Tuesday, May 4, 2021

 


சாணக்கிய குருமூர்த்தியும், வெட்டி ரஜினியும் &  வெத்துவேட்டு மோடியும்

வெட்டி ரஜினியும் வெத்துவேட்டு மோடியும் சேர்ந்து தமிழகத்தின் வெற்றிடத்தை நிரப்புவார்கள் –ன்று  ஆடிட்டர் குருமூர்த்தியின் தப்புக்கணக்கு போட்டார் .ரஜினி கண்டிப்பாகக்  கட்சி ஆரம்பிப்பார் முதல்வராகக் கோட்டைக்குச் செல்வார். சிஸ்டங்களை சரி செய்வார் என்று  உறுதி எல்லாம் சொன்னார் ஆனால் இப்ப என்ன நடந்துச்சு  என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா என்ன?

 

ரஜினி ரசிகர்களுக்குத்  தமிழருவி மணியன் அவர்களின் வேண்டுகோள்.

ரஜினி ரசிகர்களே தமிழக தேர்தல் முடிவுகளுக்கு அப்புறம் ரஜினியிடம் பேசினேன். அவர் கொரோனா அலை முடிந்ததும் ரசிக மன்ற தலைவர்களைக் கலந்து ஆலோசித்து கட்சி ஆரம்பிப்பதற்கான இறுதி முடிவுகளை எடுக்கவிருக்கிறார். அதனால் ரசிகர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு தங்களது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று ரஜினி என் மூலம் உங்களிடம் சொல்லச் சொன்னார்.  அவர் கட்சி ஆரம்பிக்கும் முன் ரசிகர்கள் அனைவரும் ஊன்றி நடக்க ஊன்றுகோலையும் முகக் கண்ணாடியும் காதொலிக் கருவியும் தரப்படும் என்று சொன்னார்.. அதனால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருங்கள்



அன்புடன்
மதுரைத்தமிழன்

04 May 2021

8 comments:

  1. Replies
    1. ஓ அப்படியும் அழைக்கலாமோ....

      Delete
  2. வணக்கம் சகோதரரே

    நல்ல அரசியல் தெளிவான பதிவு. ஆனால் இது (அரசியல்) எனக்கு அவ்வளவாக தெரியாது. ஒரளவுதான் இந்த மாதிரி விஷயங்களை படிப்பேன். கடைசி பாரா மனம் விட்டு சிரிக்க வைத்தது. அரசியல் விஷயங்களை நீங்கள் நன்றாக அலசுகிறீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies

    1. எனக்கும் அரசியல் அதிகம் தெரியாதும்மா நாளிதழ்கள் வார இதழ்கள் மற்றும் ஊடகங்கள் மற்றும் சமுக இணையதளங்களில் வரும் செய்திகளை படித்து அன்றைய சுழலுக்கு ஏற்றவாறு நையாண்டி பண்ணி வருகிறேன் அவ்வளவுதானம்மா


      உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி

      Delete
  3. Replies
    1. சாணக்கியர் தோற்று போனதற்க்காக சிரிக்காதீர்கள் அவர் அடுத்த வீயூகத்தை பற்றி யோசித்து வருகிறார்

      Delete
  4. என்னென்னவோ கணக்குகள்..  என்னென்னவோ முடிவுகள்..திட்டம் போட்டு வெற்றி பெறலாம் என்றால் யார் வேண்டுமானாலும் அதை அடையலாம்.  பாவம் குருமூர்த்தி.

    ReplyDelete
    Replies
    1. திட்டம் போட்டால்தான் யாராலும் வெற்றி பெற முடியும் ஆனால் போடப் படும் எல்லா திட்டங்களும் எல்லா சமயங்களிலும் வெற்றி பெறுவதில்லை என்பதுதான் உண்மை

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.