:)))))))
    "வாழ்த்துக்கள்" இது அதுக்கில்ல இந்தப் பகிர்வுக்கு மட்டுமே :)))))

    ReplyDelete
    Replies
    1. ஓஹோ அதுக்கு முன்னோட்டம் தான் இந்த பதிவா????

      அந்த கண்கொள்ளாக் காட்சியை எப்பத்திலிருந்து பார்க்கலாம் தலைவரே!!!!!

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.