Saturday, May 1, 2021

 

#avargal unmaigal

இதுவும் கடந்து போகும் மறந்தும் போகும்

ஒவ்வொரு மணித்துளியும் ஒவ்வொரு நாட்களும் யாரையும் கேட்காமல் நகர்ந்து கொண்டே போவது போல நம் வாழ்க்கையில் சந்திக்கும் துயரங்கள் பிரச்சனைகள் மகிழ்ச்சிகள் எல்லாம்  ஓடும் நதி நீரைப் போலக் கடந்து சென்று கொண்டே இருக்கும். இதுதான் யதார்த்த வாழ்க்கை.

நம்முடைய இதுநாள் வரை  வாழ்ந்த வாழ்க்கையைச் சற்று  திரும்பிப் பார்த்தால் எல்லாமே  இதுவும் கடந்து போகும் என்பதாகவே இருக்கிறது. நம்முடைய  வாழ்க்கையில்தான் எத்தனை எத்தனை  இழப்புக்கள், துக்கங்கள், வெற்றிகள்,  தோல்விகள்,  மகிழ்ச்சிகள், அவை எல்லாம் வந்து சிறிது காலம் தங்கிக் கடந்து போயிருக்கின்றன.

 
இதுவும் கடந்து போகும் என்ற ஒரு வரிதான் எதையும் கடந்து போகச் செய்யும் நம்பிக்கை தருகிறது.  இந்த நிலை நிரந்தரமில்லை என்ற தெளிவும் வாழ்க்கை ஒரு வட்டம் என்ற புரிந்துணர்வும் இருந்தால் மட்டுமே நாம் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் அடுத்த கட்டத்திற்கு மகிழ்ச்சியுடன் நகர முடியும் ,நம் வாழ்க்கையில் இன்பமும், சந்தோஷமும், வெற்றியும், புகழும் ஏன் ஒரு கட்டத்தில் வாழ்க்கையும் கடந்து போய்விடுகிறது . அப்படி இருக்கையில் துன்பமும் துயரங்களும்  மட்டும் எப்படி நிலைத்திருக்கும். இதுவும் கடந்து போகத்தானே செய்யும்


எத்தனை  நிகழ்வுகள்  , உறவுகள், நண்பர்கள், பகைவர்கள்,  நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்துவிட்டு  சாதாரண  நினைவு அலைகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கின்றன, வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன

வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் அவைகள் நிரந்தரமாக இருக்காததால் அது நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா?


அது போலத்தான் இன்று நம்மைப் பாதித்துக்  கொண்டு இருக்கும் கொரோனாவும்  இதுவும் கடந்தும் போகும் மறந்தும் போகும் ஆஆ சொல்ல மறந்துட்டேன் கொரோனா மட்டுமல்ல மோடியின் ஆட்சியும் மறைந்து போகும்  (அதுதானே மோடி என்ற வார்த்தை இல்லாமல் பதிவு எழுதாவிட்டால் நமக்கு தூக்கம் வராதே ஹீஹீ )


இந்த பதிவை எழுதியதும் இணையத்தில் படித்த  இந்த பதிவு நினைவிற்கு வந்ததால் அதை தேடி இங்கே சேர்த்து இருக்கின்றேன்



மக்கள் புத்தரிடம் செண்ரி புத்தரே நாங்கள் உங்களைப் போன்ற எத்தனையோ ஞானிகளைச் சந்தித்தும், அவர்களது பிரசங்கங்களை கேட்டும் விட்டோம். அதனால் எங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. இப்பொழுதும் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது. எங்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அதனால் எல்லோருடைய சிக்கலும் தீரும்படியாக, அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும்படி சுருக்கமாக ஏதாவது  சொல்லித் தாருங்கள். தேவையற்ற பிரசங்கம் வேண்டாம்.

மௌனமாக சிரித்த புத்தர், “இதுவும் கடந்து போகும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். அந்த கணமே அக்கூட்டம் ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்தது. புத்தரின் மந்திரத்தை மனசுக்குள் அசைபோட்டது.

நன்றாகப் படித்திருந்தும் பணம் சம்பாதிக்க முடியாமல் தாழ்வு மனப்பான்மையால் உழன்று கொண்டிருந்த இளைஞனுக்கு தன்னம்பிக்கையைத் தந்தது அந்த வார்த்தை. “இதுவும் கடந்து போகும்” என்ற வார்த்தையால் தன்னுடைய  நிலை கண்டிப்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்து அவ்விடத்தை விட்டு அகன்றான்.

“இதுவும் கடந்து போகும் என்ற சொல்லால்  என்னுடைய நீண்ட கால நோய் கண்டிப்பாகத் தீர்ந்துவிடும். இனிமேலும் எனக்கு இந்நிலை தொடராது. என்று கூறிச் சென்றான்”நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தவன்.

“இந்த பணம் தொடர்ந்து என்னுடன் இருக்காது என்பதைப் புத்தர் எனக்கு இதுவும் கடந்து போகும் மூலம் புரிய வைத்துவிட்டார். இனி இந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன்” என்று கூறிச் சென்றான் பணக்காரனாக இருந்தவன்.

அடுத்து இருந்த அழகான பெண், “என்னுடைய அழகு எப்போதும் என்னுடன் வராது என்பதை இதுவும் கடந்து போகும் எனக்குப் புரிய வைத்துவிட்டது” என்று கிளம்பினாள்.

கடைசியாக, தினந்தோறும் உழைத்து ஓடாய்த் தேய்ந்த பெண்மணி கிளம்பும் போது, “இத்தனை நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். மரணம் வரையிலும் உழைக்கத்தான் வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்தஇதுவும் கடந்து போகும் மூலம் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. என்னுடைய நிலையும் மாறிவிடும்” என்று நம்பிக்கையுடன் சென்றார்.

எத்தனையோ மனிதர்களை மாற்றிய இந்த இதுவும் கடந்து போகும்  என்ற  வரிகள் உங்கள் வாழ்விலும் இனி ஒளி ஏற்றும். “இதுவும் கடந்து போகும்” என்பதை உறுதியுடன் நம்புங்கள். கண்டிப்பாக மாறிவிடும். தோல்வியைச் சந்திப்பவர்கள், நோயில் இருப்பவர்கள், சிக்கலில் மாட்டியவர்கள், திசை தெரியாமல் இருப்பவர்கள் அனைவரும் தினமும் இந்த மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே இருங்கள். வெற்றி நிச்சயம்… ஏனென்றால் இது தேவ தத்துவம்.


அன்புடன்
மதுரைத்தமிழன்


7 comments:

  1. வெற்றியின் ரகசியம், தேவ தத்துவம் மிக அருமை.
    தினமும் சிந்திப்போம் இதுவும் கடந்து போகும் என்று.

    எல்லோர் வாழ்வும் ஒளி பெறட்டும்
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. வெற்றியின் ரகசியம் அறிந்தாலும் அதைப் பயன்படுத்தாமல் கவலைப்பட்டு கொண்டுதான் பலரும் இருக்கிறார்கள்

      Delete
    2. கவலைபடுவது மனித இயல்பு. திட மனம், நம்பிக்கை வேண்டும்.

      Delete

    3. கவலைப்டுவது மனித இயல்பு ஆனால் கவலையேப் பட்டுக் கொண்டிருக்காமல் பிரச்சனை எதிர் கொள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

      Delete
  2. Replies
    1. ஆமாம் தனபாலன் நிச்சயம் மாறும்

      Delete
  3. இந்தத் தத்துவம் தான் நம்மில் பலரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. நல்ல தத்துவப் பதிவு. கதை உட்பட

    துளசிதரன்

    நல்ல பதிவு மதுரை. மாற்றம் ஒன்றுதானே மாறாதது எனவே இதுவும் கடந்து போகும்.

    மனதில் உறுதியும், நம்பிக்கையும் இருந்தால் கடந்து விடலாம் தான், மனோ தைரியமும் வேண்டும். ஏதேனும் ஒன்றில் நம்பிக்கை வேண்டுமே.

    எல்லோர் வாழ்வும் சிறக்க வேண்டும்.

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.