அரசியல் எனக்கு சுத்தமா தெரியாது. விருப்பமும் இல்லை.
ஒரு காலத்தில் கோவையில எங்க பார்த்தாலும் மலையாளிகள் இருப்பாங்க. அவங்களால் பெரிய ஆபத்தில்லை.சாதாரணமா நடுத்தர குடும்பமாவும், முக்கியமா நம்மளை விட இன்னும் கூட்டுக்குள் சுருங்கறவங்களாவும் இருப்பாங்க. ஓணம் அன்னைக்குதான் வெளில தனித்து தெரியுவாங்க.
ஆனா இப்ப எங்கெங்குங்கு காணினும் வடக்கத்து முகம். ஒரு ஏரியான்னு இல்ல பரவலா எல்லா இடத்திலும். எலெக்ட்ரிகலில் முதல் கொண்டு துணி, மருந்து, பெயிண்டுன்னு எல்லா ஹோல்சேல்,ரியல் எஸ்டேட் முழுக்க அவங்க தான். நடுத்தர குடும்பமாவே இருந்தாலும் அவங்க தோரணை நம்ம மக்களை ரொம்ப பாதிக்கற மாதிரி தான் இருக்கும். அவ்வளவு வெளிப்படையா கொண்டாடத்தெரியாம இருந்த நாம ஹோலி முதற்கொண்டு அடாப்ட் பண்ணிக்கிட்டோம். எந்த வட இந்திய குடும்பமாச்சும் பொங்கல் வைச்சிருக்கா? ஹோட்டல், மால் எல்லா இடத்திலும் நிறைந்து நம்ம வாழ்க்கையில் மறைமுகமா இன்ஃப்ளுயன்ஸ் பண்ணிட்டாங்க. அவங்க உசந்தவங்க நாம தாழ்ந்தவங்கனு பதியவைக்க எல்லா முயற்சியும் பண்றாங்க. பண்ணிடாங்கங்கறதுதான் உண்மை.
அவங்களை பார்த்து நம்ம சனமும் மெதுவா மாறிட்டுவருது. சாதிப்பற்று முன்னெப்போதும் விட இப்ப ரொம்ப அதிகம். வாட்ஸ் அப் க்ரூப்கள் முக்காவாசி சாதிப்பெயரோடு. வதந்தியோ உண்மையோ அதீத உணர்வுப்பூர்வமா பரவுது. கல்லூரி மாணவர்கள் காதலிப்பது கலாய்ப்பது கூட சாதி பார்த்துதான். காதல்ங்கறதே குறைஞ்சு சாதி பாசம் எப்பவும் விட அதிகமாஇருக்கு. மாணவர்களே சாதி பெயரில் க்ரூப் வைச்சிருக்காங்க.
நேத்து நடந்து ஊர்வலம் மட்டுமல்ல ஓட்டுக்கேட்டு வரவங்களில் முக்காவாசி வட இந்தியர்களும் இந்த சாதி விரும்பிகளுமே. பிஜேபி ஜெயிக்க ஓரளவு வாய்ப்பிருக்கு.
ஓரிரு தொகுதிகள் தமிழ்நாட்டில வந்தாக்கூட கண்டிப்பா மறுபடியும் இரட்டை டம்ளர் முறைக்கு போயிருவோம்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா அளவிற்கு எந்த துறையும் இந்த நாலு மாநிலத்தை தாண்டி பெருசா வளர்ந்திருக்கா? சில பெரிய நகரங்களை தவிர்த்து தினப்படி வாழ்க்கையை நகர்த்தவே தென்னிந்தியா நோக்கி தினம் வந்திறங்கும் முகங்கள்தான் அதிகம். Quora போன்ற சைட்களில் கோவைக்கு வந்து செட்டில் ஆகவிரும்பும் அவங்க கேள்விகளை பார்த்தாலே தெரியும்.
ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை அடிச்சு தொரத்துவதை நேரா பார்க்கப்போறோம் போல.
கொஞ்சமாச்சும் உருப்படனும்னா பிஜேபி கோவைக்குள் வராம இருக்கனும். எந்த கட்சி வேணாலும் வரட்டும் அதைத்தவிர.
என்னமோ தோணுச்சு.
பதிவை எழுதியவர்
விஜி ராம்
காவிக்கு அனுமதி கொடுத்தால் தமிழகமும் உத்திர பிரததேசமாக மாறும் அதற்கு தூரம் அதிகமில்லை. மக்களே உங்களுக்காக அல்ல உங்களின் குழந்தைகள் பேரன்கள் இந்த மண்ணில் நிம்மதியாக வாழ வேண்டுமா என்பதை யோசித்து வாக்கு அளியுங்கள்.
மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம், இந்த ஆண்டு நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 14.7 சதவிகிதம் கணக்கிடப்பட்டு இருக்கிறது. என்.சி.ஆர்.பியின் 2017 அறிக்கையின்படி, உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 56,011 ஆகும். இந்த எண்ணிக்கை 2018 இல் 59,445 ஆக உயர்ந்தது.
டிஸ்கி :
அது போல மிக நன்றாக எழுதும் பதிவர்களுக்கு உங்கள் தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அல்லது நீங்கள் வெளியிட்ட மின் நூல்கள் அதிகமாக விற்க வேண்டும் என்பதற்காக "மட்டும்" பாஜக ஆதரவு நிலையை எடுக்காதீர்கள்.. உங்களுக்கும் குழந்தைகள் உண்டு அவர்கள் தமிழக மண்ணில் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதை நன்றாக யோசியுங்கள் உங்கள் மின்நூல் விற்பனையை விட உங்கள் வாரிசுகளின் எதிர் காலம் முக்கியம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள் சுயநலமாக வாழாதீர்கள்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.