Tuesday, November 8, 2011


பெண்கள் அவசியம் தெரிந்து இருக்க வேண்டிய 'அந்த ரகசியங்கள்'( பெண்களுக்கான தரமான பதிவு)



பெண் இல்லாத குடும்பம் விளக்கு இல்லாத வீடு போன்றதாகும்.   அத்தகைய  பெண்கள் கடைபிடித்து வந்த ரகசியங்கள் இந்த கால இளநங்கைகளுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. காரணம் அந்த கால பெண்கள் பெரியோர்களிடம் ஏன் என்ற கேள்விகளை கேட்காமல் எல்லாவற்றையும் கடைபிடித்தனர் பெரியவர்கள் சொன்னால் எல்லாம் நலலதுக்காகத்தான் இருக்கும் என்று கருதி கடைபிடித்து வந்தனர். ஆனால் இந்த கால இளநங்கைகள் ஏன் எதற்கு எப்படி என்று கேட்டு அதற்கான காரணத்தை தெரிந்த பின்னர்தான் கடைபிடிப்பதா இல்லையா என்று முடிவு செய்வார்கள். அதனால் நம்ம முன்னோர்கள் கடை பிடித்த ரகசியங்களை இப்போது உங்களுக்காக இங்கே தருகிறேன்.

டேய் போதுமடா உன் பில்டப்பு நேரா விஷயத்துக்கு வாங்கன்னு பொண்ணுக கத்துறது காதில் விழுவதால் விஷயத்துக்கு நேரா வருகிறேன்.

நான் சொல்லப் போகும் ரகசியம் நாம் இந்திய உணவில் உள்ள ரகசியம் நீங்க வேற எந்த மாதிரியான விஷயத்தை எதிர்பார்த்து வந்திருந்தீங்கனா அப்படியே ஒரு U டெர்ன் போட்டு சமத்தா வெளிய போய்டுங்க

உடல் பருமன் குறைய( foods that can help you lose weight and gain health )இந்த உணவு பழக்க வழக்கங்கள் மிக உதவியாக இருக்கிறது என்பது யாராலிம் மறுக்க முடியாத உண்மை'



மஞ்சள் ( Turmeric ) : ம் உணவில் ரெகுலராக மஞ்சளை சேர்த்து வந்தால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புபை (low-density lipoprotein -LDL)குறைப்பதோடு ஹை பிளட் பிரெஷரையும் குறைக்க உதவுகிறது. இது நம் உடலில் ரத்த ஒட்டத்தை அதிகபடுத்தி இரத்தம் அடைபடுவதை தடுத்து மாரடைப்பு ஏற்படுவதில் இருந்து நம்மை காக்கிறது.





ஏலக்காய்(Cardamom) :  இது நம் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடம்பில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. உணவு செரிமானத்திற்கு மிக முக்கியமாக பொருளாக ஏலக்காய் இருக்கிறது. (  Cardamom is a thermogenic food )



ிளகாய் (Chillies) : ிளகாய் ( உரப்பு )  லந்த உணவு கொழுப்பை எரிக்க உதவுகிறது. மிளகாயில் உள்ள  capsaicin  ெட்டபாலிசத்தை அதிகரிக்க மிக உதவுகிறது. மிளகாய் சாப்பிட்ட இருபது நிமிடங்களில் உடம்பில் உள்ள கலோரிகள் எரிக்கப்படுகின்றன. (Capsaicin is a thermogenic food )



கருவேப்பிலை Curry leaves : உடல் பருமன் குறைய தினசரி உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இது உடலில் தங்கி உள்ள  எல்லா கொழுப்பையும் நச்சு தனமையையும் வெளியேத்துகீறது. ெட்ட கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. அதிக பருமன் உள்ளவர்கள் தினசரி 10 இலைகளை சாப்பிட்டு வர பலன் வெகு விரைவில் தெரியும்

பூண்டு Garlic :  பூணடுவில் உள்ள  sulphur compound allicin  உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதய நோயாளிகள் தினசரி பச்சை பூண்டை சாப்பிடுவது மிகவும் நல்லது.



கடுகு Mustard oil :   மற்ற எண்னணெய்யை விட இந்த எண்ணெய்யில்  low saturated fat  ள்ளது  இதில்   fatty acid, oleic acid, erucic acid and linoleic acid ள் உள்ளது. இந்த ஆயில் கொழுப்பை குறைக்க உதவுகிறது.

ுட்டைகோஸ் Cabbage :  இதை பச்சையாக உண்பதோ அல்லது சமைத்து உண்பததோ மிகவும் உடலுக்கு நல்லது. உடல் பருமனை குறைக்க மிக மதிப்பு காய் ஆகும்

பாசிபருப்பு Moong dal :  இதில் வைட்டமின்  A, B, C and E & அநேக மினரல்களும் உள்ளன (கால்சியம், அயர்ன், பொட்டாசியம்) இதில் மிக குறைந்த அளவு மட்டும் கொழுப்பு இருப்பாதால் அநேக சிலிம் புரோகரமில் இது மாற்று உணவாக பயன்படுத்தப்படுகிறது. இதில் அதிக அளவு புரோட்டின் உள்ளது

ேன் Honey : இது ஒபிசிட்டிக்கு இது கண் கண்ட மருத்தாகும் கொழுப்பைகுறைப்பது மட்டுமல்லாமல் உடலுக்கு வேண்டிய சக்தியை கொடுக்கிறது.  அதிகாலையில் ஒரு டேபிள் ஸ்பூன் தேனனை சுடு தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் பலன் தெரியுன்



ோர் Buttermilk :  இதில் கொழுப்பு மிக குறைவு என்பதில் மட்டுமல்லாமல் உடல் பருமனை குறைக்க உதவுகிறது.

ட்டை & கிராம்பு .Cinnamon and cloves:  இது இன்சுலினை கட்டுப்டுத்த உதவுகிறது  ொலஸ்ராலை ழ்றாலை கட்டுபடுத்த உதவுவது மட்டமல்லாமல்   type 2 diabetes , ொலஸ்டராலை குறைக்க உதவுகிறது.





ன்ன ரகசியத்தை சொல்லியாச்சுல இன்னும் என்ன கம்பியூட்டர் முன்னால உட்கார்ந்துகிட்டு ...போய் இதை எல்லாம் சாப்பிட்டு உடம்பை குறைச்சு வாங்க அதுக்குல்ல நம் ரஜினி சார் உடம்பு நல்ல ஆகிடும் அதுகப்புறம் நீங்கதான் அவர்கூட நடிக்க போகும் அடுத்த ஹிரோயின்



எதோ நான் படித்த நல்ல விஷயத்தை உங்ககிட்ட பகிர்ந்துட்டேன். பயன் உள்ள ரகசியமா இல்லையா என்பதை நீங்கதான் அனுபவித்து சொல்லனும் ஒகே வா??


5 comments:

  1. அழகான மருத்துவ குறிப்புகள் சூப்பர்ய்யா....!!!

    ReplyDelete
  2. 'அந்த ரகசியங்கள்' நல்லாத்தான் இருக்கு...

    ReplyDelete
  3. அருமையான பதிவு.. நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

    ReplyDelete
  4. அருமையான பதிவு.. நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

    ReplyDelete
  5. தரமானத் தகவல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.