Sunday, March 21, 2021

#avargal unmaigal


"இது" அழகான விஷயமாக இருக்கலாம், ஆனால்?

"திருமணம்". இது ஒரு அழகான விஷயமாக இருக்கலாம், ஆனால் அது எப்போதும் ப்ர்பெக்ட்டாக இருக்கும் என்று  கருத முடியாது . திருமணமான ஒவ்வொரு நபருக்கும் தெரியும், உறவுகளில் ஏற்ற இறக்கம் உண்டு என்று . சில நேரங்களில், வாழ்க்கையின் உச்சத்தின் போதோ அல்லது தாழ்வின்போதோ நடக்கும் சம்பவங்கள் மிகவும்   வேடிக்கையானவை.  அதைப் பார்த்து நம்மால்  சிரிக்க இயலவில்லை என்றால், நாம்  அழமட்டும் செய்யலாம்

கணவன் மனைவிக்கு இடையே சண்டை வாக்குவாதத்திற்குப் பிறகு ஒரு இறுக்கமான அமைதி சில மணிநேரங்களோ அல்லது சில நாட்களோ நிலவும் இதை நாம் பலரும் அறிந்திருப்போம். அந்த இறுக்கமான அமைதி இருவரில் ஒருவரின் பேச்சால் ஊதிய பலூனில்  ஊசியால் குத்தியதைப் போல ஒன்றுமில்லாமல் போய்விடும். ஏற்ற இறக்கம் வாழ்க்கையில் இருக்கத்தான் செய்யும்  அதுதான் மணவாழ்க்கை என்பது...

 


இந்த நாட்களில், திருமணத்தைப் பற்றிய அல்லது திருமண வாழ்க்கை பற்றிய வேடிக்கையான நகைச்சுவைகள்  சம்பவங்கள் அனைத்தும் சமுக இணைய தளங்களில் பரவி  மீம்ஸ் வடிவில் காணப்படுகின்றன  . ஆனால் பழைய கால  ஆனந்தவிகடன் குமுதல் கல்கி வார இதழ்களிலும் காதல் மற்றும் திருமணத்தைப் பற்றி  எழுதிய துணுக்குகள் சிறுகதைகள் இன்றும் நமக்கு  பெருங்களிப்புடையதாகவே இருக்கிறது


ஆனால் இப்போது அந்த மாதிரியான வேடிக்கையான சம்பவங்களை கேலிச்சித்திரங்களை வார இதழ் மற்றும் நாளிதழ்களில் காணமுடிவதில்லை ஆனால் அவைகள் இன்று சமுக இணையதளங்களில் மீம்ஸ்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றன


இங்கே அது போன்ற சில துணுக்குக்களை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்


இந்த படம் எங்களது வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டிய மாதிரி இருக்கிறது

@avargal unmaigal




சில சமயங்களில் உறவுகளுக்கிடையே இருக்கும் காதலைவிட ஸ்னாக்ஸ்ஸே மிக முக்கியம் வகிக்கின்றன.


@avargal unmaigal


என்னங்க மருத்துவரிடம் போனீங்களே என்ன சொன்னார் அவர்?
அவர் உன்னை ஒழித்து கட்ட சொல்லுகிறார்
உண்மையாகவாக அவர் அப்படிச் சொன்னார்?
ஹீஹீ அவர் அப்படி நேரடியாகச் சொல்லை மறைமுகமாக உன் மன அழுத்தத்தை ஒழிச்சுக் கட்டு என்று சொன்னார்.

 
#avargal unmaigal



என்னங்க டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பி இருக்கீங்க ஒன்றுமே புரியவில்லைங்க
அடியே அது நான் உனக்கு அனுப்பிய அடல்ட் ஒன்லி ஜோக்
அப்படியா அதைக் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க
ஐந்து நிமிடம் அதை விளக்கிச் சொன்னது மனைவி விழுந்து விழுந்து சிரித்தாள்

அதன் பின் அந்த ஜோக்கை தன் தோழிகளுக்கு எல்லாம் அனுப்பினாள்

அதன் பின் ஈவினிங்க் வீட்டிற்கு வந்த கணவனிடம் இந்த மாதிரி கெட்ட நகைச்சுவைகளை எனக்கு அனுப்பாதீங்க. இதுபோன்றவைகள் எனக்குப் பிடிக்காது சொன்னாள்...

   
@avargal unmaigal



கணவர் :  புடலங்காய் கூட்டுப் பிரமாதம்.. ஆஹா  உருளைக்கிழங்கு பொரியல் அற்புதம் வாவ் முள்ளங்கி சாம்பார் அடடே டேஸ்ட்ன்னா டேஸ்டுதான்

மனைவி : என்னங்க இருந்தாலும் உங்கள் சமையல் பற்றி இவ்வளவு தற்பெருமை கூடாதுங்க பேசாமல் சத்தம் இல்லாமல் சாப்பிடுங்க

 
@avargal unmaigal



மனைவி பூ கேட்டாள்... ஒரு பூந்தொட்டியே வாங்கி கொடுத்தேன்...

தாகமாயிருக்கு தண்ணீர் வேண்டுமெனக் கேட்டாள்... ஆப்பிள் ஜூஸ் வாங்கிக் கொடுத்தேன்...

தோசை வாங்கி தாங்கன்னு கேட்டாள்...பிரியாணியே வாங்கிக் கொடுத்தேன்...

கடைசியா ஒன்னு கேட்டா பாருங்க!!!!

“நான் ஒன்னு கேட்டா நீங்க வேற ஒன்னு வாங்கித் தரீங்களே உங்களுக்குக் காது செவுடான்னு” கேட்டாள்


 
@avargal unmaigal

#avargal unmaigal



விகடனில் வந்த 'அந்த்" கால ஜோக்ஸ்

 

@avargal unmaigal









அன்புடன்
மதுரைத்தமிழன்


3 comments:

  1. துணுக்குகள் அனைத்தும் ரசித்தேன்.

    ReplyDelete
  2. எல்லா ஜோக்ஸுமே  சிரிக்க, ரசிக்க வைத்தன.  அடல்ட்ஸ் ஒன்லி ஜோக் மட்டும் புரியவில்லை!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.