Friday, April 2, 2021

 

#avargal unmaigal

தமிழகத்தின் அடுத்த முதல்வராக வர யாருக்கு  வாக்களிக்கலாம் ?


தமிழகத்தின் அடுத்த முதல்வர் போட்டியில் முன்னணியில் இருப்பவர்கள் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி மட்டுதான் .மற்ற எல்லாரும் உப்புக்குச் சப்பாணி மாதிரிதான், இன்னும் சொல்லப் போன திரைப்படங்களில் கெளர வேஷத்தில் வந்து போகிறவர்கள் மாதிரிதான்..


இவர்களில் யாரை நான் சுட்டிக்காட்டினாலும் இரண்டு கட்சிகார்களில் ஒருவர் என் கணிப்புத் தப்புத்தான் என்று சொல்லுவார்கள் இவர்கள் தவிரப் பொது மக்கள் என்னப்பா இவர்களை விட்டால் நல்லவர்கள் வேறு யாருமில்லையா என்றும் கேள்வி கேட்கலாம்

நல்லவர்கள் இருக்கிறார்கள்தான் ஆனால் அவரைச் சுட்டிக் காட்டினால் அவர் நல்லவராகப் பொதுமக்களுக்குத் தெரிந்தாலும் புரிந்தாலும் அவரை ஜெயிக்க வைத்து முதல்வராக்கி காமராஜர் தந்த ஆட்சியைப் போல மீண்டும் மலரச் செய்வார்களா என்றால் செய்யவே மாட்டார்கள். காரணம் அந்த அளவிற்குத் தமிழக மக்கள் புத்திசாலிகள் இல்லை..
 
எனக்கு ஸ்டாலினோ எடப்பாடியோ முதல்வராவதற்கு விருப்பம் இல்லைதான். ஆனால் அதற்குப் பதில் நல்லக்கண்ணு அவர்கள்தான் முதல்வராக வர வேண்டும் என நினைக்கிறேன்.. அப்படி நினைப்பதால் என்னை இந்தத் தமிழுலகம் ஒரு முட்டாளாகத்தான் பார்க்கும்.

அதனால் அதைத் தவிர்ப்பதற்காக ஸ்டாலினையோ அல்லது எடப்பாடியையோ சுட்டிக் காட்ட வேண்டும்.. அப்படிக் காட்ட வேண்டும் என்றால் இவர்கள் இருவரில் ஸ்டாலின்தான் எனது முதல் மற்றும் கடைசிச் சான்ஸ்.

நம்ம யோகி வாராரு... தமிழ் சமுக இணைய தளங்களை கலக்குறாறு....


ஏன் எடப்பாடியைச் சுட்டிக்காட்டவில்லை என்றால் அவர் முதல்வராக ஆவதற்கு முன்பு என்ன நிலையிலிருந்தார் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் .அவரை ஒரு தலைவராக அவரது கட்சியில் உள்ளவர்களே நினைத்துக் கூடப் பார்த்து இருக்கமாட்டார்கள், அவர் முதல்வராக வந்தது என்பது கள்ளக் காதலர்களுக்கு இடையே நடந்து உறவால் அதுவும் விபத்தால் பிறந்த குழந்தை போலத்தான் அவருக்கு அந்த முதல்வர் பதவி கிடைத்தது.( இந்த பதிவு எழுதியது 2 வாரங்களுக்கு முன்பு ஆர். ராசவும் சில நாட்களுக்கு முன்பு இதைத்தான் சொல்லி இருக்கிறார் என்பது கண்டு எனக்கு ஆச்சிரியம் ஆர். ராசா & நான் மட்டுமல்ல அநேகமாக பலருக்கும் இந்த கருத்துதான் இருக்கிறது )

இப்படித் தகாத உறவுக்குப் பிறந்த குழந்தை என்ன செய்யும் ?அதை  ஒன்றும் அறியாத பிள்ளைதானே என்று சப்பைக்கட்டலாம் ஒரு வாதத்திற்கு அது ஒன்றுமறியாத பிள்ளை என்றாலும் அதைக் கடந்த 4 நான்கு ஆண்டுகளில் செய்ததைப் பார்க்கும் போது அது செய்யும் தவறுகள் அநேகம். கள்ளக் காதலில் பிறந்த குழந்தை என்றாலும், அது ஒழுக்கத்தோடு இருந்தால் அதன் பிறப்பைப் பற்றி யாரும் பேசவே மாட்டார்கள் ,ஆனால் அது ஒழுக்கம் கெட்டுப் பிறழ்ந்தால் நிச்சயம் அதைப் பற்றி மோசமாகத்தான் பேசுவார்கள் அது போலத்தான் இந்த எடப்பாடி அவரின் ஆட்சியும்.

சசிகலாவின் காலில் விழுந்து காலைப்பிடித்து, அதன் பின் காலை வாரிவிட்டு ஆட்சியில் அமர்வது கூடத் தப்பு இல்லை. நல்லாட்சி செய்ய இப்படி வந்து அமர்வதும் சரிதான், ஆனால் அப்படி வந்த அமர்ந்த அவர் தமிழர்களுக்கு நலன் தரும் ஆட்சி தந்தாரா என்று மனசாட்சி உள்ளவர்கள் தங்களைக் கேட்டுப் பார்க்கலாம்.. அம்மா ஆட்சி திட்டத்தின்படி தான் செயல்படுகிறோம் என்று சொல்லி இவர் அம்மா தமிழர் நலனுக்கு எதிராக இருக்கும் திட்டங்கள் என பல திட்டங்களை எதிர்த்து கையெழுத்துப் போட மறுத்து வந்த மத்திய அரசுத் திட்டங்களுக்கு, மறுப்பு ஏதும் சொல்லாமல் சைலண்டாகக் கையெழுத்துப் போட்டு தமிழர்களின் நலனுக்கு மட்டுமல்ல ,அம்மாவின் திட்டங்களுக்கும் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்தானே


காவியைக் கண்டு பயமில்லை ஆனால் நிம்மதி போய்விடுமோ என்றுதான் தோன்றுகிறது.. கோவையின் இன்றைய நிலை பற்றி ஒரு கோவை பெண்மணியின் கருத்துக்கள் 



இதெல்லாம் எதற்குத் தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தின் போது அவர் கூறியது என்ன? அப்படி ஒரு நிகழ்வு நடந்தது என்பதை தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். அதுமட்டுமல்ல அதற்கு அதிகாரம் கொடுத்தது யார் என்பதும் தெரியவில்லை என்று கூறியவர்தானே அப்படிப்பட்டவரை மீண்டும் எந்த விதத்தில் ஆட்சியில் அமர்த்துவது சரியாக இருக்கும்.. அதுமட்டுமல்ல

டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடியவர்களைத் தாக்கிய காவல் அதிகாரிக்குப் பதவி உயர்வு தந்தது யார்?

கதறக் கதற எட்டுவழிச் சாலைக்கு நிலங்களைக் கையகப்படுத்தியது மட்டுமல்ல மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதை நிறைவேற்றத் துடிப்பது யார்?


மீத்தேனுக்குப் போராடுனவங்களைத் துரத்தித் துரத்தி வேட்டையாடினது யார்?

தமிழக அரசு வேலைகளைத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத வெளிமாநிலத்தவர் மட்டுமல்லாமல் வெளிநாட்டவரும் எழுத அரசாணை போட்டு அமல்படுத்தியது யார்?


தேசிய கல்விக் கொள்கை பரிசீலனையில் இருக்கும் போதே விசுவாசத்தைக் காட்ட 5 & 8ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுனு அறிவித்தது யார்.

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து மத்திய அரசுக்குத் தாரைவார்க்கும் சூரப்பாவிற்கு ஆதரவு தருவது யார்?


பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளை மூடி மறைத்துக் கட்சி காரங்களைக் காப்பாற்றினது யார்? பொள்ளாச்சி விஷயம் மிக சிறிய விஷயம் என்று சொல்வது யார்?


சாத்தான்குளம் படுகொலையில் அவர்கள் கடைய மூடாமல் தகராறு பண்ணினார்கள் என்று தவறான தகவல் சொல்லி நியாயப்படுத்தினது யார்?


ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலிருந்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தித் தடைசெய்த இயக்க தலைவர்கள் படத்தை வச்சிருந்தாங்கனு பேசினது யார்?


வேளாண்மை சட்டங்களை நியாயப்படுத்தி நான் விவசாயியென்று பேசி கடைசியில் வேட்புமனுவில் கையளவு நிலம் கூட இல்லனு சொன்னது யார்?


சாகர் மாலா திட்டத்திற்கு, நியூட்ரினோவுக்கு, அணு உலைகளுக்கு, கிழக்கு கடற்கரைச் சாலை உரிமைகளுக்கு மத்திய அரசுக்கு மொத்தமா வாரித் தந்தது யார்?


எல்லாத்தூக்கும் மேல இதுவரை ஜெ. மரணம் குறித்துத் தப்பித் தவறியும் பேசாமல் இருப்பது யார்?


அதனால் இவரை ஒதுக்குவதே தமிழக மக்களுக்கு நலம் அப்படி இல்லையென்றால் இவரை ஆதரிப்பது தவறான ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பது என்பதுமட்டுமல்லாமல் பாஜகவை ஆதரிப்பது போலத்தான். அதில் எந்த வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இல்லை இல்லை எங்களுக்குப் பாஜக ஆட்சி செய்யும் முறைதான் பிடிக்கிறது என்றால் தாராளமாக எடப்பாடியை ஜெயிக்க வைத்து அழகு பாருங்கள்.


பாஜக எம்.எல்.ஏவிற்கு அவர் தொகுதியில் கிடைத்த சக்தி வாய்ந்த வரவேற்பை பாருங்கள்


இப்போது ஸ்டாலினை ஏன் முதல்வர் ஆக்கலாம் என்பதிய பார்ப்போம்

முதலில் இல்லாத ரயில்வே பிளாட்பார கடையில் டீ விற்றவர் பிரதமர் பதவிக்கு வந்து இருக்கும் போது ஸ்டாலின் வரக் கூடாதா? இரத்த கறை படிந்த கைகளை உடையவர்கள் பதவிக்கு வரும் போது ஸ்டாலின் வருவது என்ன தப்பா ?காலில் விழுந்து பதவிக்கு வரும் போது தமிழக முன்னால் முதல்வரின் வாரிசான ஸ்டாலின் வருவதில் என்ன தப்பு?


ஸ்டாலினைப் பற்றி இப்போது சற்று பார்ப்போம்.. அவர் திமுகக் கட்சியில் தன் தந்தையோடு சேர்ந்து பல போராட்டங்களை நடத்தியவர். இளமைக் காலத்தில் தந்தையின் செல்வாக்குக் காரணமாகச் சில தவறுகளைச் செய்து இருக்கலாம்... இப்போது உள்ள தலைவர்கள் செய்யும் தவறுகளைப் பார்க்கும் போது இளம் வயதில் அவர் செய்த தவறுகள் மன்னிக்கக் கூடியவைகள்தான்.

அதுமட்டுமல்ல இப்போது ஒரு பெரிய கட்சியின் தலைவரானது மட்டுமல்ல வயதிலும் முதிர்ந்தவராக இருப்பதால் பொறுப்புகள் தானாகவே வந்து இருக்கும். நாமெல்லாம் இளமையில் தவறுகள் செய்தவர்கள் தானே ஆனால் நமக்கென்று குடும்பம் குழந்தை என்று வரும் போது வயது ஏற ஏற பொறுப்புக்கள் கூடுவதோடு மட்டுமல்ல நாம் நல்ல அனுபவ பாடங்களைக் கற்றுக் கொண்டு மன முதிர்ச்சி கொண்டவர்களாக மாறும் போது ஒரு கட்சிக்கு மற்றும் சமுகத்திற்கு ,ஒரு குடும்பத்திற்குத் தலைவரான ஸ்டாலின் மட்டும் அப்படி மனமுதிர்ச்சி கொண்டவராக மாறி இருக்கமாட்டாரா என்ன?  நிச்சயம் அவர் மாறி இருப்பார்


மோடி அரசாங்கத்தின் கீழ் ஜனநாயகம் சிதறுவதை உறுதிப்படுத்தும் மற்றொரு உலகளாவிய அறிக்கை



அதனால்தான் ஜெயலலிதா இறந்த பின் நடந்த கூத்தின் போது அக் கட்சி உள் விவகாரங்களில் தலையிடாமல்  அமைதிக் காத்து வந்தார். அந்த கூத்து நேரத்தின் போது அவர் மட்டும் நினைத்து இருந்தால் அதிமுக எம்.ஏல்,ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியிலும் அமர்ந்து இருக்கலாம். அப்படி அவர் செய்து  இருந்தால் மக்களிடம் கெட்ட பெயர் சம்பாதித்து இருப்பார்.. ஆட்சியும் சீக்கிரம் கவிழ்ந்து இருக்கும். அப்படி அவர் செய்யாமல் மனமுதிர்ச்சியுடன் பொறுமை காத்து வந்தார் ஏன் பலரும் இவரிடம் கலைஞருக்கு உள்ள சாமர்த்தியம் இவரிடம் இல்லை என்று சொல்லி கேலி செய்த போதிலும் அமைதி காத்து வந்தார். அவரின் அந்த மனமுதிர்ச்சிதான் இப்போது அவருக்கு வெற்றியைத் தேடித் தரப் போகிறது . கலைஞர் வழி தனி வழி என்றால் ஸ்டாலின் வழியும் தனியாகத்தான் இருக்கிறது. அதுமட்டுமல்ல இப்படி மனமுதிர்ச்சியுடன் அமைதிக் காத்ததால் ஒரு தலைவராகப் பார்க்கப்படுகிறார்..

ஆனால் அவரைப் போல மனமுதிர்ச்சி இல்லாத மோடி அமித்ஷா கும்பல் மேலும் கெட்ட பெயர்களைச் சம்பாதித்து கொண்டனர்.. எடப்பாடி பன்னீர் செல்வம் இவர்களுக்கு அடிமையாகி தங்களுக்கென்று கட்சிக்கென்று இருந்த பெயரைக் கெடுத்து இப்ப கண்ணீர் விட்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள், நல்லா இருந்த  தமிழ்நாடு அதைக் கெடுக்கும் மேலும் கெடுக்க நினைக்க நாலு பேருக்கும் உங்கள் வாக்குகள் இல்லை என்று சொல்லி விரட்டி அடிக்க வேண்டும்.


திமுகவிற்கு ஆதரவு தந்து மோடிக்குத் தமிழகத்தில் நேரடியாக இடம் இல்லை என்பதை உணர்த்த ஸ்டாலினை வெற்று பெறச் செய்ய வேண்டும்

மத அரசியல் செய்ய மட்டும் தான் பாஜக வரும்.. அதுதான் வேண்டுமென்றால் அதிமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சியான பாஜகவிற்கும் வாக்களியுங்கள் அப்படி இல்லாமல் மக்களுக்கு ஒரு பிரச்சனையென்றால் திமுக தான் வரும் என்று நம்பினால் திமுகவிற்கு வாக்களியுங்கள்.


உங்கள் வாக்கில் உங்களின் எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வும் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்

தேர்தல் கலாட்டா :   அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்

 
இதற்கு கிழே உள்ள கருத்துகள் பேஸ்புக்கில் பாஜக ஆதரவாலர் ஒருவர் எழுதிய கருத்தில் சில மாற்றங்கள் செய்து என் வழியில் தந்து இருக்கின்றேன்.. உண்மையை சொன்ன அந்த பாஜக ஆதரவாளரை  உண்மை நிலவரம் தெரியாத சங்கிகள் அவரை உபி என்று கேலி செய்து கொண்ருக்கின்றனர்


இந்த முறை அதிமுக பாஜகவின் கூட்டணியின் சரிவு என்பது தேர்தலுக்கு முன்பே தீர்மானிக்க பட்டுவிட்டது என்பது எனது கருத்து.
இந்த கூட்டணி வெற்றி பெற அவர்கள் கடைசி அஸ்திரம் ரஜினிதான் அவரும் கொரோனாவை காரணம் சொல்லி ஒழிந்து கொண்டார். இது இந்த கூட்டணிக்குக் கிடைத்த முதல் தோல்வி அடுத்து   சசிகலாவை உள்ளே இழுத்து தங்கள் கைக்குள் வைத்துக்கொள்ள முயன்றனர். அது நடை பெறாமல் போனது அவர்களுக்கு அடுத்த அடி

மீண்டும் பாஜக அதிக இடங்கள் கேட்டு அது கிடைக்கவில்லை என்ற அதிருப்தி பாஜகவுக்கும் இவர்கள்  இந்த பாடு படுத்துகிறார்களே என்று அதிமுகவிற்கு
ம் இடையே பெரிய மனக்கசப்பு  ஏற்பட்டு விட்டது இது அரசியல் ரீதியில்  களப்பணியாற்றுவார்களுக்குள் ஏற்பட்ட பெரிய பின்னடைவுதான் நாம் ஒத்துக் கொண்டாலும் இல்லையென்றாலும்  அதுதான் கள நிலவரம்.

அதுமட்டுமல்ல கூட்டணி தலைவரை அதுவும் அவர் தேசிய தலைவராக இருந்தால் அவரை ஒரே மேடையில் வைத்துப் பேச அழைப்பார்கள். ஆனால் இங்கோ இன்றைய தேர்தலிலோ கள நிலவரம் தலைகீழாக இருக்கிறது எங்கே மோடியை அழைத்தால் வரும் வோட்டும் வராமல் போய்விடுமோ என்ற பயம் இவர்களுக்குள் வந்து இருக்கிறது. காரணம் அப்படிப்பட்ட நல்லாட்சியை மோடி தந்து கொண்டு இருக்கிறார்

மோடி கொண்டு வந்த திட்டங்கள் ஏதும் தமிழர்களுக்குப் பயன் அளிக்காத திட்டங்களாகவே உள்ளன. அதுமட்டுமல்ல தமிழ் மாநில கல்வி வியங்களில் மூக்கை நுழைத்து அதை மாற்ற முயல்வது சுத்தமாகத் தமிழக மக்களுக்குப் பிடிக்கவில்லை எனலாம்,

அதே போல நீட், ஜிஎஸ்டி  வேளாண் பிரச்சனையில்  பிடிவாதம்  காஸ் விலை , பெட்ரோல்விலை எட்டுவழிச் சாலை சுங்கச்சாவடி போன்ற திட்டங்கள் எல்லாம் பாஜக மற்றும் அதன் கூட்டணிகளுக்குத்  தமிழ் நாட்டில் பலவீனத்தைத் தருபவை  அதே நேரத்தில் இந்த திட்டங்கள் எல்லாம் திமுகவிற்கு மிக நல்ல பலனைத் தருகிறது. இதுதான் கள யாத்ர்த்தம் இதை விடுத்தது சங்கிகளின் கூறுவது போல  அதிமுக - பாஜக கூட்டணி வெல்லும் என்று கூறுவது  பூனைக்  கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்பதைப் போலத்தான் அப்படி நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்பதை நீங்கள் திமுகவிற்கு வாக்களிப்பதன் மூலம் மாற்றலாம் & மாற்ற வேண்டும்
 



அவ்வளவுதான் சொல்வேன்

டிஸ்கி : மோடி யாரையாவது ஏமாற்றினாரா, சொத்து சேர்த்தாரா, லஞ்சம் வாங்கினாரா, வேறு என்ன செய்தார் கெட்டவர் என்று சொல்வதற்கு?

மக்களே PM Care ப்ண்ட் என்னாச்சுன்னு உங்களால் சொல்ல முடியுமா?



அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. சற்று நீண்ட பதிவுதான், ஆனாலும் கருத்தின் முக்கியத்துவம் கருதி தயைகூர்ந்து பொறுமையாக வாசிக்கவும். இந்த தேர்தலில் திமுக வெல்வதற்கே வாய்ப்பு அதிகம் என்று பலரும் கணிக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் நடுநிலை வாக்காளர்கள் கூட திமுக, அதிமுக கூட்டணிகள் தவிர்த்த கட்சிகளுக்கு வாக்களித்தால் அது திமுகவுக்கு எதிராக ஓட்டு பிரிந்து மறைமுகமாக பிஜெபிக்கு ஆதரவாக மாறிவிடும் என்கின்ற பயத்தில் திமுகவுக்கே வாக்களிக்கவேண்டும் என்கின்ற கருத்தை முன்வைக்கிறார்கள். இது சட்டிக்குத்தப்பி அடுப்பில் விழுந்த கதையாகத்தான் அமையும். இந்தத்தேர்தலில் எந்த கட்சி வென்றாலும் குறைந்தது மூன்றரை ஆண்டுகளுக்காவது மத்தியில் ஆட்சிசெய்யும் பாஜகவின் அழுத்தம் அந்த கட்சியின் மீது இருக்கத்தான் செய்யும். இது வடஇந்தியர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்று தெரியாது. இந்துத்துவாவும் இராமர் பக்தியும் அவர்களின் உணர்வுகளை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. எனவே இங்கு திமுக வென்றாலும் அவர்கள் மீது இருக்கும் 2 ஜி போன்ற ஊழல் வழக்குகளின் காரணமாக பிஜேபியின் அழுத்தத்திற்கு அடிபணியத்தான் செய்யும். அவர்களது இயல்பின்படி மறுபடி மறுபடி ஊழல் செயல்களில் சிக்கி வசமாக பிஜேபியிடம் மாட்டிக்கொள்ளத்தான் செய்வார்கள். வேட்பாளர்கள் அனைவரும் தேர்தலுக்காக எவ்வளவு செலவுசெய்வீர்கள் என்கின்ற அடிப்படைக் கேள்விக்கு பதிலளித்து வென்றபிறகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அவர்கள் நோக்கம் முதலீட்டுக்குத்தக்க அறுவடை செய்வதுதான். மக்கள் நலன் அல்ல. நேர்மையற்றவர்கள் ஒருபோதும் வலிமையானவர்களாக இருந்ததாக வரலாறு இல்லை. அவர்கள் ஏற்கனவே பிஜேபியுடன் கூட்டணி வைத்து நல்லகண்ணு போன்ற நல்லவர்களை தோற்கடித்து எச் ராஜா போன்றவர்களை வெல்லச் செய்தவர்கள் தானே!!! எனவே திமுக ஜெயித்தாலும் நிலைமை மாறப்போவது இல்லை. மாறாக பழைய ஊழல் மற்றும் அராஜக ரவுடிகள் ராஜ்ஜியமே நடக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. எனவே திமுக வுக்கு வாக்களிப்பது சரியான முடிவு அல்ல.
    பிற கட்சிகளை தூண்டில் போட்டுப் பிடித்து அடிமையாக்கும் கலையில் பாஜக மிகவும் திறமை வாய்ந்த ஒரு கட்சி. அவர்களது அஸ்திரமே கட்சிகள் செய்யும் ஊழல்கள் மட்டுமே. ஊழல்களில் திமுக டாக்டரேட் வாங்கிய கட்சி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அரிப்பெடுத்த கை ஒருபோதும் சும்மா இராது. ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ளத்தான் செய்வார்கள். ஏற்கனவே பல ஊழல் வழக்குகள் அவர்கள் மீது உண்டு. இவையெல்லாம் பாஜகவுக்கு ஸ்வீட் சாப்பிட்டதுபோல் ஆகும். அவர்கள் தூண்டில் வேலைக்கு களம் நன்றாய் அமையும். எனவே திமுகவை நிராகரிப்பதே பாஜகவுக்கு நாம் ஆற்றும் சரியான எதிர்வினை.
    அப்படியானால் இதற்கு மாற்று என்ன? சீமான் போன்ற களப்போராளிகள் பாஜகவுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள் என்று நிச்சயம் நாம் நம்பலாம். அவர்களுக்கு ஒத்துப்போனால் அவர்களுக்கு அரசியலில் ஒரு தனித்துவமோ அல்லது எதிர்காலமோ இருக்காது. எனவே அவர்கள் பாஜகவுக்கு பிடிகொடுக்காமல் இருக்கவே முனைவார்கள். இது தமிழர் நலனுக்கு ஒரு முக்கியமான தேவை. எனவே பாஜகவின் சதியிலிருந்து நாம் தப்பிக்கவேண்டும் என்றால் நாம் பாரம்பரியமிக்க தமிழர் என்கின்ற இனத்தவர் என்ற ஒற்றைப்புள்ளியில் அனைவரும் இணைந்து நாம் யாருக்கும் அடிமையாக மாட்டோம், யாரையும் அடிமைப்படுத்தவும் மாட்டோம் என்கின்ற உணர்வுடன் பிஜேபியை எதிர்ப்பது ஒன்றே நமது இலக்காக இருக்க வேண்டும். மாறாக திமுக போன்ற அயோக்கியர்களையோ அல்லது கமல் போன்ற கோமாளிகளையோ ஆதரித்து தமிழர் நலனில் கோட்டை விட்டுவிட வேண்டாம். அமமுகவும் அடிமை அதிமுகவும் ஒரே கட்சியின் வெவ்வேறு பரிமாணங்கள்தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பதால் பிஜேபிக்கு ஒரு வலுவான எதிர்ப்பு சக்தியாக அவர்கள் இருப்பார்கள். வட நாட்டினரின் ஆதிக்கத்துக்கு சரியான எதிர்வினை ஆற்றுவார்கள். இன்றைய கால கட்டத்தில் தமிழ்நாட்டுக்குத் தேவை தமிழர் என்ற ஓர் புள்ளியில் நாம் அனைவரும் இணையும் ஒற்றுமையே. இந்த ஒற்றுமை மட்டுமே பிஜேபி போன்ற ஆதிக்க சக்திக்கு எதிராக நம்மை வலுப்படுத்தும். இதனை உறுதி செய்வது நாம் தமிழர் கட்சிக்கு நாம் அளிக்கும் வாக்கு மட்டுமே. பிற கட்சிகளுக்கு நாம் செலுத்தும் வாக்குகள் அனைத்தும் தமிழர் நலனுக்கு எதிரானதாகவே அமையும்.

    ReplyDelete
  2. மீண்டும் மீண்டும் ஏமாற்று திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து தமிழ்நாட்டின் நலனை வடக்கத்தி ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடகு வைக்கும் துரோகத்தை செய்யாமல் புத்தியுடன் நடந்து கொள்வதே இன்றையத் தேவை. அமமுக போன்ற கொள்கையற்ற கட்சிகளுக்கும் கமல் போன்ற கோமாளிகளுக்கும் வாக்களித்து வாக்கை வீணாக்க வேண்டாம். நமக்கு இருக்கும் ஒட்டு ஒன்றுதான் பகையை வீழ்த்தும் நமது ஒரே ஆயுதம். அதை சரியான திசையில் ஒற்றுமையுடன் வலுவாக பயன்படுத்துவதே தமிழர் நலனுக்கு நாம் ஆற்றும் பணி. அதனால் பொறுப்புணர்வுடன் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். தங்களைப் போன்ற அறிவுஜீவிகள் கூட தாங்களும் குழம்பி நடுநிலையாளர்களையும் குழப்பிவிட்டால் தமிழர்களுக்கு விமோச்சனமே கிடையாது என்கின்ற பயம் எனக்கு உண்டு!!!

    ReplyDelete
  3. உங்களது பார்வை மிகவும் சரி, தற்போது முதலில் உயிரை (தமிழ்நாடு) காப்பாற்ற வேண்டும், பிறகு யோசிக்லாம் எந்த டாக்டர் எந்த மருத்துவமனை என்று..

    ReplyDelete
  4. கோவைக்கு குரங்காட்டி வந்த சம்பவம் ஒன்றே போதும்...

    ReplyDelete
  5. செல்வதுரையின் வாதங்களை எளிதில் மறுத்துவிட முடியாதுதான். ஆனால், தேர்தலுக்கு மிகச் சில நாட்களே உள்ள நிலையில், சீமானை முதல்வராக்குவது அத்தனை எளிதான செயலா? அல்லவே.

    சீமான் முதல்வராவது சாத்தியம் இல்லாத நிலையில் தி.மு.க.வையும் புறக்கணித்தால், அ.தி.மு.க. என்னும் அடிமைகள் அல்லவா ஆட்சியைக் கைப்பற்றுவார்கள். இதனால், பா.ஜ.க.வின் தலையீடு மிக மிக அதிகரிக்கும். தமிழர்களின் இன உணர்வு முற்றிலுமாய் மழுங்கடிக்கப்படும். வட இந்திய மொழிகளில் கணிசமானவை இந்தித் திணிப்பால் சிதைந்து அழிந்ததுபோல் தமிழும் அழியும். இது 100% உறுதி.

    ஆக, இப்போதைக்குத் தி.மு.க.வை ஆட்சிக்கட்டிலில் அமரவைப்பதைத் தவிர நமக்கு வேறு வழியே இல்லை.

    முதலில் ஸ்டாலின் நம் முதல்வர் ஆகட்டும். 'நாம் தமிழர்கள்' என்னும் என்றும் மாறாத இனப்பற்றுடன் இணைந்திருப்போம். அமித்ஷா, மோடி வகையறாக்களின் நடவடிக்கைகளை மிக உன்னிப்பாகக் கண்காணிப்போம். அவர்கள் கையாளும் சூழ்ச்சிகளை முறியடிப்போம்.

    இதற்கான வலிமையான ஆயுதம் நம் இன ஒற்றுமையும், எதற்கும் அஞ்சாத மனோதிடமும்தான்.

    ReplyDelete
  6. நெகட்டிவான சிந்தனை வருவது சரியில்லை என்றாலும் ஒருசிலரை தைரியப்படுத்தவாவது இப்படி சிந்திப்போமே!! ஒருவேளை ஓட்டுகள் பிரிந்து அதிமுக ஆட்சி அமைந்துவிட்டாலும் கூட ஒன்றும் கெட்டுப்போய்விடாது. ஏற்கனவே பத்து ஆண்டுகள் நம்மை சிரமப்படுத்தியவர்கள் மேலும் ஐந்து ஆண்டுகள் சிரமப்படுத்திவிட்டுத்தான் போகட்டுமே, என்ன நிரந்தர சீரழிவு ஏற்பட்டுவிடப்போகிறது? வெறும் இருபது இடங்களில் போட்டியிடும் பாஜக ஒரு சில இடங்களில் கூட வெற்றிபெற வாய்ப்பில்லை. எனவே அதிமுக இனியாவது ஓரளவாவது தன்மானத்துடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். 2026 ல் அதையும் சேர்த்து சரிசெய்துகொள்ளலாம். ஆனால் திமுக வெற்றிபெற்றால் காய்ந்து கிடக்கும் அவர்கள் தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்றாமல் விடமாட்டார்கள். கோடிகளில் முதலீடு செய்து மக்கள் நலனுக்காக ஆட்சி செலுத்த அவர்களுக்கு பித்தா பிடித்திருக்கிறது?? ஏற்கனவே பதவி ஏற்ற பத்தாவது நிமிடம் என்ன நடக்கும் என்று ஒரு தலைவர் கோடிட்டுக்காட்டியுள்ளார். தமிழ்நாட்டையே கொள்ளையடித்து தனதாக்கிக் கொள்ளுவார்கள். அவர்களிடமிருந்து நாட்டை மீட்பது மிகவும் சிரமம். எனவே அனைவரும் சரியான சிந்தனையுடன் செயல்படுங்கள். எக்காரணத்தை முன்னிட்டும் திமுக போன்ற ரவுடிக்கட்சிக்கு வாய்ப்பளித்து தமிழ்நாட்டை சிக்கலில் மாட்டிவிடாதீர்கள். புதியவரான சீமானுக்கு ஒரு வாய்ப்பளியுங்கள் என்பதே என் வேண்டுகோள். சீமானால் முதல்வராக வரமுடியாவிட்டாலும் சில எம்எல்ஏக்களையாது சட்டசபையில் இடம்பெற்றாலும் கூட ஒரு பாதுகாப்புதான். திமுகவுக்கும் ஒரு பயம் இருக்கும். அதிமுகவுக்கும் ஒரு பயம் இருக்கும்.

    ReplyDelete
  7. 2016 காலகட்டத்தில் திராவிடக்கட்சிகளுடன் இனி ஓட்டும் இல்லை உறவும் இல்லை என்று தமிழக மக்களிடம் மன்னிப்புக்கேட்ட அன்புமணி ஒரு படித்த தரமான மனிதன் என்று நினைத்தோம். மாற்றம், முன்னேற்றம் என்று அவர் வைத்த திட்டங்களுக்கு ஓரளவு ஆதரவு கொடுத்தோம். ஆனால் இன்று அவரின் பரிதாபத்துக்குரிய நிலைக்குக் காரணம் தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியினால் அவர் வழிமாறியதுதான். சீமானும் வழி தவறினால் அன்புமணிபோல செல்லாக்காசாகிவிடுவார் என்பது நிச்சயம். ஆனால் அன்புமணி போலல்லாது சீமான் தமிழ் தேசீயம் என்கின்ற சித்தாந்தத்தை முன்னிலைப் படுத்தி அரசியல் செய்கிறார். ஏற்கனவே ஏற்பட்ட தோல்விகள் அவரை நிலைகுலையச் செய்யவில்லை. எனவே அவருக்கு நம்பகத்தன்மை அதிகம் உள்ளது. நிச்சயம் அன்புமணி போல தடம் மாறமாட்டார் என்று நம்பலாம். என்ன வந்தாலும் தனித்துத்தான் களம் காணுவேன் என்கின்ற உறுதி அவரை ஏனையோரிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காண்பிக்கிறது. இவ்வளவு பேசும் திமுக தனித்து களம் காண ஏன் துணியவில்லை? திராவிட கட்சிகள் தமிழ்நாட்டைப் படுத்திய பாடு என்னத்தைத்தின்றால் பித்தம் தெளியும் என்கின்ற நிலைக்கு மக்களை தள்ளிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் சீமான் நம்பிக்கையூட்டுகிறார். அவர் வழி மாறினாலும் அன்புமணி போல குப்பைத்தொட்டிக்குதான் போவார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை!! திராவிடக்கட்சிகளுக்கு இன்றில்லாவிட்டாலும் நாளை சாவுமணிதான். புதியதாக வரும் இளைஞர்களை ஊக்குவிக்காமல் தோல்வியடையச் செய்தால் அன்புமணி போல தடம் புரள வாய்ப்புண்டு.

    ReplyDelete
  8. சிறை மீண்ட சசிகலாவை சந்தித்தது கூட தமிழினத்தின் விடுதலை குறித்து விவாதிக்கத்தான் என்று நினைக்கிறேன்!!!!நல்ல வேளையாக சேகுவேரா படம் போட்ட ஆடைகளை அண்ணன் அணிவதில்லை....அவர் ஸ்பானிய மொழியை தாய்மொழியாகக் கொண்டவரல்லவா....அதனால்தான்!!!அமிர்தலிங்கம்,நீலன் திருச்செல்வம்,மாத்தையா எனப்படும் மகேந்திர ராஜா,பத்மநாபா,சிவ சிதம்பரம்,உமா மகேஸ்வரன்,யோகேஸ்வரன் ,சிறி சபாரத்னம் போன்றோரின் தாய்மொழி சிங்களம் என்பதை அண்ணன் விரைவில் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தெரியப்படுத்தவேண்டும்!!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.