Saturday, December 14, 2019

ஆச்சியின் எண்ணத்தில்.......படித்ததில் பிடித்தது



என்னதான் முன்னேற்றம், நவ நாகரீகம் எல்லாம் வந்தாலும் 96 படம் பார்த்து எனக்கு எந்த மலரும் நினைவும் கிடையாது என்று சொல்லாட்டாலும் நல்லா படம் உருவாக்கிருங்கனு சொல்ல கூட தைரியம் இல்லை .உங்க வீட்லையானு கேக்கப்பிடாது...

சொந்த பந்தம் கிழம்ஸ்லாம் மாமா ,முறைமாமா,ஆனால் முறை பெண்களை பற்றின உந்துதலை கவனப்படுத்தினாலும் , உதைத்துவிட்டாலும் , திரைப்படம் ஒன்றில் வரும் முறைப்பொண்ணு,முறைமாமா பற்றின தாக்கம் நிச்சியம் வலுப்பெற்ற காலங்கள் கழிந்து இப்போ நாமே ஆளுக்காளு விதவிதமா புகைப்படமும் காணொளிகளும் எடுத்து உலக நட்புகளுக்கும் தொடர்புகளுக்கும் அனுப்பும் காலமிதில் அந்த ஸ்பரிசமும் காதலும் என்னவென்று தரம் அறியாத தலைமுறைகளுடன் எதையும் செய்யத் துணியும் மனித மிருகங்களுடனும் வாழ்கின்றோம்,மாறுகின்றோம்.சூழ்நிலைகளை மூலதனமாக்குகின்றோம்.

சிறார்களின் ஆபாச படம் அனுப்பியவர்களையும் பார்ப்பவர்களையும் கைது செய்து வருவது ஒரு துளி உதாரணம்.

காதல் என்று சொன்னால் கூட அசிங்கம் அல்லது ஏன் பிடிச்சிருக்குனு சொல்ல காரணம் கூட தெரியாத புரியாத காலத்தில் ஒரு பார்வைக்கும் அல்லது பேச ஒரு நிமிடம் கிடைக்காதா என்று ஏங்கிய காலங்கள் கழிந்து எல்லா தொடர்புகளும் எளிமையாக இன்றைய காலத்தில் காதல் என்ற பெயர் வைத்து நடக்கும் காலத்தின் கோலங்களும் அவலங்களும் அன்பின் ,நேசத்தின் அருமை தெரியாத ஜென்மங்களே என்று நொந்துகொள்வது மட்டுமே சாத்தியம்.

காதல் தேடுகிறது காதலர்களை என்றுதான் சொல்லவேண்டும்.

சரி ஆரம்பித்த இடத்திற்கு வருவோம்.குடும்பம் இப்படிலாம் நடத்தினாங்களாம் என்று நிருபிக்க பல திரைப்படங்கள் உதாரணமாக இருப்பது போல இப்படிலாம் நேச உணர்வு இருந்ததாம் என்று உதாரணம் நிருபிக்க 96 திரைப்படம்.

ஆனால் இப்போது ஒரு முன்னேற்றம் என்னதான் படம் பார்த்தாலும் இயக்குனர் நல்லா படம் எடுத்திருக்கார்ல,இசை நல்லாருக்குல,நல்லா நடிச்சிருக்காங்கல்ல என்று திரைப்படம் உருவாக்கினவர்களையும் அவர்களின் உழைப்பையும் ஒரு நொடி நினைத்து பார்க்கிறோம்...

எழுதியவர் Aatchi Aatchi

அன்புடன்
மதுரைத்தமிழன்


14 Dec 2019

1 comments:

  1. என் பதிவு ,படித்ததில் பிடித்ததாக அமைந்ததில் நெகிழ்வான நன்றிகள்.நீண்ட காலங்கள் கழித்து பிறந்த வீட்டிற்கு வந்த உணர்வு வலைப்பூ பக்கம் வந்ததில் உணர்கின்றேன்.நன்றிகள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.