Tuesday, May 18, 2021

  

@avargal unmaigal

இந்துக்களால் அல்ல இந்துத்துவ மக்களால் இறைச்சி உணவுகளுக்கு எதிராகக் கருத்துகள் திணிக்கப்படுகின்றனவா?

புலால் உணவு கூடாது என்பதற்கு இந்துமதம் ஒன்றும் புத்தமதத்தைத் தழுவித் தோன்றியதல்ல . இந்து மதம் தனித்துவம் வாய்ந்தது. இந்து மதம் மற்றைய மதங்களைப் போலத் தோற்றுவிக்கப்பட்டது அல்ல. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை. அதனால்தான் மற்ற மதங்களைப் போல அதற்கு மாற்றம் செய்ய இயலாது.. இந்துவாக வேண்டுமானால் அவர்களைப் போல வாழ வேண்டும்.. எப்போது இந்து மதம் வாழ்க்கை முறை என்று சொல்லுகிறோமோ அப்போதே இந்து மதம் என்றும் இறைச்சி உணவுகளுக்கு எதிரானது அல்ல என்பது சரி, ஆனால் இப்போது இந்து மதத்தில் உள்ள சில சாதியினரின் முயற்சியால் இந்துத்துவ ஆட்கள் மூலம் இறைச்சி உணவு எதிரானது போல அது பரப்பப்படுகின்றது. எப்படி விரத நாட்களில் சில உணவு வகைகளைச் சாப்பிடக் கூடாது என்கிறோமோ அது போலச் சில நாட்களில் இறைச்சி உணவைத் தவிர்க்க வேண்டும் என்றுதான் வழி வழியாகச் சொல்லி வருகிறார்களே தவிர அது தவறான உணவு என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.


 

இந்தக் கொரோனா காலத்தில் இறைச்சிக்கடைகளில் கூட்டம் கூடுகிறது என்று செய்தி ஊடகங்கள் மூலம் இந்துத்துவ ஆட்கள் மூலம் பெரிது படுத்தப்படுகிறது .ஆனால் எந்தவொரு இந்துத்துவ விபச்சாரிகளும் இது வரை காய்கறிக் கடைகளில் சமுக இடைவெளி விட்டுத்தான் மக்கள் வரிசையில் நின்று வாங்குவது மாதிரி எந்த ஒரு படத்தையும் செய்தியையும் எழுதவில்லை பகிரவில்லை அங்கேயும் இறைச்சிக் கடைகளில் கூடுகிற கூட்டம்தான் டாஸ்மாக்கில் கூடுகிற அளவிற்குத்தான் காய்கறி கடைகளிலும் கூடுகிறது.


எங்கேயாவது காய்கறி கடைகளில் கூட்டம் கூடினால் கொரோனா தாக்குதல் இருக்காது என்று உலகச் சுகாதார அமைப்போ அல்லது ஆராய்ச்சி நிறுவனங்களோ சொல்லி இருக்கிறதா என்ன?

 
#avargal unmaigal


அடேய் உங்களுக்குப் புத்தி இருந்திருந்தால் என்ன சொல்லி இருக்கவேண்டும்.. மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் கூட்டம் கூடுகிறது. இந்த அரசாங்கம் பொறுப்புள்ள அரசாங்கமாக இருந்தால் இங்கே கூட்டமாகக் கூடாமல் எல்லோரையும் வரிசையில் சமுக இடைவெளியோடு வர ஏற்பாடு செய்யவேண்டும் அதுமட்டுமல்ல இந்தக் கடைகளுக்கான இடைவெளியும் அதிகமாக இருக்க ஏற்பாடு செய்து இருக்க வேண்டும் என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்.


அடேய் சங்கிகளா காய்கறி தின்பதாலோ அல்லது இறைச்சிகள் சாப்பிடுவதாலோ அறிவு கூடவோ குறையவோ செய்யாது நன்றாகப் படித்துச் சிந்திப்பதால் மட்டும்தான் அறிவு வளரும் அதற்குக் கொஞ்சமாவது மூளை இருக்கவேண்டும் ஆனால் அது உங்களிடம் கொஞ்சம் கூட இல்லை

டாட்


அது என்னங்க மீன் வாங்குகிற ,கறி வாங்குகிற கூட்டத்தினால்தான் மட்டும் கொரோனா பரவது. மற்றபடி வேற எதுவும் வாங்கக் கூட்டம் கூடினால் கொரோனா பரவாதா என்ன? பருப்பு கீரைக் காய்கறி தயிர் வாங்கவும்தான் கூட்டம் கூடுகிறது அதனால அதையும் ஆறு மாசம் கழித்து வாங்கலாம்தானே?


அன்புடன்
மதுரைத்தமிழன்




மார்பிலிருந்து சேலை விலகி இருந்தால் சேலையை இழுத்து மூடுமா என்று சொல்லாமல் அதற்குப் பதிலாகச் சேலையைக் கட்டாமல் நிர்வாணமாக இரு என்று சொல்பவன் மாதிரிதான் இந்தக் கலாச்சார இந்துத்துவச் சங்கிகளின் சொல்லும் செயலும் இருக்கின்றது

18 May 2021

3 comments:

  1. இது போல் பல மூட நம்பிக்கைகளை நம்ப வைப்பதில் அவர்கள் நிபுணர்கள்...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. தொலைக்காட்சி செய்தி ஒன்றில் ஏதோ ஒரு ஊர் மார்க்கெட்டைக் காட்டினார்கள்.  எல்லோரும் கூட்டம் கூட்டமாகத்தான் நின்று, சென்று கொண்டிருந்தார்கள்.  பாதி பேர் மாஸ்க்கை இறக்கி விட்டுக்கொண்டு!  அந்தச் செய்திகளிலும் மற்ற செய்திகளிலும் இறைச்சி மட்டும், காய்கறி மட்டும் என்று காட்டி நான் பார்க்கவில்லை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.