Sunday, March 28, 2021

 

@avargal unmaigal

மனச்சோர்வு கேலிக்குரிய விஷயமல்ல

இது ஒரு நபரை ஒரு எக்ஸ்ட்ரீம் லெவலுக்குக் கொண்டு செல்லச் செய்யலாம் .ஏன் அது சில நேரங்களில் அது உயிருக்கு ஆபத்தானது மற்றும் தற்கொலை செய்து கொள்ளவும் செய்யும்

யாரவது ஒரு நபர் இங்கே உதவி கேட்கும்போது முடிந்தால் அவர்களை அணுகி அவர்களின் வலியைக் குறைக்க உதவுங்கள். அட்லீஸ்ட் நாம் செய்யக்கூடியது காது கொடுத்துக் கேட்பதுதான், உடனே எந்த முடிவிற்கும் வந்து தீர்ப்பளித்து மட்டும் விடாதீர்கள்

தயவுசெய்து, மனச்சோர்வு பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாவிட்டால் அதிலிருந்து விலகி இருங்கள் அதைத் தவிர்த்துவிட்டு தவறான மேற்கோள்களைச் சொல்லி கருத்துகளைப் பகிராதீர்கள் அது அவர்களை மேலும் மனச்சோர்வுடைய செய்துவிடும். அதுமட்டுமல்ல கடவுளிடம் சரணடையுங்கள். ஆன்மிகம் உதவுகிறது என்று மொட்டையாக மேம்போக்காகச் சொல்வதை நிறுத்துங்கள்.மேலும் அதிகம் யோசிக்காதீர்கள், ஒவர் ஆக்ட் பண்ணாதீர்கள் என்று சொல்லுவதையும் நிறுத்துங்கள். அப்படி நீங்கள் சொல்வீர்கள் என்றால் நீங்களும் மனநிலை சிகிச்சை பெற வேண்டியவர்களில் ஒருவரே .

 
உங்களுக்குத் தெரியாது, நீங்கள் உதிர்க்கும் வார்த்தைகள் ஒருவருக்குள் எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தும் என்று .அது அவர்களை மனரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ பாதிக்கும் . உங்கள் ஒரு சொல் அல்லது செயல் ஒருவரின் முழு வாழ்க்கையையும் பாதிக்கும். உங்களிடம் சொல்ல விரும்பாத ஒன்றை மற்றவர்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டாம். தயவுசெய்து உங்கள் வார்த்தைகளைப் புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுக்கவும்

ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் உடல் ஆரோக்கியத்தைப் போலவே மன ஆரோக்கியமும் முக்கியமானது. சரியான மன ஆரோக்கியம் இல்லாமல் ஒருவர் திருப்திகரமாக எதையும் செய்ய முடியாது. கவலை மற்றும் சங்கடமான யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.சிக்கல்கள் மற்றும் தடைகள் நிறைந்த அவரவரது சொந்த உலகில் எல்லோரும் தொலைந்து போகிறார்கள்.

நம் சமுதாயத்தில், மனச்சோர்வு இல்லை என்று கருதப்படுகிறது. மனச் சோர்வு உள்ளவர்கள் மருத்துவர்களைப் பார்த்தால் அவர்களைப் பைத்தியம் என்று முத்திரை குத்தும் வழக்கம் நம் நாட்டு மக்களிடையே இருக்கிறது.


மனச்சோர்வாகிறார்கள் என்று கூறும் நபர்களை அவர்கள் கத்தியால் குத்தி கிளறுவது போலக் கிளறிவிடுகிறார்கள். இப்படி ஆத்திரமூட்டல் மற்றும் தவறான நடத்தை ஆகியவை மனச்சோர்வடைந்த ஆத்மாக்களின் கவலைகள் அதிகரிக்க வழிவகுக்கிறது. அவர்களுக்கு உங்கள் அறிவில்லா நாகரிகமற்ற வார்த்தைகள் மற்றும் நீண்ட உபதேச விரிவுரைகள் தேவையில்லை, ஆனால் உங்கள் ஆதரவும் அன்பும் மட்டும்தான் தேவை. அன்பைத் தவிர மனச்சோர்வுக்கு எந்தச் சிகிச்சையும் இல்லை. கவலை மற்றும் ஆர்வமுள்ள மக்களுடன் தயவுசெய்து அன்பாக நடந்துகொள்வதற்கு நாம் காசு பணம் எதுவும் செலவழிக்கத் தேவை இல்லை, ஆனால் நமது அன்பு அவர்களுக்கு நிறைய அர்த்தம் தரும்.. உங்களுடன் பேசும்போது அவர்கள் உந்துதல் மற்றும் மகிழ்ச்சியாக உணர்வார்கள். நாம் அவர்களுக்கு மனித வடிவத்தில் ஒரு தேவதையாகிவிடுவோம். ஆகவே, அவர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாததால் எல்லோரிடமும் கருணை காட்டுவோம்.((அமெரிக்காவில் இந்த ஜெனரேஷன் குழந்தைகள் எளிதில் மனச்சோர்வு அடைந்துவிடுகிறார்கள் அதனால் அவர்கள் உடனே டாக்டரை பார்த்து அதற்கான சிகிச்சைகள் எடுத்துக் கொள்கிறார்கள் எனக்குத் தெரிந்த பல குழந்தைகள் நாம் தினசரி சத்து மாத்திரைகள் சாப்பிடுவது போல இதற்கென இருக்கும் மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். பலர் தேர்வு எழுதப் போகும் போது இந்த மாதிரியான மாத்திரைகளை டாக்டர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்கிறார்கள் அப்படிச் செய்வதை யாரும் இங்கே தவறாக எடுத்துக் கொள்வதில்லை. காய்ச்சல் ஜலதோஷத்திற்கு மாத்திரை எடுத்துக் கொள்வது போலத்தான் இதற்கும் எடுத்துக் கொள்கிறார்கள் ஆனால் இந்தியாவில் இதற்கு நேர்மாறாக இருக்கிறது )


சோகமாக இருப்பதற்கும் மனச்சோர்வுக்கும் வித்தியாசம் உள்ளது. ஃபீலிங் டவுன் வாழ்க்கையின் ஒரு பகுதி. சோகமான மற்றும் வருத்தமளிக்கும் நிகழ்வுகள் அனைவருக்கும்தான் நிகழ்கின்றன. ஆனால் அடிக்கடி ஃபீலிங் டவுன் மற்றும் எதிலும் நம்பிக்கை அற்றவராக இருந்தால் நீங்கள் மனச் சோர்வு அடைந்தவராக இருப்பீர்கள் நீங்கள் எதையாவது மீண்டும் மீண்டும் சிந்திக்கத் தொடங்கும் போதெல்லாம் நீங்கள் மனச்சோர்வையும் பதட்டத்தையும் அடைவீர்கள்.

முக்கியமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உங்கள் துக்கங்களும் துயரங்களும் கூட நிரந்தரம் இல்லை என்பதுதான் பிறகு நீங்கள் ஏன் மனச்சோர்வடைகிறீர்கள்? கடந்த காலத்திற்குப் பூட்டுப் போடுங்கள் அல்லது புதைத்துவிடுங்கள், இன்றைய தினத்தைப் பற்றி மட்டும் சிந்தியுங்கள். வாழ்க்கையை அனுபவிக்கவும்! உங்களைப் பிஸியாக வைத்திருங்கள், உங்கள் எந்தவொரு பிரச்சனையையும் சிக்கலையும் பற்றி உங்கள் மனதைத் தீவிரமாக அறிய முயல வேண்டாம்

நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், நீங்கள் கீழாக உணரக்கூடிய விஷயங்களைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்துங்கள். உங்கள் உள்ளார்ந்த மகிழ்ச்சிக்கு ஒரு காரணத்தைக் கொடுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள், அவநம்பிக்கையாளராக வேண்டாம், . ஒரு நாள் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

ஆன்க்சைட்டி, டிப்ரஷன்

4 comments:

  1. உளவியல்சார்ந்த மிகவும் அருமையான, இக்காலத்திற்கேற்ற பதிவு.

    ReplyDelete
  2. அஆவ்  சூப்பர் பதிவு .அதுவும் இப்போதைய காலகட்டத்துக்கு  உகந்த பதிவு .மெண்டல் ஹெல்த் முதலுதவியில் முதலில்செய்வதே //listen non judgmental //  .நல்ல பதிவு .

    ReplyDelete
  3. அருமையான பதிவு. எனக்காக எழுத பட்டது போல் உள்ளது. மனசோர்வு வரும் போது படித்து சோர்வை விரட்டலாம்.
    எனக்கு மிகவும் உதவும்.
    மகிழ்ச்சிக்கு ஒரு காரணம் கொடுக்க வேண்டும்.
    நம்பிக்கையோடு இருக்கிறேன்.
    நன்றி.
    .

    ReplyDelete
  4. அவரவர் மனச்சோர்விலிருந்து அவரவரே மீள்வது நலம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.