Wednesday, December 18, 2019

என்னத்த சொல்ல.... உண்மை இதுதானுங்க


மோடியை  நேரில் கண்டால் சிரிப்பது எடப்பாடி பன்னீர் செல்வம் மட்டுமல்ல ஸ்டாலினும்தான் காரணம் என்ன தெரியுமா? சினம் காட்ட முடியாதவரிடம் சிரித்துவிட்டுதான் செல்ல வேண்டி இருக்கிறது  என்று உண்மை அவர்களுக்கு நன்றாக புரிந்து இருக்கிறது என்பதால்தான்

கிறிஸ்துவர்களை பாவாடை அது இது என்று கேலி செய்யும் அமெரிக்க வாழ் சங்கிகள்/பக்தால்ஸ் வீட்டில் கிறிஸ்துமஸ்  மரமும் அலங்கார மின் விளக்குகளும் ஜொலிக்கிறது....அதுமட்டுமல்ல அவர்கள் வீட்டு குழந்தைகளுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா வந்து கிப்ட் தருவார். பதிலுக்கு மோடி தாத்தா தீபாவளிக்கு என்ன தந்தார் என்று மட்டும்  கேட்டுவிடாதீர்கள் நண்பர்களே#என்னத்த சொல்ல


வயதாக ஆக  முடி நரைத்து வெள்ளையாக மாறுவது இயற்கைதான் ஆனால் அமெரிக்க வாழ் இந்திய பெண்களின் முடிகள் மட்டும் நரைத்து வெள்ளையாக மாறுவதற்கு பதிலாக மருதாணிக் கலராக மாறுவதுவது மட்டும் அதிசயமாக இருக்கிறது #Fact verified


மஹாபலிபுரத்தில் #மோடி #குப்பை அள்ளுவது போல போட்ட #டிராமாவிற்கு #பக்தால்ஸுக்கள் மூட்டு கொடுத்து சொன்னாங்க அதன் மூலம் நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியை அதன் மூலம் சொல்ல வருகிறார் என்று அது போல மோடி #படிக்கட்டில் விழுந்ததன் மூலம் நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்தி சொல்ல வருகிறாரா என்று இரண்டு நாளா வெயிடிங்க பண்ணி பார்க்கிறேன் ஆனால் முட்டு கொடுக்கும் பக்தால்ஸ் இதுக்கு இன்னும் விளக்கம் கொடுக்காமல இருக்கிறார்கள். ஹும்ம் என்னத்த சொல்ல


நாட்டின் பிரதமராக #மோடி இருக்கலாம் ஆனால் இந்த டெர்மில் இந்தியாவை ஆண்டு கொண்டு இருப்பது என்னவோ #அமித்ஷாதான் இதை கூட புரிந்து கொள்ளாத அளவிற்குத்தா #இந்தியர்களின் #அறிவு இருக்கிறது. இதுக்கு மேல என்னத்த சொல்லுறது



அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. என்னத்த சொல்ல.... ஹூம் காலவினைதான்.

    ReplyDelete
  2. மோடி ஹிட்லர் என்றால் அமித் ஷா கோயபல்ஸ்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.