உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, April 22, 2014

எடுப்பான மார்பும் எடுக்காத பார்வையும்
எடுப்பான மார்பும் எடுக்காத பார்வையும் ஏர்போர்ட்டிற்கு சென்று மனைவியை அனுப்பிவிட்டு மூன்றாவது மாடியில் இருந்து கிழே இறங்குவதற்காக லிப்டில் ஏறினேன். அப்போது அழகான பெண் ஒருத்தி அதில் ஏற ஓடோடி வந்தாள். அவள் அழகாக மட்டும் இல்லை அவள் மார்பும் மிக எடுப்பாகவும் இருந்தது; நானும் அதை கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தேன். ஒரு வேளை நான் அதில் இருந்து என் கண்ணை எடுத்துவிட்டால் அது அவளை இன்ஸ்ல்ட் செய்வது போல அவளுக்கு தோன்றிவிடுமோ என்று நினைத்துதான் நான் அதில் இருந்து கண்ணை எடுக்காமல் பார்த்து வந்தேன்.( ஹீ.ஹீ நீங்க நினைப்பது மாதிரி எல்லாம் தப்பா பார்க்க கூடிய ஆள் நான் இல்லை.)


அவள் லிப்டிற்குள் வந்தது (Press One )ப்ரெஸ் ஒன் என்றாள். நானும் அவள் மார்பகத்தில் ஒன்றைத்தான் ப்ரெஸ் பண்ண சொல்லுகிறாள் என்று கருதி அதை அழுத்தினேன். (மதுரைக்காரணுக்கு எதுவும் கொஞ்சம் புரியும்படியா சொல்லனும் இல்லை என்றால் அவனை குறை சொல்லக்கூடாது )அதற்கு அவள் சிரித்து கொண்டே யூ ஆர் வெரி நாட்டி பாய் என்று சொல்லி என் கன்னத்தில் தட்டிவிட்டு லிப்டில் உள்ள நம்பர் ஒன் பட்டனை தட்டினாள்.

நான் சாரி சாரி என்று சொன்னேன். அதற்கு அவள் சொன்னாள். எனக்கு இந்திய ஆண்களை ரொம்ப பிடிக்கும் ஆனால் நீ மற்ற இந்தியர்களை போல வெட்கப்பட்டு அப்படி என் மார்பகத்தை பார்க்காமல் இருந்திருந்தால் அது எனக்கு மன வருத்தத்தை தந்து இருக்கும் காரணம் நான் அதிக செலவு செய்து என் மார்பகத்தை ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறேன். அதனால் நீ எனக்கு ஸாரி சொல்ல தேவை இல்லை.நீ எனது நாளை மிக சந்தோஷமான நாளாக்கிவிட்டாய். நான் பார்த்ததிலே நீ ரொம்ப ஸ்மார்ட்டான இந்தியன் நீ தான் என்றாள்.

அதற்கு நான், நான் ஸ்மார்ட் என்று உனக்கு எப்படி தெரியும் என்றேன். உன் மார்பகத்தை உற்று பார்த்ததினால் சொல்லுகிறாயா என்றேன்.

அதற்கு அவள் அட நாட்டீபாய் ஆண்கள் ஒரு பெண்ணை பார்த்தால் முதலில் பார்ப்பது பெண்களின் மார்பகத்தைதான் ஆனால் அமெரிக்காவில் பெண்களாகிய நாங்கள் பார்ப்பதோ ஆண்களின் கைவிரல்களைத்தான். அப்படி கைவிரல்களை பார்க்கும் போது அவர்கள் திருமண மோதிரம் அணிந்து இருப்பார்களா என்றுதான் முதலில் கவனிப்போம் அப்படி நாங்கள் கவனிக்கும் போது மோதிரம் இல்லாத ஆண்களிடம்தான் நாங்கள் வழிவோம் என்றாள்

அதன் படி நீ மோதிரம் அணியவில்லை அதை கொண்டு நீ எந்த பெண்ணிடம் இன்னும் சிக்கவில்லை அதனால்தான் நீ ஸ்மார்ட் என்றேன் என்று சொல்லியவாறு அவளின் செல் போன் நம்பரை எனக்கு தந்து முடிந்தால் கால் பண்ணு நாம் மீண்டும் சந்திக்கலாம் என்று சொல்லிச் சென்றாள்.

(நான் என் மனதிற்குள் ஆஹா இந்த அமெரிக்க பெண் இவ்வளவு ஸ்மார்ட்டாக(முட்டாளாக) இருக்கிறாளே என்று மனதிற்குள் சிரித்து கொண்டேன். அதுமட்டுமல்லாமல் மோதிரம் அணியாமல் இருப்பதில் இவ்வளவு நன்மை இருக்கிறதா என்று நினைத்து கொண்டேன்)


அவளுக்கு கால் பண்ண ஆசைதான் ஆனால் நான் அவளுக்கு கால் பண்ணி அது என் மனைவிக்கு தெரிந்துவிட்டால் அதன் பின் எனக்கு நடக்க கால் இருக்காதபடிக்கு செய்துவிடுவாளோ என்று பயமாகத்தான் இருக்கிறது....

கடவுள் ஏன் இப்படி எல்லாம் அழகான பெண்களை என் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இப்படி என் மனதை நோக வைக்கிறார் இதில் என்ன அவருக்கு ஆனந்தமோ?

ஹும்ம்ம்ம்ம்ம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

21 comments :

 1. யோவ் பதினெட்டு பிளஸ் போடுய்யான்னு சொன்னால் என்ன செய்வீரோ நான் ஓடிருதேன் முதல்லேயே...

  ReplyDelete
  Replies
  1. 18 க்கு கிழே உள்ளதும் 40 க்கும் மேலே உள்ளதும் நெட்டுக்கு வருவது இதை படிக்க அல்ல இதைவிட கண்றாவியை பார்க்கதான்... மார்பு என்ற வார்த்தையை 18 + க்கு மேல் உள்ளவர்கள்தான் படிக்க வேண்டுமா என்ன?

   Delete
 2. அவளுக்கு நீங்க கால் பண்ணி இருந்தால் உங்க மனைவி கை வேலையைக் காட்டி இருப்பாங்க. அது கிடக்கட்டும் ஒரு பக்கம்... பதிவின் கடைசியில நீங்க போட்டிருக்கற படத்துக்கு ராஜி கிட்டருந்தும் உஷா கிட்டருந்தும் பூரிக்கட்டை பறந்து வரப் போவது நிச்சயம். முதல்ல ஒரு ஹெல்மெட்டைப் போட்டுக்கோங்க தப்பிக்க...!

  ReplyDelete
  Replies
  1. அப்படி அடிக்க வந்தா பாலகணேஷை அடிப்பது என்னை அடிப்பதும் ஒன்றுதான் அதனால் கஷ்டப்படாம கிட்டேயுள்ள அவரையே அடிங்க என்று சொல்லிவிடுகிறேன்...ஹீ.ஹீ

   Delete
  2. இப்படி அழகான பெண்களை பார்த்து அவங்களும் பொறாமை கொள்வது நியாம்தான் ஹீ.ஹீ

   Delete
  3. ஆமா! பொறாமைதான். மார்பு என்ற வார்த்தை 18+ இல்லன்றதை நான் ஒப்புக்குறேன். ஆனா, இந்த படங்கள்!?

   Delete
  4. இந்தப் பக்கம் உங்க சைட்டுங்க மட்டும் வந்தா இந்தப் படங்கள்லாம் ஓக்கே. ஆனா, அருணா, உஷா, ரூபிகா அக்கா மாதிரியான சகோதரிகளும் வர்றோம்ன்றதை இனி கவனத்தில் கொள்ளவும். இல்லாட்டி, மகளிரணி இந்தப் பக்கம் வராம இருந்துடுவோம்.

   Delete
  5. கமெண்ட் போடுற மும்முரத்துல ஒருத்தருக்கு கால் பண்ண மறந்துட்டேன். இருங்க போன் போட்டுட்டு வரேன்.

   ஹலோ!
   மிசஸ் மதுரை தமிழன்!!
   உங்க ஊட்டுக்காரர் சைட்டடிச்சதுமில்லாம, அதை பெருமையா சொல்லிக்கிட்டு சகோதரிகள் நாங்கலாம் வரும் இடத்தில் கன்றாவியான படங்களைலாம் போட்டிருக்கார். அவரை பூரிக்கட்டையாலயே என்னன்னு கேளுங்க.

   Delete
 3. ஏங்க. இதையெல்லால் எளுதி ஆம்பளங்க வாய்ல விளணுமா.

  துணிவு மிக்கவங்க இதப் படிச்சுட்டு தமிள்னாட்ல ஆம்பளங்களுக்கும் பொம்பளங்களுக்கும் தனி லிப்ட் அப்டீன்னு ஆரம்பிச்சா கொஞ்சமா இருந்த சென்ட் வாட கூட போய்ருமே.

  கோபாலன்

  ReplyDelete
 4. ஆனாலும் உங்களுக்கு ரொம்ப துணிச்சல் தான். இந்த பதிவை உங்கள் மனைவி படிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையா???

  ReplyDelete
 5. வெள்ளைக்காரனை பொருத்தவரைக்கும் ஆணும் சரி,பொண்ணும் சரி கல்யாணம் ஆயிட்டா, மோதிரம் போட்டுப்பாங்க. நாம தான் கல்யாணம் ஆனாலும் சரி,ஆகாட்டியும் சரி,மோதிரம் மாதிரி எல்லாம் ஒண்ணும் போட்டுக்க மாட்டோம். அதனால நம்க்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு கண்டுப்பிடிக்கவே முடியாது.

  ReplyDelete
  Replies
  1. அதான் இப்படி தறிக்கெட்டு திரியுறீங்க பூரிக்கட்டை அடிவாங்கியும்!!

   Delete
  2. நீங்கள் ஆஃபீஸ் ட்ராமால வர்ற ராஜீ மாதிரியே பேசுறீங்க....

   Delete
 6. எத்தனை பூரிக்கட்டை அடி விழப்போகுதோ? கடவுளே மதுரைத் தமிழனை காப்பாத்து!

  ReplyDelete
 7. ஏன் மதுரை தமிழன்... எதுக்கு இப்படி எல்லாம்....

  பூரிக்கட்டை உபயோகம் அதிகமாகப் போகுது போங்க!

  ReplyDelete
 8. Seems like someone hacked Madurai Tamilan's blog and posting posts like this! Well, only such an "excuse" can save him! :-)

  Hi Hacker! The cyber-crime police are on their way!

  ReplyDelete
 9. இதுக்கு பூரிக் கட்டை இல்ல . அம்மிக் கல்லே காத்திருக்கு.. பீ கேர்புஃல்

  ReplyDelete
 10. மின்னல் வரிகள் வலையில் என்னை பாராட்டு மழையில் நனைத்து விட்டீர்கள். மதுரைத் தமிழனுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 11. மதுரை தமிழா உங்களது வெள்ளந்தித்தனம் எனக்குப் பிடிச்சிருக்கு. பூரிக்கட்டைக்கெல்லாம் பயப்படாதீங்க,...........நாமெல்லாம் எவ்வளவு வாங்கியிருக்கோம்.............கலக்கு தல..........

  ReplyDelete
 12. Adikkira Kai anaikkum, don't worry'

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog