நாட்டு நடப்புக்கள் வெற்றி நடை போடும் தமிழகமே & கொரோனா பரப்பும் திருவிழா
அரசு என்பது பிரச்சனைகள் நேரத்தில் மக்களுக்கு நம்பிக்கை தருவதாக இருக்க வேண்டும் ஆனால் இன்றைய தமிழக அரசு உயர்நீதி மன்றத்தில் சொல்லி இருக்கும் தகவல் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை.. இப்படிச் சொல்லும் எடப்பாடி அரசுதான் கடந்த நான்கு ஆண்டுகளாக நல்லாட்சி புரிந்து சாதித்தது என்று சில ;படித்த மேதாவிகள்' சொல்லி வருகின்றனர்.
ஆட்சில இருக்க மாட்டோம் என்பதால் இப்போது உண்மையைச் சொல்லிவிட்டதோ எடப்பாடி அரசு
வெற்றி நடை போடும் தமிழகமே..... |
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்து தேர்தலும் முடிந்து விட்டது இப்போது அரசியல்வாதிகள் ஒவ்வொருத்தருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் வேற இறந்து விட்டார். இந்த அரசியல்வாதிகளோடு கட்சி வேலை செஞ்சவங்க எத்தன பேர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் தெரியவில்லை. அப்படி அவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்குக் கட்சி செலவும் செய்யாது, ஏன்னா அரசியல்வாதிகளுக்கு இப்போது தொண்டர்களின் தயவு இப்போதைக்குத் தேவையில்லை... அதனால சொல்லுறேன் என் தலைவன் தலைவன் என்று ஓடியவர்களே இனிமேலாவது உங்கள் குடும்பம் குடும்பம் என்று சொல்லிப் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள்
போன வருஷம் இந்தியாவில் கொரோனா பரவியதற்கு டெல்லியில் இஸ்லாமியர்கள் நடத்திய ஜமாத் கூட்டம்தான் காரணம் என்று வாய்க் கூசாமல் சொன்னவர்கள் இந்த வருஷம் கொரோனா மிக மோசமாகப் பரவி வருவதற்கு யார் காரணம் என்று சொல்லாமல் வாய் முடிக் கொண்டு இந்த இஸ்லாமியர்கள் ஏதாவது செய்ய மாட்டார்கள் அப்படிச் செய்தால் இந்த கொரோனா பரவலுக்கு அவர்கள்தான் காரணம் என்று பழி சுமத்தலாமே என்று வஞ்சக எண்ணத்தோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்... இந்த கழுகுக் கூட்டத்தின் பார்வையில் ரம்ஜான் கண்ணுக்குத் தென்பட்டுவிட்டது... அதை வைத்து ரம்ஜான் தொழுகையால்தான் கொரோனா பரவுகிறது என்ற கட்டுக் கதையைப் பரவவிடுவார்கள்.. அதனால் இஸ்லாமிய மக்கள் தொழுகை கூட்டங்களைத் தேவையான இடைவெளிவிட்டுப் பாதுகாப்பான முறையில் நடத்தி இவர்களது வாயில் விழுவதற்காக அல்ல உங்கள் குடும்பத்தினரின் நலனுக்காகவாவது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
கொரோனா மிக அதிகமாகப் பரவி வரும் இந்த நேரத்தில் பள்ளிகள் கல்லூரிகள் வேலை செய்யும் இடங்கள் மதத் திரு விழாக்கள் போன்றைவைகளுக்கு தடை வித்திக்கும் அரசு தேர்தல்களை மட்டும் தள்ளி வைக்காமல் இருப்பது ஏன்?மக்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன நமக்குத் தேவை அதிகாரமே என்று தலைவர்கள் நினைக்கிறார்கள் போல #பாருக்குள்லே எங்க பாரத நாடு நல்ல நாடு
கும்பமேளா திருவிழாவை கொரோனா பரப்பும் திருவிழா எனச் சொல்லாமா??
உண்மைதான் மக்கள் வளர்ந்து இருக்கிறார்கள் ஆனால் கெட்டவர்களையே மீண்டும், மீண்டும் தேர்வு செய்தால் என்ன சொல்வது ?
ReplyDeleteமாப்பிள்ளை/பெண்வீட்டார் பேச்சு சாமர்த்தியத்தை நம்பி கல்யாணம் செய்து கொண்டவர்கள் குடும்பங்கள் சிரழிவது போலத்தான் பேச்சு சாதிர்யத்தால் கவரப்பட்டு தலைவர்களை தேர்தெடுத்தால் நாடும் நாசம் ஆகும்
Deleteவெல்கோலனின் ஆட்டம் விரைவில் முடியட்டும்...
ReplyDeleteஉங்களது எண்ணமும் என் எண்ணமும் அப்படித்தான் இருக்கிறது ஆனால் நம் நண்பர்களின் எண்ணங்கள் இதற்கு எதிர்மாறாக அல்லவா இருக்கிறது... மூளை மழுங்கிய அவர்கள் நம்மை மூளை மழுங்கியவர்கள் என்று அல்லவா எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்
Delete