இன்றைய இந்தியாவின் நிலைக்கு ?
காலம் 2020 : உலகில் பல நாடுகளில் கொரோனா கோரதாண்டவம் ஆடிய போது இந்தியாவில் கொரோனா அதிகம் பரவாதற்குக் காரணம் இந்தியர்களின் பழக்க வழக்கமும் பண்பாடும் கலாச்சாரமும்தான் காரணம் எனச் சொல்லப் பட்டது.
காலம் 2021 : உலகில் பல நாடுகளில் கொரோனா கோரதாண்டவத்தை குறைக்கும் போது இந்தியாவில் கொரோனா அதிகம் பரவுவதற்குக் காரணம் இந்தியர்களின் பழக்க வழக்கமும் பண்பாடும் கலாச்சாரமும்தான் காரணம் எனச் சொல்லப் படுகிறது.
கொரோனாவால் ஹாஸ்பிடல் மட்டுமல்ல மயானங்களும் பிஸியாகிவிட்டன. மருத்துவர்களுக்கு இணையாக வெட்டியான்களும் இரவு பகல் பார்க்காமல் உழைக்கிறார்கள் ஹாஸ்பிட்டலில் ஆக்ஸிஜனுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு போல மயானத்திற்குத் தேவைப்படும் மரக் கட்டைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை வந்துவிடுமோ என்றுதான் தோன்றுகிறது
ஆட்சியில் இருப்பவர்கள் மட்டுமல்ல ஆட்சியில் இல்லாத எல்லோரும் மக்களுக்குச் சேவை செய்யலாம் .உண்மையிலே அவர்களுக்கு அக்கறை இருந்தால் தேர்தல் நேரத்தில் மக்களுக்குச் சேவை செய்வேன் என்ற உறுதிமொழி கொடுக்க கோடிக் கணக்கில் செலவழித்த கட்சிகள் அதைப் போல மக்களுக்கு ஆபத்தான இந்த நேரத்தில் சேவை செய்ய தங்கள் பணப் பெட்டிகளைத் திறக்கலாம் அல்லவா? அதற்கு யாரும் எதிர்ப்பா தெரிவிக்கப் போகிறார்கள்
தேர்தலில் வெற்றிப் பெறப் பல கோடி கொடுத்து ஆலோசனைகளைப் பெற்ற தலைவர்கள் ஆபத்தில் சிக்கித் தவிக்கும் மக்களைக் காப்பாற்றப் பணத்தைக் கொஞ்சமாவது செலவிடலாமே?
மோடியைக் குறை சொல்லுவோம் ஆனால் அதே நேரத்தில் நாமும் களம் இறங்கி மக்களுக்கு நல்லது செய்யலாம்தானே. தேர்தல் செலவிற்காக காபர்போரெட் கம்பெனிகளிடம் கையேந்தும் கட்சிகள் இந்த கொரோனாவை ஒழிக்க அவர்களிடம் கையேந்துவதில் என்ன தவறு
இந்த கொரோனா மட்டும் வாராமல் இருந்தால் மோடி ஆட்சியில் அசைவம் சாப்பிடுவதையும் தேசத் துரோகமாக இந்நேரம் மாற்றி இருப்பார்கள்
கொரோனா கடந்த ஒரு வருடமாக உலகத்தையே ஆட்டி படைத்து வரும் வேளையில் அது நம் நாட்டை பாதித்தால் அதைத் தடுக்க அதிலிருந்து மக்களைப் பாதுகாக்க எந்த வித முன்னேற்பாடுகளைச் செய்யாத அரசா கூடங்குளம் அணு ஆலையில் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதிலிருந்து மக்களைப் பாதுகாக்க முன்னேற்பாடுகளை அரசு செய்து இருக்கும் என்று மக்கள் நம்பினால் அவர்களைப் போல முட்டாள்கள் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது.
இன்றைய காலகட்டத்தில் நீதிபதிகள் சொல்லும் கருத்துக்கள், தீர்ப்புகள் எல்லாம் திரைப்பட வசனங்கள் போல உணர்ச்சிகரமாகவே இருக்கின்றன..
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்குத் தற்காலிகமாக 4 மாதம் மட்டும் அனுமதி. அதற்கு அப்புறம் நாட்டு மக்களைக் காப்பாற்ற உதவியதற்காக ஸ்டெர்லைட் ஆலை முழுவதும் செயல்பட வருங்கால தமிழக அரசு அனுமதி அளிக்கும்
அன்புடன்
மதுரைத்தமிழன்

ஆளுமை கிலோ என்ன விலை...?
ReplyDeleteவாயில சுடும் வடையின் விலைதான் ஆளுமையின் விலையும்
Deleteபதிவும், படமும் மனதை மிகவும் வருந்த வைக்கிறது.
ReplyDeleteஉண்மைதான் கோமதியம்மா
Deleteமிகவும் அச்சம் கொள்ள வைக்கும் நிலை, கவலை கொள்ள விக்கும் நிலை இன்றைய நிலை. எல்லோரும் எல்லோரையும் விரல் நோக்கி சுட்டியபடியே திரிகிறார்கள். இந்தக் அக்கடினமான காலகட்டம் தாண்டுவது எப்போது என்கிற கவலை..
ReplyDeleteமக்களுக்கு இதுபற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை அதுமட்டுமல்ல அரசாங்கம் அந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த தவறிவிட்டது போலத்தான் இருக்கிறது யாரையும் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதில் பயன் ஏதுமில்லை
Deleteகடந்த ஆண்டு இங்கு எங்கள் மாநிலமான நீயூஜெர்ஸியிலும் பக்கத்து மாநிலமான நீயூயார்க்கிலும் மக்கள் மடிந்து கொண்ட போது பதட்டம் அடையாத எங்கள் மனது இப்போது இந்தியாவில் நிகழும் போது மிகவும் பதட்டம் அடையவே செய்கிறது