Thursday, May 20, 2021

 

@avargal unmaigal #avargal unmaigal

தமிழக அரசு, மத்திய அரசின் புதிய கல்வி கொள்ளையைப் புறக்கணிக்கும் அதே சமயத்தில் செய்ய வேண்டியது என்ன?

தமிழக அரசு மத்திய அரசின் புதிய கல்வி கொள்ளையைப் புறக்கணிக்கும் அதே சமயத்தில் மாநிலத்தில் கல்வித் துறையைச் சீர் செய்யக் கடுமையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும். மாணவர்களின் கல்வித்திறன் உயர ஆசிரியர்களின் கல்விதரம் உயர்ந்து இருக்க வேண்டும் .அப்படியில்லை என்றால் முதல் கோணல் முற்றும் கோணல் என்ற கதையாகிவிடும். அதற்குத் தனியார்ப் பள்ளியாக இருந்தாலும் சரி அரசுப் பள்ளியாக இருந்தாலும் சரி ஆசிரியரின் தரத்தை மேம்படுத்துவதற்கு ஒரு வலுவான ஆசிரியர் மதிப்பீட்டு முறை முக்கியமானது. அதற்காக அந்தந்த துறையைச் சார்ந்த ஆசிரியர்களுக்கு மாநிலம் தழுவிய ஒரு பொதுத் தேர்வை ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கான இடைவெளிகளில் நடத்தி ஆசிரியரின் தரத்தை உறுதி செய்யவேண்டும். இதைச் சொல்லக் காரணம் இப்போது ஆசியர்களாகப் பணியாற்றும் பலர் பி.எட் எம்.எட் போன்றவற்றைப் படித்துத் தேர்ந்து இருந்தாலும் பலர் இந்தக் காலத்திற்கு ஏற்ப கல்வியைக் கற்றுத் தரும் திறன் இல்லாமலே இருக்கிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை

 
இப்படி இவர்களுக்கான ஒரு பொதுத் தேர்வை நடத்த வேண்டும் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தொடர்ந்து ஆசிரியராகப் பணி புரிய வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வரலாம். எப்படி நாட்டை ஆள்பவர்களை ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்வுக்கு உள்ளாக்கித் தேர்ந்தெடுக்கிறோமோ அது போலக் கல்வியாளர்களையும் தேர்வை எழுத வைத்து அவர்களின் தகுதியைச் சரி பார்த்துத் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்.. காரணம் நல்ல ஆசிரியர்களால்தான் இந்தியாவின் வருங்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. இதைச் சொல்லாக் காரணம் ஒரு மாணவரின் கற்றல் திறனைப் பாதிக்கும் மிகப்பெரிய ஒற்றைக் காரணி வகுப்பறையில் ஆசிரியரின் தரம்.


இந்த ஆசிரியர் மதிப்பீட்டு மூலம் ஆசிரியரின் தரத்தை மேம்படுத்துவதற்கு வழி வகைகளைச் செய்கின்றது. மேலும் இந்தத் தேர்வில் தவறுபவர்களைக் கண்டு அறிந்து அவர்கள் திறம்படத் தேவையான கூடுதல் பயிற்சியைப் பெற முடியும்



உறுதியான, நியாயமான, ஆராய்ச்சி அடிப்படையிலான மற்றும் நன்கு செயல்படுத்தப்பட்ட ஆசிரியர் மதிப்பீட்டு முறையுடன் ஆசிரியர் தரத்தை உறுதி செய்வது ஆசிரியர் பணியாளர்களை வலுப்படுத்தி மேம்படுத்துவதோடு மாணவர்களின் கல்வித்தரத்தையும் இதன் மூலம் மேம்படுத்தலாம் ..


இப்படிச் செய்வதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் எந்தப் பள்ளியில் படித்தாலும் அவர்கள் தகுதியான கல்வியைப் பெறுவார்கள். அப்படிக் கல்வி பெறுபவர்கள் இந்தியா முழுவதும் நடை பெரும் நீட் தேர்வாக இருக்கட்டும் அகில உலக அளவில் நடக்கும் தேர்வாகட்டும் அதில் மிகச் சிறப்பாகத் தேர்வு பெறுவார்கள்


அப்படி இல்லாமல் இப்போது நடை பெறுவது போலவே மாணவர்களும் ஆசிரியர்களும் இருந்தால் பாடங்களைப் புரிந்து படிப்பதற்குப் பதில் தேர்வில் எப்படி எழுதினால் பாஸாகலாம் என்பதை மட்டும் கற்று எல்லாப் பாடத்திலும் நூற்றுக்கு நூறு வாங்கிப் பாஸ் பண்ணி இருந்தாலும் கற்றதை பற்றிச் சில வரிகள் பேச எழுதத் தெரியாதவர்களாகத்தான் இன்றைய மாணவ சமுதாயம் இருக்கின்றது


இந்த நிலை நிச்சயம் மாற வேண்டும் தமிழக மாணவர்கள் வருங்காலத்தில் சாதிக்க அரசு இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்


இந்தியாவில் கல்வியில் பல பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கை 2020 ஐ மோடி அரசு அறிவித்தது. ... பெரிய சீர்திருத்தங்களில், பள்ளிக்கல்வி அமைப்பில் 10 + 2 அமைப்பு 5 + 3 + 3 + 4 கட்டமைப்பால் மாற்றப்பட்டுள்ளது. இதில் 12 ஆண்டுகள் பள்ளிப்படிப்பு மற்றும் மூன்று ஆண்டுகள் அங்கன்வாடி மற்றும் முன் பள்ளி ஆகியவை அடங்கும். இந்தக் கட்டமைப்பால் மாற்றம் ஏதும் பெரிதாக வந்துவிடப் போவதில்லை.. இப்படி மாற்றம் கொண்டு வருவதற்குப் பதில் ஆசிரியர்களின் திறமை சோதிக்க மாற்றம் கொண்டு வந்தால் ஆட்டோமேடிக்கா மாணவர்களின் கல்வியும் மேம்படும்


அன்புடன்
மதுரைத்தமிழன்




20 May 2021

11 comments:

  1. ஆனால்   இப்படிச் செய்தால் எதிர்ப்புதான் வலுக்கும்.  காலம் காலமாகத் தொடர்ந்து வரும் சில (கல்வி) முறைகள் மாற்றப்படவேண்டும். 

    ReplyDelete
    Replies
    1. எதிர்ப்புகள் இருக்கும் என்பதற்காக நல்லதை செய்யாமல இருக்கணுமா என்ன? கல்வு முறைகள் எப்படி மாற்றப்பட வேண்டும் என்று நீங்கள் நினைப்பத்தை நேரம் இருந்தால் இங்கே சொல்லங்களேன் ஸ்ரீராம்

      Delete
  2. செயல்முறை கல்வியை மேம்படுத்த வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. செயல்முறை கல்வியோடு சுயமாக சிந்திக்கவும் செய்யமாறு கல்வி முறை மாற வேண்டும்

      Delete
  3. சமச்சீர் கல்வி மிகவும் முக்கியம்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இதுவும் முக்கியம்தான்

      Delete
  4. இங்கே பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் திறமையால் பணியில் இருந்தாலும், அவர்களும் நிறைய கஷ்டப்பட்டு தான் பணிக்கே வருகிறார்கள் என்பதை ஆசிரிய நண்பர்கள் சொல்லியது உண்டு. வந்த பின்னும் அவர்களுக்கு தரும் பணி மாணவர்களுக்கு கல்வி பயில்விப்பது மட்டுமல்ல என்பதை எத்தனை பேர் அறிவார்கள் - அரசின் எல்லா களப்பணிகளுக்கும் அவர்களைத் தானே பயன்படுத்துகிறார்கள் - தேர்தல், மக்கள் தொகை கணக்கெடுப்பு, பள்ளிக்கு மாணவர்களைச் சேர்க்க வீடு வீடாகச் செல்வது என பல வேலைகள். நேரடியாக ஆசிரியர்களிடம் கேட்டால் அவர்களுக்கு இருக்கும் தொல்லைகளைச் சொல்வார்கள் - வெளிப்படையாக சொல்வது அவர்களுக்கு கடினம் என்றாலும் Off the record சொல்ல முடியும்.

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்லி இருக்கும் கருத்தில் திறமையாணவர்களுக்கு பிரச்சனை இல்லை. எப்போது ஆசிரியர்கள் பணியில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று சொல்லுகிறோமோ அப்போதே ஆசிரியர்களை மற்ற பணிகளை செய்ய சொலவதையும் முற்றிலும் தடை செய்ய வேண்டும் ஆசிரியர்கள் முழுநேரப் பணியும் கல்விக்கு மட்டும் செயல்படுவதாக இருக்க வேண்டும்

      Delete
  5. கல்வித் துறையில் நிறைய மாற்றங்கள் வர வேண்டும். நீங்கள் சொல்லியிருப்பது போல் ஆசிரியர்களின் தரமும் மிக மிக முக்கியம். கல்வியில் ஊழல் வந்துவிட்டால்/வந்துவிட்டதால் அதன் தரம் கீழே இறங்கித்தான் உள்ளது. இது நான் பொதுவாகச் சொல்வது.

    ஆனால் ஆசிரியர்கள் நாங்கள் கற்பித்தல் மட்டுமின்றி பல வேலைகளையும் செய்ய வேண்டியுள்ளது. பள்ளி ஆசிரியர்களுக்கு வருடம் முடிவில் பிள்ளை பிடித்தல் என்று வீடு வீடாகச் சென்று அடுத்த வருடம் பிள்ளைகள் பள்ளிக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி சில சலுகைகள் தருகிறோம் என்றும் சொல்ல வேண்டும். இது நான் சொல்வது அரசு சார்ந்த ஆனால் தனியார் பள்ளிகள். இங்கு ஆசிரியப் பணிக்குப்ப் பணம் கொடுத்துதான் சேர வேண்டும். நான் சேர்ந்த போதே 70 ஆயிரம் வருடங்கள் பல முன்பு. என் மனைவிக்கும் அதேதான்.

    நாங்கள் இருக்கும் பகுதி கிராமம் என்பதால் பள்ளிக்கு மாணவர்களைச் சேர்ப்பது பிள்ளை பிடிப்பது என்பது வருடா வருடம் நடக்கும். தேர்தல் பணிகள் வந்தால் அதுவும் உண்டு. சென்சஸ் எடுப்பது என்று பல பணிகள்.

    வீடு வீடாகச் சென்று பெற்றோரை கன்வின்ஸ் செய்வது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? அரசு இதற்கெல்லாம் வழிவகுத்தால் ஆசிரியர்களின் தரம் இன்னும் கூடும் வாய்ப்புண்டு. அரசுப் பள்ளிகளின் தரத்தையும் கூட்டினால் தனியாரின் இடர்பாடு இல்லாமல் கல்வியின் தரமும் பெருகும்.

    இங்கு பல சிலபஸ் கல்வி இருப்பதால் பொதுத்தேர்வில் எல்லா மாணவர்களும் ஒன்று போல் போட்டியிடுவது கடினமாகத்தான் இருக்கிறது.

    எப்போது கல்வி, மருத்துவம் அரசு தன் கையில் எடுத்துக் கொண்டு திறம்படச் செய்கிறதோ அப்போது அது நல்லவிதமாக அமையும் பணம் பிடுங்கலும் குறையும் தரமும் நன்றாக இருக்கும்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. எப்போது மத்திய அரசு மாநில கல்வி கொள்கையில் தலையிடக் கூடாது என்று மாநில அரசு சொல்லுகிறதோ அப்போதே தனியார்களும் கல்விதுறையில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தி அரசு கல்வி துறை முழுவதையும் தன் வசம் வைத்து பொதுவான அதே நேரத்தில் மிக தரமான கல்வியை இலவசமாக எல்லோருக்கும் தர வேண்டும் அல்லது குறிப்பிட்ட வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும் இலவசமாக தந்து அதிக வருமானம் உள்ளவர்களிடம் இருந்து குறிப்பிட்ட அளவு நியாமன கட்டணம் வசூல் செய்ய வேண்டும்.. தனியார்கள் கல்வி நிலையம் நடத்த விரும்பினால் அவர்கள் கல்வியை அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தில் மட்டும் நடக்க வழி செய்யலாம் ஆனால் அவர்களும் அரசு பாடத்திட்டத்தை மட்டும் பின்பற்ற செய்ய வழி வகைகளை செய்யலாம்.

      பள்ளிக்கு குழந்தைகளை படிக்க அழைத்து வருவதை அந்த வட்ட கவுன்சிலர்கள் கையில் கொடுக்க வேண்டும் அவர்கள்தானே சமுக சேவை செய்ய என்று வருகிறார்கள்

      அரசின் களப்பணிகளுக்கு ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை முற்றிலும் தடுத்து அதற்கு பதிலாக கல்லூரி மாணவர்களை அதில் ஈடுபடுத்த வழி செய்யலாம் அதற்காக அவர்களுக்கு ஒரு மார்க் என்று வைக்க வேண்டும் அது மட்டுமல்ல அவர்கள் செய்வதற்கு ஒரு சிறிய ஊக்க தொகையையும் தரலாம் இப்படி செய்வதன் மூலம் அவர்களை சமுகப் பணியில் ஈடுபடுத்த செய்யலாம்

      Delete
  6. கல்வியின் தரம் மேம்படுத்த வேண்டும் இதில் மாற்றுக் கருத்து இல்லை . ஆனால் செயல் படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன . பல கிராமப் பள்ளிகளில் semi urban ,urban area வில் கூட பல மாணவர்களுக்கு வீட்டுச் சூழ்நிலைகள் ( குடிகார அப்பா ,திருமணம் தவிர்த்த உறவுகள் (கணவன் மனைவி இருவருமே செய்கிறார்கள் )தவிரக் குடும்பத் சண்டை , டி வி பாட்டுக்கு சத்தம் பக்கத்து வீட்டு டி வி,சண்டை சத்தம் இவற்றால் தரமான கல்வி அளிக்கப் பட்டாலும் அவர்களால் படிக்கும் லோடு தங்க முடியவில்லை என்பதும் உண்மை

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.