Wednesday, March 3, 2021

 மூளையைக் கசக்கி யோசித்தால்....?

avargal unmaigal





மனைவியால் கண்டுபிடிக்க முடியாமல் மிகத் திறமையாகத் தொடர்ந்து தவறுகள் செய்யும் ஆண்கள்தான் சிறந்த கணவர் என்று பாராட்டப்படுகிறார்கள்

இருட்டில் இருக்கும் பொருட்கள் கண்களுக்குத் தெரியும் முன்பே கால் முட்டிகளுக்குத் தெரிந்துவிடுகிறது..இரவில் பாத்ருமிற்கு லைட் போடாமல் போனது போது உதித்த ஞானதேயம்

 
சிறந்த தமிழ்க் கவிதை என்பது எழுதியவனுக்கும் அதில் தாம் என்ன சொல்ல வருகிறோம் என்பது புரியாது படிப்பவனுக்கும் அதில் என்ன சொல்லி இருக்கிறது என்பது புரியக் கூடாது.. அவ்வளவுதான்


ஆண்களுக்கு முடியலேனா போய் விழுகிற இடமும், மடியும் பெண்கள் மடிதான் இதில் நாங்கள் அம்மா மனைவி, சின்னவீடு பெரிய வீடு என்று எல்லாம் வித்தியாசம் பார்ப்பதில்லை



நாம் பல விஷயங்களை மிகச் சரியாகச் செய்யும் போது அதைச் சுட்டிக்காட்டிப் பாராட்ட ஒருவர் கூட முன் வருவதில்லை ஆனால் ஒரு விஷயத்தில் தவறும் போது உடனே பலர் ஈசலாக வந்து அதைச் சுட்டிக்காட்டி மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்


தமிழகத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றால் அங்குள்ள பாத்ருமிற்கு மட்டும் செல்லவே கூடாது காரணம் அங்கே வழுக்கி கை கால்களை உடைத்துக் கொண்டவர்கள் தான் அதிகம்

உங்கள் எதிரிகள் நீங்கள் என்ன செய்யக்கூடாது பேசக் கூடாது என்று நினைக்கிறார்களோ அதைமட்டும் தொடர்ந்து செய்து கொண்டுவாருங்கள் அதுதான் அவர்களை வெல்லும் வழி

வயது வந்தவர்களுக்காக மட்டும் என்ற தகவல்களைச் சிறுவர்களுக்குத் தெரியாமல் பெரியவர்களும் பெரியவர்களுக்குத் தெரியாமல் சிறியவர்களும் பார்த்து மகிழ்வார்கள்

நாட்டுக்கு நல்லது செய்கிறேன் என்று அடிக்கடி சொல்லும் ஆட்கள் நிச்சயம் அதைச் செய்யவே மாட்டார்கள். காரணம் அவர்கள் சொல்வதில் உண்மை இருந்தால் சொல்லுவதற்கு முன்பே செய்து காண்பித்து இருப்பார் அல்லவா?


அதிக விளம்பரம் செய்து கொள்ளும் தலைவர்கள் மக்களுக்கு ஏதும் செய்து இருக்கமாட்டார்கள் .மக்களுக்கு நல்லது செய்த தலைவர்களுக்கு விளம்பரங்கள் தேவை இல்லை . அவர்கள் செய்த நல்லவைகளே விளம்பரமாக இருக்கும்


இந்தியாவில் குடும்ப ஆட்சி முறையை ஒழிப்போம் என்று சொல்லுபவர்கள் யாரு என்று பார்த்தால் அது சர்வாதிகார கும்பல்களாக(குடும்பங்கள்)த்தான் இருக்கும்,


அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. // மனைவியால் கண்டுபிடிக்க முடியாமல் //

    பொய்களை நம்பும் உலகம் இது!


    அவ்வளவு நல்ல கவிதைகளை நான் எழுதுவதில்லை!

    தவறு செய்தாலாவது கூட நிற்க ஒரு கூட்டம் இருக்கே!

    போலீஸ் ஸ்டேஷன் பாத்ரூம் -  ஹா...  ஹா...  ஹா....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கவிதைகளில் நீங்கள் சொல்வது புரிகிறது சிலர் வார்த்தை அலங்காரித்தில் ஈடுபட்டு பெரிய கவிதை எழுதிய போல எழுது போஸ்ட் பண்ணும் போது மனதில் தோன்றியது

      Delete
  2. ரசனையான சிந்தனைகள்.

    ReplyDelete
    Replies


    1. பாராட்டிற்கு நன்றி

      Delete
  3. இந்த அட்வென்ச்சர்ல்லாம் தேவையா ட்ரூத் உங்களுக்கு :) இருட்டில் லைட் போடாம போனா கண்ணு தெரிய நீங்க என்ன பூனையா :)))))))
    எதிரிகளை வெல்ல ஐடியாவுக்கு நன்றி :) தவறு செய்வோமானு எப்படா தவறு செய்வாங்கன்னு ஒரு கூட்டமே ரெடியா இருப்பாய்ங்க  திட்டு கொடுக்க  அவங்க சான்சை மிஸ் பணிடகூடான்னு 

    ReplyDelete
    Replies
    1. அதுதானே, ட்றுத் நீங்க என்ன பூனையா?:)) ஹா ஹா ஹா:)) இல்ல வவ்வாலோ?:))

      Delete
    2. அட்வஞ்சர் எல்லாம் இல்லை தூங்குவது மிக குறைந்த நேரமே அந்த நேரத்தில் பாத்ரூம் போக நேர்ந்தால் லைட் போட மாட்டேன் லைட் வெளிச்சத்தில் தூக்கம் கலைந்துவிடும்

      Delete
    3. நான் பூனையும் அல்ல வவ்வாளும் அல்ல நான் ஒரு குரங்கு

      Delete
  4. சட்டியில் இருப்பதுதானே அகபையில் வரும்:)).. மூளையைக் கசக்கினாலும் இருந்தால்தானே வரும்:))..

    என்ன இப்போ கொஞ்சக் காலமாகவே ஒரே புலம்பலாக இருக்குதே:))

    ReplyDelete
    Replies

    1. மற்றவர்களின் புலம்பல்களை அதாவது பேஸ்புக்கில் நான் தொடரும் பெண்களின் புலம்பல்களை படித்ததால் மனதில் தோன்றியவைகள்தான் இவைகள்.

      இப்போது நான் வலைத்தளத்திற்கு என்று அதிகம் எழுத மெனக்கெடுவதில்லை. பேஸ்புக்கில் நான் பதிவதை இங்கு சேமிக்கின்றேன் அவ்வளவுதான்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.