உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, April 30, 2015

பெரியார் பற்றி விஜயகாந்திடம் கேட்டால் இப்படிதான் பதில் கிடைக்குமோ?vijayakanth
பெரியார் பற்றி விஜயகாந்திடம் கேட்டால் இப்படிதான் பதில் கிடைக்குமோ?

பத்திரிக்கை நிருபர் கூட்டத்தில் விஜய்காந்த கலந்து கொண்ட போது அவர்கள் உண்மைகள் வலைதளம் சார்பாக மதுரைத்தமிழனும் கலந்து கொண்டு விஜயகாந்திடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்

அண்ணே பெரியார் பற்றி ஏதாவது சொல்லுங்கண்ணே?
தம்பி பெரியாறில்  ஒடும் தண்ணியை தேக்கி வைத்து பயனடைய முல்லை பெரியார் அணை கட்டி உள்ளார்கள் அதை வைச்சு இந்த கேரளாக்காரன் பிரச்சனை பண்ணுவதாக செய்திகள் வருகின்றன. நான் முதலமைச்சர் ஆனால் அதை தீர்த்து விடுவேன்

Monday, April 27, 2015

இணைய (போலி) பகுத்தறிவு மொண்ணைகள்.இணைய (போலி) பகுத்தறிவு மொண்ணைகள்.

அண்ணே  உண்மையான பகுத்தறிவாளரகள் செய்வது என்ன அண்ணே

அவர்கள்  செய்வது  கடவுள் இல்லை என்று தங்களது மறுப்பு கொள்கையை மக்களிடம் எடுத்துரைப்பது

அப்ப இந்த இணைய (போலி)பகுத்தறிவு மொண்ணைகள் அதை செய்யாமல் பார்ப்பணர்களை எதிர்ப்பது ஏன்?

தம்பி "அந்த" அறிவு ஜீவிகளின் கண்களுக்கு பார்பணர்கள் கடவுளாக காட்சி அளிக்கிறார்கள் போல இருக்கு அதனால் அப்படி செய்கிறார்கள்....

மேலும் பல ஸ்டேடஸ்கள் தமிழகத்தில் பகுத்தறிவுவாதிகளாக வேஷம் போடுபவர்கள் பற்றி

Sunday, April 26, 2015

இக்பால் செல்வனின் பதிவிற்கு நான் இட்ட பதில்
///நவீன முகப்புத்தக தருமி ஒருவர் 20 கேள்விகளை முன்வைத்தாராம், அதை பச்சைத் தமிழர் ஒருவர் ஆகா நியாயமாக இருக்கின்றதே என ஈயடித்து அதில் கேட்டவரை விட ஒரு படி மேலே போய் அக் கேள்வியை எல்லா பகுத்தறிவாளர்களுக்கும் முன் வைத்தார்///

விரமணிக்கு 20 கேள்விகள் என்று கேள்வி கேட்டவர்தான் எல்லா பகுத்தறிவாளர்களுக்கும் கேள்வி கேட்டார். அவர் கேட்டதை படித்த நான் அந்த கேள்விகள் எனக்கு நியாமாக பட்டதால் அதில் ஒரு வரியும் மாற்றாமல் அப்படீயே கொடுத்து நான் சொன்னது இதுதான்.


///பலதரப்பட்ட செய்திகள் மற்றும் அதன் கோணங்களை எனது தள வாசகர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டே இது இங்கு அது எழுதியவரின் அனுமதியுடன்  இங்கு பதியப்படுகிறது, இதனை படிக்கும் நண்பர்கள் கண்ணியமான முறையில் கருத்து தெரிவித்தால் மட்டுமே இங்கு வெளியிடப்படும்....அப்படி முடியவில்லை என்றால் இதை படித்துவிட்டு அப்படியே நகரவும்.///

இதை நன்றாக படித்து சொல்லுங்கள் இதில் ""நான் எங்கே எல்லா பகுத்தறிவாளர்களுக்கும் "என்று சொல்லி இருக்கிறேன்

Friday, April 24, 2015

கேள்வி கேட்பது நியாயம் இல்லையா ?கேள்வி  கேட்பது நியாயம் இல்லையா ?

எனது முந்தைய பதிவான  கி வீரமணிக்கு 20 கேள்விகள் : வீரமணிக்கு மட்டுமல்ல எல்லா பகுத்தறிவுக்கும்தான். http://avargal-unmaigal.blogspot.com/2015/04/20-20-questions-to-veeramani.html என்பதை பதிந்து இருந்தேன்.
அது சம்பந்தமாக பலர் அந்த பதிவில் வந்த கேள்விக்கு பதில் சொல்வதற்கு பதிலாக பலரும் பலவாறு எழுதி சாதாரணமாக இருந்து வரும் என்னை பிரபலபடுத்தி வருகின்றனர். அவர்களுக்கு எனது நன்றிகள்.


ஆனால் இது எதுவும் புரியாதவர்களுக்கு அதாவது சைலண்ட் ரீடர்களுக்கு இதை நான் ஏன் பதிந்தேன் என்ற ஒரு சிறு விளக்கம்தான் இந்த பதிவு


Wednesday, April 22, 2015

கி வீரமணிக்கு 20 கேள்விகள் - வீரமணிக்கு மட்டுமல்ல எல்லா பகுத்தறிவுக்கும்தான்.கி வீரமணிக்கு 20 கேள்விகள் - வீரமணிக்கு மட்டுமல்ல எல்லா

1. ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தை சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?

2. கடவுள் இல்லை என்று கூறும் நீங்கள் கிறிஸ்து இல்லை, அல்லா இல்லை என்று தைரியமாக கூறமுடியுமா?

3. தியாகராஜர் ஆராதனையை கேலி செய்யும் உங்களுக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை கேலி செய்து அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் இருக்கிறதா?

Tuesday, April 21, 2015

இந்தியாவிற்கு வருகைதரும் மோடிக்கு வரலாற்று சிறப்புமிக்க வரவேற்பு

அன்புடன்
மதுரைத்தமிழன்

Monday, April 20, 2015

மனதை நெகிழ வைக்கும் கசக்கும் உண்மை...

avargal unmaigalhttp://avargal-unmaigal.blogspot.com
பேஸ்புக் : https://www.facebook.com/avargal.unmaigal
டுவிட்டர் : https://twitter.com/maduraitamilguy
இமெயில் : avargal_unmaigal@yahoo.com

அன்புடன்
மதுரைத்தமிழன்

Sunday, April 19, 2015

இவர்கள்தான் தமிழர்கள்...... உரிமைக்காக போராடும் கூட்டமல்ல கூத்தாடிகளை பார்க்க வந்த ஆட்டு மந்தைஇவர்கள்தான் தமிழர்கள்...... உரிமைக்காக போராடும் கூட்டமல்ல கூத்தாடிகளை பார்க்க வந்த ஆட்டு மந்தை கூட்டம்


கடந்த வாரம் தமிழகத்தில் நடந்த ஒரு நிகழ்வே இந்த பதிவு எழுதுவதற்கு காரணமாக அமைந்தது. அது வேறு ஒன்றுமில்லை கல்யாண் ஜுவல்லர்ஸ் சென்னையில் திறந்த ஒரு ஷோரூம் பற்றியதுதான். இந்த நிகழ்விற்காக அவர்கள் பிரபு அவர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட விளம்பர படம். இந்த படம் வந்ததும் ஏதோ அவர் செய்யக் கூடாததை செய்துவிட்ட மாதிரி சிவாஜியின் பெயரை கொடுத்துவிட்ட மாதிரி இந்த சமுக தளங்களில் மக்கள் பொங்கி எழுந்து வரிந்து கொட்டினர். அதுமட்டுமல்லாமல் கல்யாண் ஜுவல்லர்ஸ் தொடர்ந்து இந்த விளம்பரங்களை வெளியிட்டு மக்களை தொந்தரவு பண்ணினார்கள் என்றும் எழுதி தள்ளினர்.

Friday, April 17, 2015

சூடான தமிழகம் குளிர்ந்து போனதா?சூடான தமிழகம் குளிர்ந்து போனதா?

ஏப்ரல் முதல் வாரத்தில் ஆந்திரவுக்கு மரம் வெட்ட சென்ற கூலி தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி பரவியதும்  தமிழக மக்கள் சூடாகினர் அதனால் சமுக வலைத்தளங்களும் அக்னி நட்சத்திர வெயில் போல சூடாகியது. அது மட்டுமல்ல அரசியல் கட்சிகளும் தங்கள் பங்குக்கு குரல் கொடுத்தனர்.

இப்படி சூடாகி போன தமிழகத்தை குளிர்விக்க ஆசிரியை ஒருவர் 10 ஆம் வகுப்பு மாணவர் உடன்  மறைந்து போனார் அப்படி போனவர் இவர்தா இன்று நெட்டில்  போட்டு ஒன்று கவர்ச்சிகரமாக ஒடியது. அதை பார்த்த வயதான ஆண்கள் நமக்கு  படிக்கும் போது இப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்க்கவில்லையே என்று பொருமிதான் போனார்கள் .. இன்றைய மாணவர்களும் இப்படிபட்ட ஆசிரியை நமக்கு வகுப்பு ஆசிரியையாக வரவில்லையே என்று ஏங்கிதான் போனார்கள். இதனால் 20 பேர் செத்த  விபரம் கொஞ்சம் அடங்கி போனது

Thursday, April 16, 2015

கசக்கும் உண்மைகள்avargal unmaigal maduraitamilguy மதுரைத்தமிழன்
கசக்கும் உண்மைகள்


இந்த பேஸ்புக்கில் சில விஷயங்களை நீங்கள் தொடர்ந்து கவனித்து இருக்கலாம்....

அதில் ஒன்றுதான் கோவில் படங்களைப் போட்டு..... கோபுரத்தின் கீழோ... படிக்கட்டில் அமர்ந்தோ ஈ என்று இளித்தவாறு போட்டோ எடுத்து போடுவது.....

அதுவரை அது பரவாயில்லை.....

அவ்விதம் போட்டோ போடுகிறவர்கள் தம்மை தொல்லியல்துறை வல்லுநராகக் காண்பித்துக் கொண்டு (சில அறநிலைய புத்தகங்கள், தொல்லியல் புத்தகங்களைப் படித்துவிட்டு...!!) தாம் சென்ற கோவிலைப் பற்றிய அவதூறுகளைப் பரப்புவது!!.....

அவதூறு பரப்பினாலும் பரவாயில்லை. யாரும் நம்பமாட்டார்கள்.... இவர்களிடம் உள்ள முக்கிய பிரச்சனைக்கு வருகிறேன்....

Wednesday, April 15, 2015

பள்ளியில் படிக்கும் சிறுவர்களுக்கு மற்றும் இளைஞர்களுக்கு கவுன்சிலிங்க் அவசியமா?பள்ளியில் படிக்கும் சிறுவர்களுக்கு மற்றும் இளைஞர்களுக்கு கவுன்சிலிங்க் அவசியமா?

பள்ளியில் படிக்கும் சிறுவர்களுக்கு கவுன்சிலிங்க் அவசியமா என்று கேட்டால் இல்லை என்றுதான் நான் சொல்லுவேன். ஒரு குழந்தைக்கு நல்ல ஆசிரியரும், பெற்றோர்களும் இருந்துவிட்டால் ஸ்டுடெண்ட் கவுன்சிலிங்குக்கு அவசியம் இல்லை.

ஆனால் இப்ப நடப்பதோ, பரிட்சையை நினைக்கும் போதே ஸ்டுடென்ஸ் டென்ஷன் ஆகி மனக் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். அதனால் கவுன்சிலிங்க் அவசியம் என்று இப்போ பலபேர் சொல்லி கிளம்பிவிட்டார்கள். அதுமட்டுமல்ல இப்போது மனக் குழப்பத்திற்கு ஆளாவது ஸ்டுடெண்ட் மட்டும் இல்லை. பெற்றோர்களும் ஆசிரியர்களும்தான். இதற்கு காரணம் இந்த மூவரும் இந்த காலத்தில் முழு அறிவு பெறாமல் இருப்பதுதான். அதிலும் முக்கியமாக பெற்றோர்களையும் ஆசிரியர்களையும்தான் நான் முக்கியமாக குறை சொல்லுவேன்.

Tuesday, April 14, 2015

தாலிகள் இப்படிதான் அறுக்கப்படும்.தாலிகள் இப்படிதான் அறுக்கப்படும்.
----------------------------------------------------------------------------
தாலி


என்னோட பேரு பத்மா. நல்லாயிருக்கு இல்ல? பேருக்கேத்த மாதிரி நானும் நல்லாத்தான் இருப்பேன். நான் பெருசா ஒண்ணும் படிக்கலைங்க. வீட்டுல சோத்துக்கே திண்டாட்டம் இதுல படிப்புக்கு எங்க வழி... அப்படி இருந்தும் நான் 5ஆம் கிளாஸ் வரைக்கும் படிச்சேன்....

எனக்கு 19 வயசுல கல்யாணம் ஆச்சுங்க. மாப்பிள்ளை எங்க சொந்தம் தான். ஒண்ணுமே செய்யவேண்டாம்ன்னு சொன்னதுல என் அப்பா அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம். அவங்க வீட்டுலேயே எல்லா செலவும் செய்து கல்யாணம் பண்ணினாங்க.

இதுல விஷயம் என்னங்குறது அப்புறம் தான் எனக்கு வெளங்கிச்சு.

என் வூட்டுக்காரருக்கு குடி பழக்கம். எல்லா எடத்துலேயும் தேடியும் பொண்ணு கிடைக்கல, நாங்க தான் இருந்தோமே அன்னாடம்க்காயச்சியா..

Monday, April 13, 2015

பள்ளியறைலிருந்து படுக்கை அறைக்கு.......( பெண்களும் படிக்கலாம்)avargal unmaigal
பள்ளியறைலிருந்து படுக்கை அறைக்கு....... பெண்களும் படிக்கலாம்


ஆந்திராவில் என்கவுண்டர் முலம் சுடப்பட்ட 20 தமிழர்கள் பற்றிய பரப்பு  இணையத்தில் தீயாக பரவியது. அதன் வேகத்தை தடுக்கவே யாரோ ஒருவரால் பரபரப்பட்ட ஒரு நிகழ்வே  பத்தாம் வகுப்பு மாணவனை ஆசிரியை ஒரு காதலித்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாலாமல் மறைந்து போனது. தமிழக மக்கள் இவ்வளவு கீழ்தரமாக போய் இந்த பொய்யான செய்தியை மிக அநாகரிக முறையில் பகிர்ந்து இருக்கின்றனர்.ஒருவேளை இது உண்மையான செய்தியாக இருந்தால் கூட அதை பற்றிய செய்திகளை பகிரலாமே தவிர அவர்களைப் பற்றிய போட்டோக்களை அவர்கள் அனுமதியில்லாமல் எப்படி பகிரலாம். அப்படி செய்வது அவர்கள் செய்த குற்றத்தைவிட மிக மகா கேவலமான செயல்  அல்லவா.

Thursday, April 9, 2015

20 பேர் சாவும் தமிழகம் வைக்கும் ஒப்பாரிகளும் 20 பேர் சாவும் தமிழகம் வைக்கும் ஒப்பாரிகளும்
மரங்களை வெட்டுபவர்களை `கண்டதும் சுட உத்தரவு’ உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு அரசால் வழங்கப்பட்டது  என்றும் அதுபற்றி ஆந்திர அரசு  தமிழக அரசுக்கும் தெரிவித்தும். அதை ஒட்டி
 கடந்த இரு வாரமாக ஆந்திர , தமிழக காவல்துறையினர் கூட்டாக வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள சில கிராமங்களில் தேடுதல் வேட்டை நடத்தியதும் மேலும் அந்தக் கிராம மக்களை ஆந்திர எல்லையில் நுழைந்தால் சுட்டுக்கொல்வோம் என எச்சரித்ததும் உண்மையாக இருந்தால் இந்த மரம் வெட்டும் தொழிலாளிகள் கொல்லப்பட்டதில் தவறு ஏதும் இல்லை. அப்படி இல்லாமல் இவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்றால் நிச்சயம் அதற்கு ஆந்திர அரசு பொறுப்பு ஏற்று தவறு செய்த போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை தர வேண்டும். அதற்காக தமிழக மக்களும் அரசாங்கமும் போராட வேண்டும். அப்படி இல்லாமல் சும்மா ஒப்பாரி வைத்து கொண்டு இருக்க கூடாது

Wednesday, April 8, 2015

தலைவர்கள் சொல்லாமல் சொல்லுவது இதுதானோ 

தலைவர்கள் சொல்லாமல் சொல்லுவது இதுதானோ

Tuesday, April 7, 2015

ஆந்திர போலீஸார் சுட்டதில் என்ன தவறு?ஆந்திர போலீஸார் சுட்டதில் என்ன தவறு?


செய்தி :திருப்பதி அருகே சேஷாசலம் காட்டில், செம்மரம் வெட்டச் சென்ற, தமிழக கூலித் தொழிலாளர்கள் மீது, ஆந்திர அதிரடிப்படை போலீசார் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூட்டில், 20 பேர் கொல்லப்பட்டனர்

இது இன்றைய செய்திதாளில் தினமலரில் வந்த செய்தியின் முதல் பகுதி: இந்த செய்தியை மீண்டும் ஒரு முறை படிக்கவும். படித்துவீட்டீர்களா? இப்போது இந்த செய்தியை படிக்கவும்

Monday, April 6, 2015

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை believe in your god never give up
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை

அந்த சிறு ஊரில் உள்ள சர்ச்சில்  சண்டே கூட்டத்திற்கு வரும் மக்கள் அதிகரிக்க தொடங்கினர். அதனால் அந்த சர்ச்சை மிகப் பெரியதாக கட்டி, அங்கு வரும் மக்களுக்கு அதிக பார்க்கிங்க வசதி செய்து தர ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று, அந்த சர்சை கவனித்து வரும் ஃபாதர் நினைத்தார். அந்த சிறிய சர்ச்சுக்கு சொந்தமான அந்த சர்ச்சை சுற்றியுள்ள இடங்கள் சிறிய சிறிய மலை குன்றுகளால் சூழப்பட்டு இருந்தது. அதுமட்டுமல்லாமல் அந்த சர்ச்சுக்கு வேறு எந்தவித வருமானமும் கிடையாது.

Wednesday, April 1, 2015

துண்டு பேப்பர் 3 : தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்தின் மனம் திறந்த பேட்டிதுண்டு பேப்பர் 3 : தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்தின் மனம் திறந்த பேட்டி

முதலில் கொசுறு ஸ்டேடஸ் அதன் பின் ப்ளாக் என்று சொல்லப்படும் வலைத்தளத்திற்காக தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் மனம் திறந்து அளித்த மினி சிறப்பு  பேட்டி

செய்தி :பால் விலை உயர்வால், ஏழை மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை,'' என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஆமாம் பன்னீர் செல்வம் சொன்னது மிக சரிதானே. பாலை ஏழைகள் யாருமே வாங்குவதில்லையே வாங்கினால்தானே அவர்கள் பாதிப்பதற்கு

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog