Sunday, April 4, 2021

 


அட பகவானே எனக்கேண்டா "இப்படி" ஒரு சோதனை



என் மனைவி, என்னிடம்  இன்று இரவு என்ன உணவு வேண்டும் என்று கேட்டாள்.

நான் உடனே நல்லா ருசியா சாப்பிடவேண்டும். அதனால நீயே முடிவு பண்ணிக் கொள் என்றேன்.

உடனே, அவள் அப்ப ஹோட்டலில் நீங்கச் சாப்பிட்டுவிட்டு எனக்கு பார்சல் வாங்கி வாங்க என்றாள்.

இதற்கு நான் என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை

காரணம் நான் சரி என்று தலையாட்டினால் இதுவரை அவள் சமைப்பதை விட ஹோட்டல் சாப்பாடு ருசியாக இருக்கிறதோ என்று கேட்டுவிடுவாளோ என்று பயமாக இருக்கிறது.

அல்லது அவளுக்குச் இன்று சமைக்கச் சோம்பேறியாக இருப்பதால் இப்படிச் ஹோட்டாலில் போய் சாப்பிடச் சொல்லுகிறாளோ  என்னவோ
 
இல்லை உண்மையிலே அவளுக்கு நன்றாகச் சமைக்கத் தெரியாது என்பதை ஒத்துக் கொண்டுதான், ஹோட்டலில் போய் சாப்பிட சொல்லுகிறாளோ?

அதுவும் இல்லையென்றால் இது  நம்மை போட்டு பார்க்க நமக்கு வைக்கும் டெஸ்டா?

அட பகவானே எனக்கேண்டா இப்படி ஒரு சோதனை.

அப்பக் கடைசியில் நான் என்ன செய்தேன் என்றுதானே கேட்கிறீங்க?

சிறிது நேரம் கழித்து ருசியா சாப்பிடணும் ஆசைதான் பட்டேன் .ஆனால் ஏற்கனவே வயிறு புல்லான மாதிரி இருக்கிறதும்மா என்று சொல்லி வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவிட்டு  நல்லா சூடா ஒரு காப்பி போட்டுக் குடித்துவிட்டு தூங்கச்  சென்றேன்..


அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. Replies
    1. சிரிங்க நல்லா சிரிங்க

      Delete
  2. நுணலும் தன் வாயால் கெடும்! :)

    ReplyDelete
  3. அவர் தூங்கிய உடன் நைசாய் வெளியே ஓட்டலுக்கு  கம்பி நீட்டி விட வேண்டியதுதான்!

    ReplyDelete
    Replies
    1. வொர்க் ஃபரம் ஹோம் என்பதால் அவர் லேட்டாகத்தான் தூங்குவார். அந்த நேரம் எந்த ஹோட்டலும் திறந்து இருக்காது ஹூம்ம்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.