மக்கள் வரிப்பணத்தில் சும்மா இருக்கும் ஜனாதிபதி பதவி தேவைதானா?
ஜனாதிபதி பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்றே நாம் கூறி வருகிறோம் அதற்குக் காரணம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கொண்டு வரும் புதிய சட்டங்களுக்குக் கையெழுத்து மட்டும் போடுவதை மட்டும் ஜனாதிபதி செய்து வருவதால்.. இந்த ஜனாதிபதிக்கு அதிகாரம் அதிகம் இருந்தாலும் அதை ஒருவரும் இதுவரை பயன்படுத்தியது இல்லை
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் சரிவரச் செயல்பட வில்லை அல்லது மாநிலத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுப் போனால் உடனே அந்த மாநிலத்தில் உள்ள ஆளுநர் தலையிட்டுப் பல நடவடிக்கைகளை எடுக்கிறார் அதைப் பல சமயங்களில் நாம் கண்கூடாகக் காண்கிறோம். எப்படி மாநிலங்களுக்கு கவர்னரோ அது போலத்தான் மத்திய அரசுக்கு ஜனாதிபதி அவர் நினைத்தால் மாநில ஆளுநர் நடவடிக்கை எடுப்பது போல மத்திய அரசு தவறும் போது நடவடிக்கை எடுக்கலாம் ஆனால் அப்படி எந்த ஜனாதிபதியும் இதுவரை செய்தது இல்லை
சரி அதை விடுங்க... ஆனால் இந்தியாவில் இப்போது கொரோனா தலைவிரித்து ஆடும் நேரத்தில் நமது ஜனாதிபதி ஏதாவது அறிக்கை அளித்து இருக்கிறாரா அல்லது நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி செய்திகள் ஏதும் பகிர்ந்து இருக்கிறாரா? இல்லைதானே
உலக நாடுகள் பல கொரோனா சமயத்தில் இந்தியாவிற்கு உதவி வருகின்றது. ஆனால் அப்படிக் கிடைத்த உதவிகளை மத்திய அரசு இதுவரை சரிவரை பயன்படுத்த வில்லை என்பதாகத்தான் செய்திகள் வருகின்றது..
இந்த சமயத்திலாவது மத்திய அரசு என்ன செய்கிறது என்று ஒரு கேள்விகள் கூட எழுப்பாமல் மூன்று வேளையும் ரொட்டியும் சப்ஜியும் சாப்பிட்டுக் கொண்டு வீட்டிற்குள்ளே இருக்க நமக்கு ஒரு ஜனாதிபதி தேவைதானா? அவர் செய்யும் செயலை உச்ச நீதிமன்ற நீதிபதியே பார்த்துக் கொள்ளலாமே..
என்ன நான் சொல்வது சரிதானே?
அன்புடன்
மதுரைத்தமிழன்
Home
»
»Unlabelled
» மக்கள் வரிப்பணத்தில் சும்மா இருக்கும் ஜனாதிபதி பதவி தேவைதானா?
Thursday, May 6, 2021
4 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
மற்றொரு பொம்மை...!
ReplyDeleteஇந்தியாவில் இது போன்ற பொம்மை பதவிகள் பல இருக்கின்றன அதில் பலர் இருக்கின்றனர்
Deleteஆஹா... ஆட்டுக்கு தாடி மேட்டர் மறுபடி கிளம்புகிறதா?
ReplyDeleteஅது என்ன ஆட்டுக்கு தாடி மேட்டர் புரியலையே நேரம் கிடைத்தால் விளக்க முடியுமா?
Delete