அமைதியைத் தேடி.......
தொலைக்காட்சியை ஆன் செய்தால் செய்தி நாளிதழ்களைப் பார்த்தால் சமுக இணையதளங்களில் வலம் வந்தால் இப்போது எங்கும் மரண ஓலங்கள் கேட்கின்றது. மரணச் செய்திகளை அறியும் போது மனம் சஞ்சலம் அடைகின்றது அதே வேளையில் அந்த மரணச் செய்தி நமது உறவுகள் பற்றியதாக இருக்கும் போது மனம் பதறுகிறது. மனம் அமைதியில்லாமல் புயலில் சிக்கிய படகு போலத் தள்ளாடுகிறது..
நம் மனமோ அமைதியைத் தேடுகிறது ஆனால் நாம் தேடும் அமைதி நமக்குக் கிடைப்பதில்லை. காரணம் ஏது அமைதி என்பது பற்றி நமக்குச் சரியான புரிதல் இல்லை என்பதுதான் உண்மை. நாம் எல்லோருமே அமைதி என்றால் சப்தமில்லாத சூழலில் இருப்பது என்றே நினைத்துக் கொள்கிறோம்
ஆனால் அமைதி என்பது சப்தமில்லாத சூழல் அல்ல. சப்தம் இல்லாத சூழலை நிசப்தம் என்று அழைக்கலாமே தவிர அமைதியான சூழல் என்று கருதமுடியாது. மொழியற்ற நிலைமை கூட மவுனம் தானே தவிர அமைதியாகாது. அமைதி என்பது வெளியே அல்ல உள்ளே இருக்கிறது. அமைதி மனம் சார்ந்தது.

இதை நான் இணையத்தில் படித்த ஒரு கதை மூலம் விளக்குகின்றேன்
அமைதி என்ற தலைப்பில் தத்ரூபமான ஓவியமா வரைந்து கொடுப்பவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று ஒரு தொண்டு நிறுவனம் அறிவித்தது
இதையடுத்து உலகில் உள்ள முன்னணி ஓவியர்கள் அமைதியைப் பிரதி பலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து எடுத்துக் கொண்டு அந்த போட்டியில் கலந்து கொண்டனர்
அந்த தொண்டு நிறுவன குழு ஒவ்வொரு ஓவியமா பார்வை இட்டு வந்தார்கள். ஒவ்வொரு ஓவியரும் ஒவ்வொருமாதியாக அமைதியைப் பிரதி பலித்து இருந்தார்கள்
ஒருத்தர் அழகான ஏரியை ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் இருக்கிற மாதிரி வரைந்து இருந்தார். மலையின் பிம்பம் ஏரியில் பிரதி பலித்துப் பார்க்கவே ரம்மியமா இருந்தது.!!
இன்னொருவர் பார்த்த உடனே பறிக்கத் தூண்டும் வகையில் மலர்களைத் தத்ரூபமாக வரைஞ்சிருந்தாரு.
மற்றொருவரோ அமைதியான நதிக்கரையோரத்தை மிக அழகாக வரைந்து இருந்தார்
இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்கள் மனதிற்குத் தோன்றியபடி ஓவியத்தில் பிரதி பலித்திருந்தார்கள்.!
ஆனால் அதில் , ஒரே ஒரு ஓவியத்தில் மட்டும் ஒரு மலை மேலிருந்து ஆக்ரோஷமா கொட்டும் நீர்வீழ்ச்சியுடன் பயங்கர இடியோடு மழை வேற கொட்டுகிற மாதிரியும் அந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஒரு மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளோடு இருக்கிற மாதிரி மிக வண்ணமயமாக ஓவியம் வரையப்பட்டு இருந்தது காணப்பட்டது.!!
அதைப் பார்த்த போட்டிக் குழு அதை வரைந்தவரிடம் இந்த ஓவியம் தத்ரூபமாகப் பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை. கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறதது என்றார்கள்..
அதற்கு அந்த ஓவியர் சப்தமும் பிரச்சனையும் போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல. இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்க விடாமல் பார்த்துக் கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி.!
அப்படிப் பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது என்றார்.
அருமை .. அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம் என்று சொல்லி அந்த ஓவியத்துத்தை முதல் பரிசு பெறும் ஓவியமாகத் தேர்ந்தெடுத்தனர்
ஆம் நண்பர்களே அனைத்து வசதிகளும் அமையப்பெற்று எந்த வித பிரச்சனையும் இல்லாத ஒரு சூழலில் அமைதியைத் தேடி ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் செல்வதோ,இமயமலைக்குச் செல்வதோ, அல்லது கோயில் கோயிலாகத் தேடிச் செல்வது அமைதியல்ல.
அப்படி வாழ்வதும் ஒரு வாழ்க்கையும் அல்ல. பல துன்பங்களுக்கு நடுவே நிச்சயம் ஒருநாள் விடியும் என்று விடா முயற்சியோடு தினசரி உழைச்சிட்டிருக்காங்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி.
தொல்லைகளும் துன்பங்களும் பிரச்சனைகளும் சூழ்ந்து இருக்கும் தருணங்களில் அதைக் கண்டு பதற்றமடையாமல் எதிர் கொள்வதே அமைதி
அமைதியாகச் சிந்தித்துவிட்டு வாருங்கள்” என்றால் ஓசையில்லாத ஓர் இடத்தில் உட்கார்ந்து யோசிப்பதல்ல. “புறச்சூழல்களால் பாதிக்கப்படாதிருப்பது தான் உண்மையான அமைதி” என்பார் காந்தியடிகள்.
“கண்களை மூடுவதற்குப் பதிலாக மனதை மூடவேண்டும்” என்பார் அவர். நம்மில் பலர் தியானத்திலும் தவத்திலும் கண்களை மூடிக்கொண்டிருப்போம். ஆனால் மனம் திறந்துகிடக்கும். அது ஊர் சுற்றும். அசிங்கங்களைப் பார்க்கும். மனதை மூடுவதுதான் மன அமைதிக்கான வழி.
வந்த நோய்க்கு மருந்திருக்கிறது என்பதற்காக, வரட்டும் நோயென்று வரவேற்கக் கூடாது. வராமலேயே பார்த்துக்கொள்ள வேண்டும். இது பிணிகளுக்கு மட்டுமல்ல பிரச்சினைகளுக்கும் பொருந்தும். இதுவே அமைதிக்கான வழி
அன்புடன்
மதுரைத்தமிழன்
அன்புடன்
மதுரைத்தமிழன்
அமைதிக்கான சிறப்பான வழி...
ReplyDeleteசென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
ReplyDeleteநன்றின்பால் உய்ப்ப தறிவு (422)
அருமையான பதிவு.
ReplyDeleteகதையில் அமைதிக்கான அற்புத விளக்கம்.
எங்கே தொலைத்தோமோ அங்கு தானே தேடவேண்டும்!
மனதில் உள்ளேதான் தேடவேண்டும்.
அருமையான பதிவு. பதிவின் முடிவு மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
ReplyDeleteமுடிவுரை மாதிரி நீங்கள் சொன்னவை சூப்பர் ,
ReplyDelete