ஆனால் இந்தியாவில் ஊரடங்கு என்பது கேலிக்குரியதாக இருக்கிறது. அத்தியாவசத் தேவைக்கு மட்டும் வெளியே வாருங்கள் என்றால் மக்களுக்கு எது அத்தியாவசம் என்பது தெரியவில்லை அதனால்தான் பைக் எடுத்துக் கார் எடுத்தும் ஊரைச் சுற்றுகிறார்கள்.ஆனால் ஏழைகளுக்கோ அத்தியாவசத் தேவைகள் பல இருந்து அவர்கள் வெளியே வருவதில்லை காரணம் அதற்குத் தேவையான தினக் கூலிகள் அவர்களுக்குக் கிடைத்தால்தானே அதைப் பூர்த்திச் செய்ய முடியும்...
கொரோனா லாக்டவுன் காலத்தில் பெண்கள் என்ன செய்யலாம் ஆண்கள் என்ன செய்யக் கூடாது?
பணம் இருப்பவர்களோ ஊரடங்கு சமயத்தில் வீட்டிற்குள் உட்காராமல் பல இடங்களுக்குச் செல்வதால் பலருக்கு கொரோவை பரப்புவதுமட்டுமல்ல தன் குடும்பத்தினருக்கும் பரப்புகின்றனர். அதன் பின் உயிர் காக்கும் மருந்து வாங்க ஆயிரக்கணக்கில் பணத்தோட அலைகிறார்கள். அதே சமயத்தில் பணம் இல்லாமல் தங்கள் உயிரைக் காக்க முடியாமல் பலர் துடிக்கின்றனர்.இப்போது இரண்டாயிரம் ரூபாயைத் தருகிறது அரசு என்றவுடன் கூட்டம் வரிசையில் நிற்கிறது.
ஒரிருநாள் ஊரடங்கு தளர்வு என்பது அத்தியவச பொருட்கள் வாங்கத்தான் என்பதைப் புரிந்து கொள்ளாமல் பட்டுச் சேலை நகைகள் வாங்கத்தான் எனப் புரிந்து கொண்டால் பிரச்சினை அரசிடம் இல்லையே. அரசைக் குற்றம் சொல்ல உங்களுக்குக் கொஞ்சம் கூடத் தகுதியே இல்லை ஏன் உங்களுக்குத் தேசத்தின் மீது அக்கறையே இல்லை எனலாம். உங்களைப் போல உள்ளவர்கள் இருக்கிற போது மோடி போன்ற தலைவர்களை/அரசை நாம் குற்றம் சொல்ல நமக்கு அதிகாரம் இல்லை உரிமைகளும் இல்லைதான்
சமூகப் பொறுப்பு என்பது ஒவ்வொரு தனி மனிதரிலிருந்தும் தொடங்குகிறது அதைப் புரிந்து கொள்ளாத நீங்கள் மனித ஜென்மங்களே அல்ல
நீங்கள் பட்டினி கிடக்கும் போது உங்கள் நண்பர் வகை வகையாகச் சமைத்து ஸ்டேடஸ் போடுவதைப் பார்க்கும் போது உங்கள் மனதில் என்ன தோன்றும் என்பதைச் சில நிமிடங்கள் யோசித்துத்தான் பாருங்களேன். வகை வகையான சாப்பாடு சாப்பிடுவதை விட வயிற்றுப் பசி போக உணவு உண்டு மற்றவர்களுக்குக் கொடுத்து உதவலாமே
மக்களுக்குத் தேவையான பொறுப்புணர்ச்சிதான் தேவையே தவிர ஏழையைப் பட்டினி போடும் ஊரடங்கு தேவையில்லை
அன்புடன்
மதுரைத்தமிழன்
நல்ல கருத்துள்ள பதிவு மதுரை. பாராட்டுகள் வாழ்த்துகள். கண்டிப்பாக அரசைக் குற்றம் சொல்வதை விட மக்கள் இன்னும் சமூகப் பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும். கூட்டங்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது.
ReplyDeleteஸ்டேட்டஸ் போடுபவர்களில், அல்லது போடாதவர்களில் பலரும் உதவுபவர்களாக இருக்கலாம் ஆனால் வெளியில் சொல்லாமலும் இருக்கலாம் இல்லையா. சிலருக்கு வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாது என்றிருக்கலாம். இப்படியும் தோன்றுகிறது மதுரை..
கீதா
/ஸ்டேட்டஸ் போடுபவர்களில், அல்லது போடாதவர்களில் பலரும் உதவுபவர்களாக இருக்கலாம் ஆனால் வெளியில் சொல்லாமலும் இருக்கலாம் இல்லையா. சிலருக்கு வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாது என்றிருக்கலாம்.//
Deleteநீங்கள் சொல்வது முற்றிலும் சரி, நானும் இப்படித்தான் என் வருமானத்திற்கு அதிகமாக செய்துவிட்டேன் இப்போதுதான் நான் நோ சொல்ல ஆரம்பித்து இருக்கின்றேன் அமெரிக்காவில் வாழ்வதால் எல்லோரும் கேட்கிறார்கள் பலருக்கும் தெரியவில்லை எங்களுக்கு இங்கும் வெளியே சொல்ல முடியாத படி பல செலவுகள் இருக்கின்றன என்பது
ஆனால் இருந்தாலும் பலர் கஷ்டப்படும் சமயத்தில் நாம் பலருக்கு உதவி செய்தாலும் நாம் சமைப்பதை அல்லது முக்கிய பொருட்களை வாங்குவதை ஸ்டேடஸாக இப்போதைக்கு போட வேண்டாம் காரணம் கஷ்டப்படும் நம் நண்பர்க்ளுக்கு அது வருத்ததை தருமல்லவா
இதன் முட்டாள்தனம் இந்த வார இறுதியில் தெரியும்... என்னவொரு கொடுமை...
ReplyDeleteதிருமணத்திற்கு , நகை, புடவை வாங்க கூட்டம்.
ReplyDeleteஎன் கணவரின் தம்பி மகன் திருமணம் ஒத்தி வைக்கபட்டுள்ளது. இன்று நடந்து இருக்கவேண்டிய திருமணம்.
சென்னையில் உறவினர் வீடுகளில் உணவு சமைத்து கொடுக்கிறார்கள். சில இளைஞ்ர்கள் உணவை வாங்கி சென்று கொரோனாவில் வீட்டில் சமைக்க முடியாமல் இருக்கும் முதியவர்கள், தனிமையில் இருப்பவர்களுக்கு கொண்டுபோய் கொடுக்கிறார்கள். முடியாத உறவினர்கள் ஒவ்வொரு வீடுகளிலும் வந்து இருக்கிறார்கள். (என் தங்கை வீட்டில் பொருளாதாரத்தில் கஷ்டபடும் உறவினர் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார்) ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
உறவினர்கள் கோபித்து கொள்வார்கள் என்று விழாக்கள், இறப்பு வீடுகளுக்கு சென்று கொரோனா பெற்று வந்த உறவினர்கள் இருக்கிறார்கள்.
ஊரடங்கில் ஏழைகள் பாடு கஷ்டம்.
என்ன சொல்வது ! மக்கள் கஷ்டம் தீர வேண்டும்.
வேதனையான நிகழ்வுகள். வெளியில் உலவும் மக்கள் - கொள்ளையடித்த வியாபாரிகள் என நிறைய கதைகள் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். நேற்று சென்னையில் பீன்ஸ் விலை ஒரு கிலோ 300 ரூபாய்!, திருச்சியில் 200 ரூபாய். தலைநகரில் முழு ஊரடங்கு இருந்த போது கூட காய்கறிக் கடைகள் குடியிருப்புப் பகுதியில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை போடுவார்கள் - இவ்வளவு விலை கேட்கவில்லை. எப்போதும் போலவே இருந்தது.
ReplyDeleteஅத்தியாவசியத் தேவையாக, உடை, மது போன்றவற்றை நினைத்து சுற்றியவர்களை என்ன சொல்ல!
எங்கள் உறவு வட்டத்தில் திருமணம் உட்பட இரண்டு நிகழ்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் எங்கள் அண்ணன் மகன் நிச்சயதார்த்தம், திருமணத்தை ஒத்தி வைத்திருக்கிறோம். ஓரிருவர் ஒதுங்கி இருந்து பாதுகாப்பு பார்க்க, நிறையபேர் சுற்றி வந்து நோயைப் பரப்ப பெருமுயற்சி எடுப்பது குறித்து என்ன சொல்ல...
ReplyDelete'Every action has an equal and opposite reaction'- என்பது கூடிய விரைவில் மீண்டும் நிரூபிக்கப்படும். சிறந்த சிந்தனை பதிவு.
ReplyDeleteஜவுளிக் கடைக்கு வந்த கூட்டம் எல்லாம் கல்யாணத்திற்கு நகை வாங்க புடவை வாங்க என்று வந்தவர்கள் என்று முட்டுக் கொடுத்து ஒரு பதிவு ஒன்றும் பார்த்தேன் ,தாம் செய்யும் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் மனிதர்கள் இருக்கும் வரை இந்த நிலைமை மாறாது
ReplyDelete