இதைக் கூட எங்களுக்குச் செய்யமாட்டீர்கள் என்றால் உங்கள் உறவுதான் எங்களுக்கு எதற்கு?
சமையலறையில் வந்து உதவி செய்யுங்கள் என்றா கேட்கிறோம்!
பாத்திரம் கழுவும் போது உதவி செய்யுங்கள் என்றா கேட்கிறோம்!
துணி துவைக்கும் போது கூடவந்து அடித்து துவையுங்கள் என்றா கேட்கிறோம்!
வேலைக்குச் செல்லும் போது பஸ்ஸில் இடிபடாமல் செல்ல
அலுவலகத்திற்கு பைக்கில் வந்து விட்டுவிட்டு போங்கள் என்றா கேட்கிறோம்!
இல்லை குழந்தைகளை இரவு நேரத்தில் தூங்க வையுங்கள் என்றா கேட்கிறோம்!
அல்லது படுக்கை அறையில் தொந்தரவு செய்யாதீர்கள் என்றா கேட்கிறோம்!
நாங்கள் கேட்பதெல்லாம்
அந்த மூன்று நாட்களில் மட்டுமாவது தேள் கொட்டுவது போல வார்த்தைகளைக்
கொட்ட வேண்டாம் என்றுதானே கேட்கின்றோம்
இதைக் கூட எங்களுக்குச் செய்யமாட்டீர்கள் என்றால் உங்கள் உறவுதான் எங்களுக்கு எதற்கு?
இதுவும் கடந்து போகும் மறந்தும் போகும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
அப்படியெல்லாம் வேறு சொல்கிறீர்களா? ஆனால் மேலே சொல்லி இருக்கும் எல்லா விஷயங்களையும் கேட்பவர்களும் இருக்கிறார்களே...
ReplyDelete:>))
அப்படி கேட்பவர்களுக்கு நாம் உதவி செய்வதுதானே முறை. இந்த உதவிகளை நீங்களும் செய்கிறீர்கள் நானும் செய்து கொண்டுதான் இருக்கிறீர்கள் ஆனால் செய்யாமல் இருக்கும் பலருக்கு எடுத்து சொல்லவே இந்த சிறு பதிவு., எனக்கு தெரிந்த ஒரு பெண்மனி மனக்குமறலுடன் என்னுடன் பகிர்த்த சேதியைத்தான் என் பாணியில் பதிவாக கொடுத்து இருக்கின்றேன் ஸ்ரீராம்
Deleteநல்ல பதிவு.
பெண்கள் படும் துன்பத்தை புரிந்து கொண்டு பரிவுடன் நடப்பதே நல்லது.
மதுரை சூப்பர். பெண்களின் கஷ்டங்களைப் புரிந்து கொண்டாலே போதும்.
ReplyDeleteத இண்டியன் க்ரேட் கிச்சன் படம் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். இல்லைனா பாருங்க அருமையான படம். நீங்கள் சொல்லியிருக்கும் கருத்தினை ஒத்த படம். எடுத்தவிதம் வித்தியாசம்னும் தெரிகிறது. மலையாளப் படம்.
கதைதான் வாசித்தேன் நான் படம் பார்க்கவில்லை. டெய்லி மோஷனில் ஃப்ரீயாக இருக்கு ஆனாலும் நான் பார்க்க முடியவில்லை.
கீதா
அந்தப் படத்தில் ஒரு சீனில் மிக மிக அருமையான ஒரு கருத்து சொல்லப்பட்டிருக்கும். எல்லா ஆண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
Deleteகீதா