Tuesday, November 15, 2011


தமிழக 'குடி'மக்களை மேம்படுத்த ஜெயலலிதாவின் புதிய திட்டம்



ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின் எந்த திட்டங்களை தொடங்கினாலும் மக்களின் எதிர்ப்போடு இறுதியில் அது கோர்ட்டில்தான் சென்று நிற்கிறது. அதனால் அவராலும் அவரது அரசியல் ஆலோசகர்களாலும் மற்றும் அவரது அமைச்சரவை குழுக்களோடும் சேர்ந்து ஆலோசித்து இந்த புதிய திட்டம் தொடங்கப்பட்டடுள்ளது.



அந்த புதிய திட்டம் தமிழக 'குடி'மகன்களுக்கு  சந்தோஷம் தரும் ஒரு இனிய செய்தி ஆகும். இதன்படி  தமிழகம் முழுவதும் "எலைட் ஷாப் என்ற பெயரில் 200 கடைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.இந்த கடைகளில் வெளிநாட்டு மதுபானங்கள், இந்தியாவின் உயர்தர மதுபானங்கள் மட்டும் விற்கப்படும். இந்த கடையின் அருகில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பார் அமைக்கப்படும். இந்த பார்கள் நடத்துவதற்கான உரிமம் தனியாருக்கு வழங்கபடும். ஆனால் இந்த எலைட் ஷாப்பை தமிழக அரசே நடத்தும். இங்கு விற்கப்படும் பாட்டில்களின் விலை ரூ.2000 க்கும் மேல் இருக்கும் என்று தெரிகிறது.



இந்த திட்டதிற்கு நிச்சயம் தமிழக மக்களிடம் இருந்து எந்த வித எதிர்ப்பும் வாராது அதற்கு பதில் அமோக வரவேற்பு இருக்கும் என நம்புகிறேன்.



இந்த செய்தியை  நான் தமிழகத்தின் முக்கிய தமிழ் நாளிதழில் படித்தேன். அவர்கள் குடிமகன்களுக்கு இனிப்பான செய்தி என்ற தலைப்பில் தந்து இருந்தார்கள்.



இதை கலைஞர் பார்க்க தவறிவிட்டார். இதை அவர் பார்த்து இருந்தால் இப்படி எழுதி இருப்பார்.

உடன் பிறப்பே நாம் கொண்டு வந்த, நடத்தி வந்த  எல்லா திட்டங்களையும் அழிக்க இந்த அல்லி ராணி சபதம் எடுத்துள்ளார் என்றே தெரிகிறது. நாம் கொண்டு வந்த சமச்சீர் கல்வியாகட்டும் அல்லது நாம் கட்டிய நூலகம் ஆகட்டும் அதை அழிக்க முயற்சி எடுத்து மக்களிடம் எதிபர்ப்பை சம்பாதித்து கொண்ட இவர். இப்போது டாஸ்மார்க் கடைகளிலும் புதிய மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்கிறார். இந்த உயர்சாதிக்காரகள் கோயில்களில் மட்டும் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கியது மட்டுமல்லாமல் இந்த டாஸ்மார்க் கடைகளிலும் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்க திட்டமிட்டுள்ளார்கள் என்பதை இந்த செய்தியை படித்த விபரம் உள்ள எந்த தமிழனும் புரிந்து கொள்வான். நமது அரசு டாஸமார்க் கடைகளில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் எல்லோரையும் சமத்துவமாக நடத்தி வந்தது என்பதை இங்கே நினைவு கூற்கிறேன். இந்த திட்டம் தமிழக'குடி'மக்களிடம் வேற்றுமையை விளைவிக்கும் என்பதால் நான் இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.



இந்த செய்தி தினமலரில் வந்தாத என்று தெரியவில்லை, ஒரு வேளை வந்து இருந்தால் அவர்கள் இப்படிதான் செய்தி வெளிட்டு இருப்பாரகள்.



தமிழக குடிமக்களை மேம்படுத்த ஜெயலலிதாவின் புதிய திட்டம் அல்லது தமிழகத்தை அமெரிக்கவாக ஆக்க தமிழக முதல்வர் முயற்சி என்று வெளியிட்டு இருப்பாரகள்.



எனக்கு ஓன்று மட்டும் புரிந்தது தமிழகத்தில் எதிர்காலத்தில் நல்ல 'குடி' தண்ணிருக்கு பஞ்சம் ஏதும் இருக்காது. அது மட்டுமல்ல எதிர்காலத்தில் நான் இந்தியாவிற்கு வரும் போது பாட்டில்களை நண்பர்களுக்காக தூக்கி வரும் வேலை மிச்சம் அதானால் இந்த திட்டத்தை கொண்டு வந்த தமிழக முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

1 comments:

  1. இனி எதிர்காலத்தில் “குடி” தண்ணிக்கு பஞ்சமே இருக்காது.கலைஞர் சொல்வது
    மாதிரி அங்கேயும் வாங்கி குடிப்பதில் பொருளாதர ஏற்றத்தாழ்வுகள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.