Sunday, December 22, 2019

இந்தியா போகும் பாதை ஆபத்தானது... புரிந்தால் சரி.

Siva Nadarajah


யார் இந்த Tim Draper ? அவருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் என்ன தொடர்பு ... நான் ஏன் கடுப்பா இருக்கேன்....

Tim Draper. அமெரிக்காவின் சிலிகான் வேலே பக்கம் பிரபலமான பெயர். இந்தியரான சமீர் பாட்டியா என்ற ஒருவரால் தொடங்கப்பட்ட hotmail கம்பெனியை அடையாளம் கண்டு அதில் முதலில் முதலீடு செய்து பின்னர் அந்த ஹாட்மெயில் கம்பெனியை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 400 மில்லியன் டாலருக்கு விற்றவர். அதில் பணம் பார்த்த சமீர் பின்னர் ஐஸ்வரியா ராயை திருமணம் முடிக்க இருந்து பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர்.


அதன் பின்னர் Tim Draper அடையாளம் கண்டு முதலீடு செய்த கம்பெனிகள் ஏராளம். Baidu, Skype, Tesla, SpaceX, SolarCity, Ring , Twitter, DocuSign, Coinbase, Ancestry.com, Twitch, பல பல.. எல்லாம் ஜாக்பாட் அவருக்கு..

இப்போது அவர் இந்தியாவில் முதலீடு செய்கிறார். இந்தியாவின் பல ஸ்டார்ட் up களை தேடி கண்டு பிடித்தவர் அவர். எங்கள் ஜோகோ கம்பெனியின் அடுத்த கட்ட முதலீட்டுக்கு அவரை அணுக இருந்தோம்..

பெரிய குண்டு...

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டு இருக்கும் சட்டம் தனக்கு உடன்பாடில்லை இனிமேல் இந்தியாவில் தான் முதலீடு செய்ய போவதில்லை என கூறியுள்ளார். தாமும் யோசிப்பதாக ஏனைய venture capital கம்பெனிகளும் சொல்லி இருக்கின்றன.

அவர் செய்யாவிட்டால் என்ன அமெரிக்கா பணம் நமக்கு எதற்கு என்று கேட்பீர்கள்..இதுவரை இந்தியாவில் உள்ள முதலீட்டாளர்கள் ஸ்டார்ட் up கம்பெனிகளில் முதலீடு செய்தது மிக மிக குறைவு.. இந்தியாவின் அண்மைய ஸ்டார்ட் up வெற்றிகளுக்கு பின்னால் Tim Draper போன்ற நிறைய அமெரிக்கர்கள்தான் இருக்கிறார்கள். இந்திய பணக்காரர்கள் கடனுக்கு வேண்டுமானால் பணம் கொடுப்பார்கள். .கம்பனிகள் சரியாக போகாவிட்டால் திரும்ப பணம் கேட்ப்பார்கள்..

ஸ்டார்ட் up முதலீடு அப்படியல்ல.. வென்றால் லாபம் இல்லாவிட்டால் எல்லாம் போய்விடும்.. அந்த பக்குவம் இன்னும் இந்தியாவில் வரவில்லை..

இந்தியா போகும் பாதை ஆபத்தானது... புரிந்தால் சரி.

இந்த பதிவை எழுதியவர்  Siva Nadarajah


__________________________________________________________________________________________________
7 கால்பந்து மைதானம் அளவிற்கு  கட்டப்படும் இந்தியாவின் முதல் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் தடுப்பு முகாம் 
 India's 1st Illegal Immigrant Detention Camp Size Of 7 Football Fields   

__________________________________________________________________________________________________ 

அன்றே சொன்னார் அண்ணா

 __________________________________________________________________________________________________
அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.