Sunday, August 27, 2023

நிலவிற்கு ராக்கெட் விடுவதற்கான செலவைவிடப் பாரதப் பிரதமருக்கு விமானம் வாங்கியதுதான் மிக மிக அதிக செலவு

 

avargal unmaigal


நிலவிற்கு ராக்கெட் விடும் போதெல்லாம் இவ்வளவு செலவழித்து அனுப்புவதற்குப் பதிலாக அந்த பணத்தைக் கொண்டு இந்திய மக்களின்  நலத்திற்காக  செலவிடலாமே என்று கேள்விகள் எப்போதும் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. நிலவிற்கு ஆராய்ச்சிக்காக நாம் ராக்கெட்ட அனுப்புவது மிக அவசியம் அது எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகவும் கை கொடுக்கும்  அதனால் அதற்காக நாம் செலவிடுவதைக் கைவிட முடியாது... ஆனால் நிலவஈர்கு ராக்கெட்விடும் செலவை விட நம் பிரதமர் செல்ல விமானம் வாங்கிய செலவோ மிக அதிகம்  . இந்த செலவை மிகவும் குறைத்து இருப்பதோ தேவையில்லாமல் வெளிநாடுகளுக்குப் பிரதமர் செல்வதையும் குறைத்திருந்தாலே இந்திய மக்கள் நலத்திற்கு பெரும் அளவில் செலவழித்து நலம் பெற்று இருக்கலாம்


இங்கே ராக்கெட்டுக்களுக்கான செலவுகளும் பிரதமர்க்காக வாங்கி 2 விமானங்களின் செலவுகளும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.. அதோடு அவர் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததில் இருந்து இந்த ஆண்டு வரை வெளிநாட்டுப் பயணத்திற்கு ஆன செலவுகளையும் உங்கள் பார்வைக்குத் தருகிறேன் அதைப் பார்த்து நீங்கள் ஒரு முடிவிற்கு வாருங்கள்


சந்திரயான்-1 பட்ஜெட்

2008 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் நிலவு பயணமான சந்திரயான்-1 ஐ ISRO அறிமுகப்படுத்தியது, இதற்காக விண்வெளி நிறுவனம் வெறும் 380 கோடி ரூபாய் (ஜம்போ ஜெட் விலையில் பாதி) செலவிட்டது. சுமார் 1,000 விஞ்ஞானிகள் மூன்று ஆண்டுகளாக அதில் பணிபுரிந்தனர்.

சந்திரயான்-2 பட்ஜெட்

ஜூலை 2019 இல் தொடங்கப்பட்ட கடைசி நிலவுப் பயணம், நிலப்பரப்பு, நில அதிர்வு, கனிம அடையாளம் மற்றும் விநியோகம், மேற்பரப்பு இரசாயன கலவை, மேல் மண்ணின் வெப்ப-இயற்பியல் பண்புகள் மற்றும் மெல்லிய நிலவின் வளிமண்டலத்தின் கலவை ஆகியவற்றின் விரிவான ஆய்வு மூலம் சந்திர விஞ்ஞான அறிவை விரிவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்திரனின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி பற்றிய புதிய புரிதல் சந்திரயான்-2 திட்டத்திற்காக, நாட்டின் விண்வெளி நிறுவனம் 978 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. ஜிஎஸ்எல்வி-எம்கேஐஐ ராக்கெட்டை உருவாக்க மொத்தம் ரூ.978 கோடியில் ரூ.375 கோடி செலவிடப்பட்டதாக TOI அறிக்கை தெரிவிக்கிறது.

சந்திரயான்-3 பட்ஜெட்

புதன் கிழமையன்று தொடுகைக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த சந்திரப் பயணத்திற்கு, 250 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டது. இது ஏவுகணைக்கான விலையை விலக்குகிறது. இஸ்ரோ தலைவர் கே.சிவன் 2020 இல் செய்தியாளர்களிடம் கூறுகையில், லேண்டர், ரோவர் மற்றும் ப்ரொபல்ஷன் மாட்யூலுக்கு ரூ.250 கோடி செலவாகும், ஏவுகணை சேவைக்கு மேலும் ரூ.365 கோடி செலவாகும்.
மொத்தமாக 615 கோடி ரூபாய் செலவாகும் என்று அவர் கூறினார்.




*செலவுகள்*

சந்திரயான் 1 : 380 கோடி
சந்திரயான் 2: 978 கோடி
சந்திரயான் 3: 615 கோடி
பிரதமரின் இரண்டு விமானங்கள்: 8,458 கோடி * (இது விமானம் வாங்குவதற்கான ஆன செலவு மட்டும்தானே ஒழியப் பிரதமர்  இதுவரை வெளிநாட்டுக்குச் சென்று வந்த செலவு அல்ல அதைச் சொன்னால் இந்தியர்கள் யாருக்கும் தூக்கமே வராது )

பிரதமரை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு  வாங்கிய விமானத்திற்குச் செலவழித்த பணத்தை விட,நிலவுக்கு ராக்கெட்டுகளை  அனுப்புவதற்கு இந்திய அரசு செலவழித்த தொகை குறைவு.



மோடி வெளிநாடுகளுக்குச் சென்ற செலவு :இதுகுறித்து அப்போதைய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் ஜூலை 19, 2018 அன்று ராஜ்யசபாவில் அளித்தார், ஜூன் 15, 2014 முதல் ஜூன் 10, 2018 வரை மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக ரூ.1,484 கோடி செலவிடப்பட்டது.

கடந்த (2019 மற்றும் ஜூன் 2023, ) ஐந்தாண்டுகளின் செலவுகள் 200 கோடி ரூபாய்க்கு மேல் - 254 கோடி ரூபாய்.



இவர் வெளிநாடு சென்றதால் பயனடைந்தவர் அதானி மட்டுமே இந்தியாவின் பணக்காரராக இருந்த அவர் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக வந்துள்ளார்.. ஆனால் இந்திய மக்கள் என்ன நிலையிலிருந்தீர்கள் என்பதைக் கொஞ்சம் யோசித்து பாருங்கள்.


மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் இருந்த விலைவாசி என்ன இப்போது என்ன  அப்போது உங்களிடம் இருந்த சேமிப்பு என்ன இப்ப என்ன என்பதை ஒப்பிட்டு மட்டும் பாருங்கள்

இந்தப் பதிவு சங்கிகளுக்கானது அல்ல அவர்களின் வருமான குறைந்து இருக்காது காரணம் அவர்கள் மோடிக்குத் துதிபாடியே தங்களது சேமிப்பு கணக்குகளை வளர்த்துக் கொண்டனர்.


அட வெட்கம் கெட்ட மக்களே  


என்னதான் நாம் திராவிட ஆட்சி என்று கேலிகள் செய்தாலும் 



அன்புடன்
மதுரைத்தமிழன்

 

Published on
8/27/23 10:04 PM
27 Aug 2023

2 comments:

  1. விரைவில் அனைத்தும் மாறும்...

    ReplyDelete
  2. சங்கியாக இருந்து தாங்களும் பணம் சம்பாதிக்க முடியலைன்னு எதுக்கு இந்த பொறாமை

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.