கொஞ்சம் யோசிக்கையில்.........
அந்த காலத்தில் எந்தவித பொருட்களை வாங்கினாலும் அதில் எப்போது பிரச்சனை வந்தாலும் அதை சரி செய்து பயன்படுத்துவார்கள் அது போலத்தான் தன்னுடன் வாழும் வாழ்க்கை துணையால் பிரச்சனைகள் ஏற்பாட்டாலும் அதை சரி செய்து வாழ்வார்கள் ஆனால் இந்த காலத்தில் வாங்கும் பொருட்களில் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை தூக்கி ஏறிந்து விட்டு புது பொருட்களை வாங்குகிறார்கள் இதேதான் வாழ்க்கை துணை விஷயத்திலும் நடக்கிறது

குரு, சனி, ராகு, கேதுப் பெயர்ச்சியெல்லாம் மோடி மஸ்தான் மாதிரிதான் அது இந்தியாவில் வசிப்பவர்களை மட்டும் அதிகமாக கலவரப்படுத்தும் அவைகள் மேலைநாடுகளுக்கு வந்தால் மோடி மாதிரி அடங்கிப் போகிறது
மோடி சொல்லும் புதிய இந்தியா பிறக்கிறதோ இல்லையோ ஆனால் புதிய ஆண்டுகள் பிறந்து கொண்டே இருக்கிறது ஆனால் மோடியின் பல்லவிதான் உடைந்த போன ரிக்கார்ட் பிளேயர் போல பாடிக் கொண்டே அதே இடத்தில் இருக்கிறது
***"நாம் பேசும் போது நமக்கு தெரிந்ததை மட்டுமே மீண்டும் மீண்டும் பேசுகிறோம் ஆனால் நாம் கேட்க ஆரம்பிக்க போது நமக்கு தெரியாத பல விஷயங்களை கேட்டு கற்றுக் கொள்கிறோம்'*** ஆனால் இதில் மோடி மட்டுமல்ல நம் நாட்டில் உள்ள தலைவர்களின் பேச்சு விதிவிலக்கு அவர்கள் பேச்சை கேட்பதை விட கேட்காமல் இருப்பதே மிக நலம். மனநலம் குறைந்தவர்கள் பேச்சைக்கூட கேட்டுவிடலாம் ஆனால் இவர்களின் பேச்சுக்கள் அதைவிட கேவலமானது
வெற்றி பெறுபவர்களுக்கும் தோல்வி அடைபவர்களுக்கும் ஒரு ஆண்டில் கிடைக்கும் நாட்கள் 365 மட்டுமே ஒருத்தருக்கு அதிகமாகவும் மற்றவர்க்கு குறைந்தும் இருப்பதில்லை
வாழ்க்கையில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும் சில சமயங்களில் அது வலி மிக்கதாக வேதனைகள் நிறைந்தாகவும் சில சமயங்களில் அழகாகவும் ஆனந்தமாகவும் இருக்கும் ஆனால் பலசமயங்களில் இரண்டும் கலந்தும் வரும் அதனால் எல்லாவற்ரையும் ஏற்று வாழக் கற்றுக் கொள்வோம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
உங்களுக்கு உங்கள் மனைவி மேல் வெறுப்பு உள்ளது சரிதனா ?
ReplyDeleteஅட உங்களுக்கு எம்புட்டு அறிவு சார் இதை எப்படி கண்டுபிடிச்சீங்க...
Delete